என் மலர்
விருதுநகர்
- முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
- அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அதிக வயது முதிர்ந்தோர் களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமரு மிடத்திற்குச் சென்று, மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி னார்கள்.
இக்கூட்டத்தில், காரியா பட்டி வட்டம், வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொ.மாயகிருஷ்ணன் என்பவரின் வாரிசு தாரர்களான அழகம்மாள், ராமமூர்த்தி மற்றும் கற்பகவள்ளி ஆகியோர்க ளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கால்நடை வளர்ப்போருக்கு உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
- விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக கருதப்படுகிறது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வருமா னத்தை இரட்டிப் பாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் புதிய கால்நடைகளை கொள் முதல் செய்த பின்னர், உரிய அளவிலான தீவனம் மற்றும் தாது உப்புகள் வழங்கப் படாததினால் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விகிதாச்சார முறையில் உரிய நேரத்தில் உரிய அளவில் தீவனம் முறைகளை கடைபிடியாமை ஆகும்.
விவசாயிகளின் இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கால்நடைகளின் பராமரிப்புக்கென அனைத்து வங்கி கிளைகள் மூலம் உழவர் கடன் அட்டை கடந்த மே 1-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ14 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்குரிய வட்டி விகிதம் 4 சதவீதமாகும். ஒரு பசு மாடு என்பது 10 ஆடுகளுக்கும், 100 கோழிகளுக்கும் சமமாகும். எனவே கறவை மாடு, ஆடு மற்றும் கோழிப்பண்ணைகளின் பண்ணையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து கால்நடை பராமரிப்பு செலவினமாக குறைந்த வட்டி விகிததத்தில் வழங்கப்படும் தொகையினை பெற்று பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
வேளாண்மைத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற்றிருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் கால்நடை கொட்டகை நில ஆவண நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மூலம் முன்னோடி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் விண்ணப்பதாரது வங்கி கிளைகளுக்கு அனுப்பி பரிசீலிக்கப்பட்டு உழவர் கடன் அட்டையுடன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்துள்ளனர்.
- ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 7 ஏக்கர் 9 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் எங்களது நிலத்தை கிரையம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு மறுத்து விட்டோம்.
இந்த நிலையில் தெலுங்கானா அரசு பதிவுத்துறையில் இருந்து எங்களது நில கிரையம் தொடர்பாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் தெலுங்கானா சென்று கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.
இந்த நிலையில் மீண்டும் எனது சகோதரர் பெயரில் போலி பத்திரம் தயாரித்து தெலுங்கானாவில் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த தினேஷ்லிங்கத்திடம் கேட்ட போது, நிலத்தை கிரையம் செய்து தருமாறும், இல்லாவிடில் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதற்கு ரமேஷ் உள்பட 4 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர்.
அதன்பின் இளம்பெண் தனது வீட்டிற்கு செல்லாமல் காப்பகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் காப்பகத்தில் இருந்த போது காதலன் தனது வீட்டில் யாரும் இல்லை என அழைத்தார்.
இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மூடப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்த பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
- பக்தர்களின் வாகனங்கள் நான்கு ரத வீதிகளிலும் நிறுத்தப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு தென்திருப்பதி என்று போற்றப்படும் திரு–வண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், செண் பகத்தோப்பு காட்ட–ழகர் கோவில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள் ளிட்ட பல்வேறு ஆன்மிக ஸ்தலங்கள் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தினமும் ஆயிரக்க–ணக்கான சுற்றுலா பயணி–கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் நான்கு ரத வீதிகளிலும் நிறுத்தப்படுகிறது. இதற்கி–டையே கோவில் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தேரடி பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அருகாமையிலும், வடக்கு மாட வீதியில் உள்ள யானை மண்டபம் அருகிலும் சுகா–தார வளாகங்கள் செயல் பட்டு வந்தது. இந்த இரு சுகாதார வளாகங்களும் தற்போது பயன்பாட்டின்றி மூடப்பட் டுள்ளது. ஆடிப்பூர கொட் டகை அருகே தனியார் கல்வி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. நான்கு ரத வீதிகள் மற்றும் தேரடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால் வெளியூர்க–ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிகுந்த சிரமத் திற்கு ஆளாகு–கின்றனர். இதேபோல் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே 15-வது நிதிக்குழு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறக்கப்ப–டாமல் உள்ளது. அவசர அவசியம் கருதி உடனடியாக திறக்க வேண்டும். தற்போது குற்றால சீசன் தொடங்கி உள்ளதால் தினசரி ஆயிரக்க–ணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஸ்ரீவில் லிபுத்தூர் வழியாக செல் கின்றனர். இந்த வாரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லி–புத்தூர் ஆடிப்பூர திருவிழா–வும் தொடங்குகிறது.
ஆடிப்பூர திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர் கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரு–வார்கள். இந்நிலையில் ஆடிப்பூர திருவிழா தொடங் கும் முன்பாக சுகாதார வளாகங் களை சீரமைக்க நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பா.ம.க.ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.
சிவகாசி
சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து சிறப்புரை யாற்றினார். விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
இனி வரும் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் பா.ம.க. போட்டியிடும். 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்றார்.
