என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பா.ம.க.ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.

    சிவகாசி

    சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து சிறப்புரை யாற்றினார். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,

    இனி வரும் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் பா.ம.க. போட்டியிடும். 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 போட்டி தேர்வு மையங்கள் செயல்படுகிறது
    • அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப் பிக்காத மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் 52 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-

    இந்திய அளவில் தமிழ் நாட்டில் தான் 52 விழுக்காடு மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற னர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் சதவீதத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

    அதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்க ளுக்கு பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளில் சேருவ தற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்களில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கனவே அருப்புக் கோட்டை, சிவகாசி கோட்டங்களில் நடத்தப்பட்டு, தற்போது சாத்தூர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

    விருதுநகர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தொடர்ந்து வருகிறது. அதுபோல் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையில் சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் செயலாற்றிவருகிறார்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தைகள், பெண்களுக்கான பிரச்சினை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண் கள் குழந்தைகள் காண வில்லை, போக் சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரு கிறது.

    இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் திருச் சுழி காவல் துணை கண் காணிப்பாளர் அறிவுரை யின் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீர்மானிக்கப்பட்டு அ.முக் குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை, நேர்த்தியாயிருப்பு இடையப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த கிராம மக்களிடம் அ.முக்குளம் காவல்நிலைய சார்பு ஆய் வாளர் அசோக்குமார் நேரில் சென்று பொது மக்கள் மற்றும் காவல்துறை யினர் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும், பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்தும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் குழந்தைகளி டம் பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாயி னும் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரி விக்கலாம் எனவும், வேலைக்கு சென்று வரும் பெண்கள் சந்திக்கும் பிரச் சினைகளை பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணான 181 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி னார்.

    மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தா லோ, சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற் பனை செய்தாலோ உடனடி யாக இதுகுறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேலும் இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின் போது சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஜேசீஸ் விங் சார்பில் பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் மீ.குருசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகை–யில், மாணவர்களுக்கு சேமிப்பு பற்றிய நன்மைகளையும், அதனால் அடையும் எதிர்கால பலன்கள் குறித் தும் விரிவாக எடுத்துரைத் தார்.

    இதில் சிவகாசி பட்டயக் கணக்காளரும், ஜே.சி.ஐ. செயலாளருமான ஜே.சி.அருள்மொழி வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பங்குச்சந்தை முதலீடு, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், இந்திய பங்குச் சந்தை–யின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். ேமலும் மாணவர்களின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், உரிய பதிலும் அளித்தார்.

    முன்னதாக ஜே.சி.சி.கிரிதரன் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை பேராசிரியருமான முனை–வர் அ.பாபு பிராங்கிளின் நன்றி கூறி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தி–ருந்தார். இதில் 240 வணிகவி–யல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
    • விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ெரயில்வே கேட் மூடப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

    எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை பரிசீலித்து ெரயில்வே கேட் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

    இந்த சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனையூர் கிராமங்களில் 2818 ச.மீ. நிலங்களை கையகப்படுத்தும் பணி வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் நிலம் மற்றும் கட்டுமானங்களுக் குரிய இழப்பீட்டு தொகையை தொடர்புடைய நில உடைமையாளர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரூ.5 கோடியே 60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நில உடைமையாளர்க ளுக்கான இழப்பீட்டு தொகை இம்மாத இறுதிக் குள் உரிய நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப் படும் எனவும், விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

    • வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுதொட்டியக் குளத்தை சேர்ந்தவர் கணேசன்(32), கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கவிதா. கணேசனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை. இதனால் கணேசனுக்கும், அவரது தந்தை சின்னணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்றும் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கவிதா அவர்களை விலக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் கணேசன் ரெயில்வே கேட் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர்பாண்டியன், சவுதியில் வேலை பார்கி றார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் செல்வ சுபத்ரா.

    இவர் தனது உறவினரான லாரி டிரைவர் அய்யப்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அய்யப்பன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது அய்யப்பனின் தாய் குருவம்மாள், தந்தை பாண்டி ஆகியோர் செல்வ சுபத்ராவிடம் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி யிடம் அவர் தெரிவித்தார். அவர் தனது உறவினரை அனுப்பி செல்வசுபத்ராவை அழைத்து வருமாறு கூறினார்.

