சொத்து பிரச்சினையில் தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகன்

திருச்சுழி அருகே சொத்து பிரச்சினையில் மகன், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து பிரச்சினையில் தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகன்
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலப்பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது63). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முத்தம் மாளின் கணவர் முத்துச் சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.

அதன் பின்னர் தனது தோட்டத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். மேலப்பாறைக் குளத்தில் வசிக்கும் மகள்கள் முரு கேஸ்வரி, முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.

இந்த நிலையில் அவர் தோட்டத்தில் தனியாக இருந்தபோது மகன் முத்துக் குமார் வந்தார். அவர் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கூறி தகராறு செய்தார். மேலும் மகள்கள் வீட்டிற்கு முத்தம் மாள் செல்லக்கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தார்.

ஆனால் அதற்கு சம்மதிக் காமல் முத்தம்மாள் பதில் வாக்குவாதம் செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

இதில் காய மடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com