என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்-தனியார் ஊழியர் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் புஷ்பகலா (வயது 23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று வேல்முரு கன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத் தில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான புஷ்பகலாவை தேடி வருகின்றனர்.
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் முத்துசங்க ரன் (36). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடன் கொடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கணவரை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி முத்துமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணன்கோவில் உதயா நகரை சேர்ந்தவர் நஜூமுதீன். இவரது மகன் பசீல்ரகீம். இவர் வெளியூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் நஜூமுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சுழி அருகே சொத்து பிரச்சினையில் மகன், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார்.
- இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலப்பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது63). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முத்தம் மாளின் கணவர் முத்துச் சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
அதன் பின்னர் தனது தோட்டத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். மேலப்பாறைக் குளத்தில் வசிக்கும் மகள்கள் முரு கேஸ்வரி, முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.
இந்த நிலையில் அவர் தோட்டத்தில் தனியாக இருந்தபோது மகன் முத்துக் குமார் வந்தார். அவர் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கூறி தகராறு செய்தார். மேலும் மகள்கள் வீட்டிற்கு முத்தம் மாள் செல்லக்கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தார்.
ஆனால் அதற்கு சம்மதிக் காமல் முத்தம்மாள் பதில் வாக்குவாதம் செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதில் காய மடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு தாமரை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது24). பெற்றோருடன் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணா புரம் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலாஜி பொருட்களை எடுத்து வைத்து கடையை பூட்டி கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாயார் செல்போனில் அழைத்தார். பதற்றமாக பேசிய அவர் பாலாஜியை உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு அழைத்து துண்டித்து விட்டார்.
இதனால் வேகமாக கடையை பூட்டிவிட்டு பாலாஜி தனது வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலுக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்து குரங்கு குல்லா அணிந்த மர்ம நபர்கள் வேகமாக வெளியே வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் பாலாஜியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இதில் பாலாஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பாலாஜி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டதாகவும், வேறு வழியின்றி 6 ½ பவுன் தாலி செயினை கொடுத்து விட்டதாகவும் அவரது தாயார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.
அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.
ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.
இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, தேசிய மாணவர் படைக்கான மாணவர் சேர்க்கை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியரும், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளருமான கணேஷ்பாபு மற்றும் விருதுநகர் பயிற்சியகத்தை சேர்ந்த பெருமாள், பிரபு ஆகியோர் இணைந்து சேர்க்கை முகாமை நடத்தினர். மேலும் உடல்நிலை குறித்த புரிதல் வேண்டும் என்றும், இன்றைய பெருந்தொற்று காலத்தில் உடல்நிலை பேணிக்காத்தலின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்த சேர்க்கை முகாமில் மாணவர்களுக்கு 1200 மீ ஓட்டமும், மாணவிகளுக்கு 800 மீ ஓட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தண்டால் மற்றும் உடல் தகுதி சோதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர். இறுதியில் 30 மாணவர்களும், 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முடிவில் ஏஞ்சல் ராணி நன்றி கூறினார்.
- சிவகாசி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது.
- இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் ஜெம்நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் அண்ணாநகர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டார். 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட, மனைவியும் வீட்டை கூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மறுமணம் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடிக்கொண்டு தப்பினர்.
வியாபாரம் முடித்து மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- திருச்சுழி தொகுதியில் ரூ. 10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- காரியாபட்டி ஒன்றியத்திலும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் குச்சம் பட்டி புதூரில் நெடுஞ் சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 18 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் இருந்து குச்சம்பட்டி புதூர் குண்டாற்றில் 10 தூண்களுடன் கூடிய சுமார் 9 கண்கள் கொண்ட புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதே போன்று திருச்சுழி ஒன்றியம் வடக்கு நத்தம் சாலையில் ரூ.2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.மேலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பையூர் கிராமத்தில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப் பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அரும்பணி யையும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடிக் கல் நாட்டி தொடங்கி வைத் தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை யும், மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின் கீழ் பயன் பெறும் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.
காரியாபட்டி ஒன்றியத் தில் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணி களையும் தொடங்கி வைத் தார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமை தாங்கினார். நெடுஞ்சா லைத்துறை கோட்டப்பொ றியாளர் முரளிதர், அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கணேசன், நெடுஞ்சா லைத்துறை ஊரக சாலை உதவி பொறியாளர் வெங்கடேஷ், திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுத் தம்பி, நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்போஸ்த் தேவர், தங்க தமிழ்வாணன், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருேக அம்மன் கோவில்களில் தங்கத்தாலி-வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
- இதுகுறித்து கீழராஜாகுலராமன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடகரை தேவி ஆற்றங்கரை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட இந்த கோவி லில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறும் அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரி சனம் செய்வார்கள். மற்ற நாட்களில் கோவில் பூட்டி யே கிடக்கும்.
இந்த நிலையில் சம்பவத் தன்று நிர்வாகி பொன்னை யா கோவிலை திறந்தார். அப்போது கோவில் சன்னதி யில் பொருட்கள் சிதறி கிடந்தன. காளியம்மன், மாரியம்மனுக்கு அணிவிக் கப்பட்டு இருந்த 2 தங்கதாலி கள், பூஜை அறையில் இருந்த 80 கிராம் வெள்ளி பொருட் கள் ஆகியவை திருடு போயி ருந்தன. இதன் மதிப்பு ரூ. 26 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து பொன்னையா கீழராஜாகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் லவ குசா வழக்குபதிவு செய்து கோவிலில் நகை, வெள்ளிப் பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
- இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை உச்சியில் 3 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக வனத்துறை சார்பில் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. முதல் அமாவாசை வருகிற 17-ந்தேதியும், 2-வது அமாவாசை ஆகஸ்ட் 16-ந்தேதியும் வருகிறது.
இந்த நிலையில் ஆடி அமாவாசை மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
சனிப்பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுவதாலும், அதுமட்டுமின்றி ஆடி அமாவாசையை முன்னிட்டும் இன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை விருதுநகர்-மதுரை மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்திருந்தன.
மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மலை அடிவாரம் மற்றும் மலையேறும் பாதைகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்திலும், மலை மேல் உள்ள கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஆடி அமாவாசைக்கு 2 நாட்களே இருப்பதால் இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
+2
- நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார்.
விருதுநகர்:
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா அவரது பிறந்த ஊரான விருதுநகரில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நினைவு இல்லத்திற்கு சென்ற கலெக்டர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூற்பு வேள்வி நடத்தினர். அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது என்றார். விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜ் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கமிஷனர் லீனா சைமன், துணைத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
- கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
- நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற நாளை (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
- கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
- அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து பாலசரஸ்வதி தனது தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் சரவணன் சமரசம் பேசி மனைவியை அழைத்து சென்றார். இதற்கிடையில் மீண்டும், சரவணன் மனைவி யிடம் கூடுதலாக வரதட்சணை கேட்க பாலசரஸ்வதி தனது பெற்றோர் வீட்டில் இருந்து 14 பவுன் நகையை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் சரவணன் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, மாமனார் குமார் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் பாலசரஸ்வதிக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் சரவணன், அவரது பெற்றோர் குமார்- ராேஜஸ்வரி, உறவினர் பொன்மாரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.






