என் மலர்
விருதுநகர்
- 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னகொல்லபட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் 587 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 309 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவ ழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. எனவே, 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று கால் நடைத்துறை, மருத்து வத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்டங்கள் பொது மக்களுக்காக செயல்படுத் தப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தனித்துறை கலெக்டர் அனிதா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், சாத்தூர் ஊராட்சி ஒன்றிக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் மாயமாகினர்.
- வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
திருத்தங்கல் என்.ஜி.ஓ. நகர் கண்ணகி காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38) இவர் கியாஸ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்தார். சம்பவத் தன்று வேலைக்கு சென்ற சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் முத்தால்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் சம்பவத் தன்று வீட்டில் இருந்து திடீ ரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.வெம்பக்கோட்டை அருகே உள்ள ஆ.லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் ராஜ லட்சுமி. இவரது மகள் மாலதி (வயது 21). என்ஜினீய ரிங் பட்டதாரியான இவர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விஜய கரிசகுளம் பகுதி சேர்ந்த பிளஸ்-2 மாணவி யும் மாயமானார் இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதியின் அழகை காண தடையை மீறி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் உள்ள நூற்பாலையில் கேரள மாநிலம் கேனல் இடுக்கி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 25) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரும் தென்கரை கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.
ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்று விட வீட்டில் தனியாக இருந்த மாணவி கிருஷ்ணமூர்த்தியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பின் 2 பேரும் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அப்போது மாணவிக்கு கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்.
- விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
- பெண்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என துப்புரவு பணியாளர்கள் அறிவித்தி ருந்தனர். அதன்படி இன்று காலை பெண்கள் உட்பட 63 துப்புரவு பணியாளர்கள் விருதுநகர் நகராட்சி அலு வலகம் முன்பு திரண்டனர்.
ஒப்பந்த முறை துப்புரவு பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. சி.ஐ.டி. யு. நகர அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயபாண்டி முன்னிலை வகித்தார்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்கவிழா நடந்தது.
- ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன் பெற்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் நியோ ஐடோலா-2023 தொடக்கவிழா நடை–பெற்றது. விழாவுக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இதையடுத்து மாணவ இலக்கிய மன்ற தலைவர், துணைத்தலைவர், செயலா–ளர் மற்றும் அலுவ–லக உறுப் பினர்கள் ஆகியோர் நிய–மனம் செய்யப்பட்டனர். பின்னர் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பெமினா வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் முழுமையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி நிலை என்ற தலைப்பில் ஜெய்ப்பூர் காம்காம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன ஆங்கில பேராசிரியர் முனை–வர் ஷாலினி சிறப்பு–ரையாற்றினார்.
அப்போது அவர் பேசு–கையில், நேர்மறை எண்ணத் தின் பயனை விவரித்தார். மேலும் வாழ்வின் ஒவ் வொரு நிகழ்வும் நேர்ம–றை–யான விளைவு–களையே ஏற்படுத்தும் என்ற ஏற்றமிகு கருத்தினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கே.பி.ஸ்வப்னா வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை என்.நாகஜோதி நன்றி கூறி–னார்.
இந்த இலக்கிய மன்றத் தின் தொடர் நிகழ்ச்சியாக மாணவர்களின் தனித்திற–மையை வெளிப்படுத்தும் விதமாக திறனறி விழா நடைபெற்றது. மாணவர்கள் கவிதை, நாடகம், ஆடல், பாடல், மவுன நாடகம் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன்பெற்றனர்.
- திருச்சுழியில் ஆதார் சேவைகளை பெற முடியாமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வளாகத் தில் ஆதார் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதார் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்கவும், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த ஆதார் சேவை மையத்தில் நாள்தோறும் முதலில் வரும் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்து வரும் பொதுமக்களுக்கு ஆதார் சேவை கிடைப்பது இல்லை. இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் மறுநாள் வரும் சூழல் ஏற்படுகிறது. மேலும் பண விரயமும், நேரமும் வீணாகிறது.
வழக்கமாக திருச்சுழி தாலுகா அலுவலக இ- சேவை மையத்திற்கு நாள் தோறும் 50-க்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளும் ஆதார் கார்டுகளை விண் ணப்பிக்க அதிகமானோர் இ சேவை மையத்திற்கு வருகின்றனர்.
ஆனால் திருச்சுழி இ-சேவை மையத்தில் பணி யாளர்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் உடனடியாக ஆதார் சேவைகளை தர முடிவதில்லை. இதனால் ஆதார் விண்ணப் பிக்க வருவோர் பல நாட்கள் காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஆதார் சேவை மையங்களுக்கு போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதுடன், மிகவும் பின்தங்கிய பகுதிகளான திருச்சுழி மற்றும் நரிக்குடி யூனியனில் முக்கிய பகுதிகளில் வசிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இ -சேவை மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி இ-சேவை மையங்களுக்கு ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சேவைகளை மீண்டும் வழங்குவதுடன் ஆதார் எடுக்கும் வகையில் புதிய ஆதார் சேவை மையங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மென மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழா யிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தினையும், ஏழாயிரம் பண்ணையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, சங்கரபாண்டியபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், வட்டாட்சியர் ரங்க நாதன், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அய்யனார் (வயது30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சவுந்தர்யா (23) என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் காரியாபட்டிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். காரியாபட்டி-இலுப்பை குளம் ரோட்டில் உள்ள எஸ்.மறைக்குளம் தொங்குட்டி ஊரணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் அய்யனார் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்ய னார் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
- குடிநீர் வாரியம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
- பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷின் சார்பில், கிராம குடிநீர் மற்றும் சுகா தாரம் மேலாண்மை உறுப் பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
குடிநீர் வடிகால் வாரியம் விருதுநகர் கோட்ட நிர்வாக பொறியாளர் கென் னடி, உதவி நிர்வாக பொறி யாளர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சிவ குமார், வட்டார வளர்ச்சி அலு வலர் மீனாட்சி ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தண்ணீரின் தரம், பாதுகாப்பு, சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங் களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட் டது. பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
- தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சூடுமண் கண்டெடுக்கப்பட்டது.
- தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முதற் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால பொருட்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.
இந்த அகழாய்வில் இது வரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல் விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண் ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல் கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனை யப்பட்டுள்ள இப்பொம்மை தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெரு கூட்டுகிறது.
கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள் ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப் பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15 செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்க பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற் றுக்காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.