- விருதுநகர் மாவட்டத்தில் 2 போட்டி தேர்வு மையங்கள் செயல்படுகிறது
- அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விருதுநகர்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப் பிக்காத மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் 52 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலெக்டர் கூறியதாவது:-
இந்திய அளவில் தமிழ் நாட்டில் தான் 52 விழுக்காடு மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு செல்கின்ற னர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவி களின் சதவீதத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
அதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்க ளுக்கு பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளில் சேருவ தற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்களில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கனவே அருப்புக் கோட்டை, சிவகாசி கோட்டங்களில் நடத்தப்பட்டு, தற்போது சாத்தூர் கோட்டத்தில் நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தொடர்ந்து வருகிறது. அதுபோல் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையில் சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் செயலாற்றிவருகிறார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்களின் முயற்சியினால் 2 போட்டித் தேர்வு மையங்கள் செயல் பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
- குழந்தைகள், பெண்களுக்கான பிரச்சினை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண் கள் குழந்தைகள் காண வில்லை, போக் சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரு கிறது.
இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் திருச் சுழி காவல் துணை கண் காணிப்பாளர் அறிவுரை யின் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீர்மானிக்கப்பட்டு அ.முக் குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை, நேர்த்தியாயிருப்பு இடையப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த கிராம மக்களிடம் அ.முக்குளம் காவல்நிலைய சார்பு ஆய் வாளர் அசோக்குமார் நேரில் சென்று பொது மக்கள் மற்றும் காவல்துறை யினர் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும், பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்தும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் குழந்தைகளி டம் பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதுவாயி னும் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரி விக்கலாம் எனவும், வேலைக்கு சென்று வரும் பெண்கள் சந்திக்கும் பிரச் சினைகளை பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணான 181 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி னார்.
மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தா லோ, சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற் பனை செய்தாலோ உடனடி யாக இதுகுறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின் போது சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தாயில்பட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஜேசீஸ் விங் சார்பில் பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் மீ.குருசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகை–யில், மாணவர்களுக்கு சேமிப்பு பற்றிய நன்மைகளையும், அதனால் அடையும் எதிர்கால பலன்கள் குறித் தும் விரிவாக எடுத்துரைத் தார்.
இதில் சிவகாசி பட்டயக் கணக்காளரும், ஜே.சி.ஐ. செயலாளருமான ஜே.சி.அருள்மொழி வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பங்குச்சந்தை முதலீடு, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், இந்திய பங்குச் சந்தை–யின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். ேமலும் மாணவர்களின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், உரிய பதிலும் அளித்தார்.
முன்னதாக ஜே.சி.சி.கிரிதரன் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை பேராசிரியருமான முனை–வர் அ.பாபு பிராங்கிளின் நன்றி கூறி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தி–ருந்தார். இதில் 240 வணிகவி–யல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
- விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ெரயில்வே கேட் மூடப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை பரிசீலித்து ெரயில்வே கேட் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
இந்த சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனையூர் கிராமங்களில் 2818 ச.மீ. நிலங்களை கையகப்படுத்தும் பணி வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் நிலம் மற்றும் கட்டுமானங்களுக் குரிய இழப்பீட்டு தொகையை தொடர்புடைய நில உடைமையாளர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரூ.5 கோடியே 60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நில உடைமையாளர்க ளுக்கான இழப்பீட்டு தொகை இம்மாத இறுதிக் குள் உரிய நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப் படும் எனவும், விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.
- வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுதொட்டியக் குளத்தை சேர்ந்தவர் கணேசன்(32), கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கவிதா. கணேசனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை. இதனால் கணேசனுக்கும், அவரது தந்தை சின்னணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கவிதா அவர்களை விலக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் கணேசன் ரெயில்வே கேட் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர்பாண்டியன், சவுதியில் வேலை பார்கி றார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் செல்வ சுபத்ரா.
இவர் தனது உறவினரான லாரி டிரைவர் அய்யப்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அய்யப்பன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது அய்யப்பனின் தாய் குருவம்மாள், தந்தை பாண்டி ஆகியோர் செல்வ சுபத்ராவிடம் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி யிடம் அவர் தெரிவித்தார். அவர் தனது உறவினரை அனுப்பி செல்வசுபத்ராவை அழைத்து வருமாறு கூறினார்.
உறவினர் செல்வ சுபத்ராவின் வீட்டிற்கு சென்றபோது வீடு உள்பக்க மாக பூட்டி கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது செல்வசுபத்ரா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(57). இவரது கணவர் மாரிமுத்துவை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் ‘தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் பள்ளிவாசல் தெரு வைச்சேர்ந்தவர் ஜலாலு தீன் (வயது50). விவசாயி யான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
மாடுகளுக்கு தேவையான வைக்கோல் கட்டுகளை வாங்கி வீட்டின் பின்புறமாக அடுக்கி வைத்துள்ளார்.இந்த நிலையில் சம்பவத் தன்று காலை ஜலாலுதீன் தனது மாடுகளை மேய்ச்ச லுக்காக என்.முக்குளம் பகுதிக்கு அைழத்து சென்றார். அவரது மனைவி சூரத்கனியும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜலாலு தீன் திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. அங்கு சென்றபோது வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து கொண்டி ருந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த ஜலாலுதீன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வைக்கோல் படப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் பலத்த காற்று வீசியதால் வைக்கோல் கட்டுகள் மேலும் வேகமாக எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வ ரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அதிர்ஷ்டவச மாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.