    உறவினர் செல்வ சுபத்ராவின் வீட்டிற்கு சென்றபோது வீடு உள்பக்க மாக பூட்டி கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது செல்வசுபத்ரா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(57). இவரது கணவர் மாரிமுத்துவை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் ‘தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் பள்ளிவாசல் தெரு வைச்சேர்ந்தவர் ஜலாலு தீன் (வயது50). விவசாயி யான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

    மாடுகளுக்கு தேவையான வைக்கோல் கட்டுகளை வாங்கி வீட்டின் பின்புறமாக அடுக்கி வைத்துள்ளார்.இந்த நிலையில் சம்பவத் தன்று காலை ஜலாலுதீன் தனது மாடுகளை மேய்ச்ச லுக்காக என்.முக்குளம் பகுதிக்கு அைழத்து சென்றார். அவரது மனைவி சூரத்கனியும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜலாலு தீன் திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. அங்கு சென்றபோது வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து கொண்டி ருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த ஜலாலுதீன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வைக்கோல் படப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் பலத்த காற்று வீசியதால் வைக்கோல் கட்டுகள் மேலும் வேகமாக எரிந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வ ரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அதிர்ஷ்டவச மாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    • கல்லூரி மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகி விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அரசப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது 17 வயது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் காளியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலையரசி. இவர் கணவரை பிரிந்து மகள் சுவேதா என்ற சுந்தரேஸ்வரியுடன்(20) வசித்து வருகிறார். சுந்தரேஸ்வரி சிவகாசி அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் கலையரசி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள நாசர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகள் பேச்சி(21). என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் ஆதித்தநேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ஆண்டத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தி–யப்பட்ட மறவர் பொது சபை உள்ளது. இந்த பொது சபையில் கோவிலின் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கும்பாபி–ஷேகம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடை–பெற்றது.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல், பாண்டியன் என்ற சிபிராஜ் பாண்டி, தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து வந்ததாக கூறப்படு–கிறது.

    இதை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) என்பவர் கண்டித்துள்ளார். அப்பொழுது ராஜவேல் பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக பாலசுப்பிரமணியனை வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக் டர் சார்லஸ் மூன்று பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்ற–னர்.

    • தாயை கத்திரிக்கோலால் மகன் சரமாரியாக குத்தினார்.
    • தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19).

    இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயகுமார் நண்பரை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தாய் அபிராமியை சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த அபிராமி கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது.
    • திருச்சுழி அருகே பதட்டம்-போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறங்கி முத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழாவில் பச்சை இலந்தை முள் மீது நடந்து பக்தர்கள் அருள் வாக்கு கூறுவது சிறப்பு.

    கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் சாமி கும்பி டுவது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கோவில் வழிபாடு விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் அடிக்கடி மோதி கொண்டனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சமூகத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து ஒரு தரப்பினர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்க ளுக்கு சொந்தமான இடத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் தொடங்கினர்.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலலை சுற்றி போலீசார் பாது காப்பு பணியில் நிறுத்தப் பட்டனர். நேற்று (7-ந்தேதி) கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால் கடைசி ே நரத்தில் சட்டம்-ஒழுங்கு பாது காப்பை காரணம் காட்டி போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    போலீசார் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்த அவர்கள் அருகில் உள்ள விநாயகர் கோவி லுக்கு சென்று தாங்கள் கட்டியிருந்த விரத கயிறை கழட்டினர். கும்பாபி ஷேகம் நடத்த முடியாத தால் ஒரு தரப்பினர் கவலையுடன் வீட்டிற்கு சென்றனர். கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்த தால் தொப்பா லக்கரை கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி யது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தர வின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.
    • புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேருபவரின் எண்ணிக்கை 3-ல் 1 பங்காக உள்ளது. இதில் உயர்கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், உயர்கல்விக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 52 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

    கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. அந்த கல்வியோடு, சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் கண்காணிப்பது, அது குறித்து ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருப்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பதுதான் கல்லூரி.

    அந்த கல்வியை முறையாக பயில்வதன் மூலம் ஒரு முழுமைபெற்ற, சமூகத்தில் ஒரு பொறுப்பு மிக்க பெண்ணாக உருமாற்றம் பெற்று, உங்களை காத்துக் கொள்வதற்கும், சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், உங்களை சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கும் உங்கள் கல்வி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) சிக்கந்தர் பீவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×