காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு

காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர்.
காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு
Published on

சிவகாசி

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, தேசிய மாணவர் படைக்கான மாணவர் சேர்க்கை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியரும், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளருமான கணேஷ்பாபு மற்றும் விருதுநகர் பயிற்சியகத்தை சேர்ந்த பெருமாள், பிரபு ஆகியோர் இணைந்து சேர்க்கை முகாமை நடத்தினர். மேலும் உடல்நிலை குறித்த புரிதல் வேண்டும் என்றும், இன்றைய பெருந்தொற்று காலத்தில் உடல்நிலை பேணிக்காத்தலின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த சேர்க்கை முகாமில் மாணவர்களுக்கு 1200 மீ ஓட்டமும், மாணவிகளுக்கு 800 மீ ஓட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தண்டால் மற்றும் உடல் தகுதி சோதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர். இறுதியில் 30 மாணவர்களும், 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முடிவில் ஏஞ்சல் ராணி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com