search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel seizure"

    • வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு தாமரை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது24). பெற்றோருடன் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணா புரம் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலாஜி பொருட்களை எடுத்து வைத்து கடையை பூட்டி கொண்டிருந்தார்.

    அப்போது அவரது தாயார் செல்போனில் அழைத்தார். பதற்றமாக பேசிய அவர் பாலாஜியை உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு அழைத்து துண்டித்து விட்டார்.

    இதனால் வேகமாக கடையை பூட்டிவிட்டு பாலாஜி தனது வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலுக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்து குரங்கு குல்லா அணிந்த மர்ம நபர்கள் வேகமாக வெளியே வந்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் பாலாஜியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இதில் பாலாஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பாலாஜி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டதாகவும், வேறு வழியின்றி 6 ½ பவுன் தாலி செயினை கொடுத்து விட்டதாகவும் அவரது தாயார் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கீதா (வயது 22). இவர் வேலைக்கு செல்வதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென்று கீதா கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.

    இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த கீதா, திருடன் திருடன் என கத்தியதால் அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சீர்காழி தாண்ராசன்குப்பம் சேர்ந்தராம்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1/2 பவுன் தங்கச்செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (38). இவர் தனது மகளுடன் ஜவுளி கடைக்கு சென்று விட்டு ராஜபாளையம் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பின்னால் வந்த ஒரு மர்ம நபர் மகள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.

    அப்போது அவர் சங்கிலியைப் பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி சென்றுவிட்டார்,
    • .சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே தென்குத்து புதுநகர் காலனி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி விருத்தாம்பாள் (70) கோவிந்தன் இறந்து விட்டார்.மூதாட்டி விருதாம்பாள் வீட்டில் தனியாக இருந்த போதுவாலிபர் ஒருவர் வந்தார். அவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி அவர் அணிந்திருந்த ஒரு ஜோடி தங்க மூக்குத்தியை கழட்டி கொடுங்கள் என ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து கொடுக்கின்றேன்.

    அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என வாங்கியுள்ளார். அந்த வாலிபர் நகையை பாக்கெட்டில் வைத்து கொண்டு அந்த பேப்பரில் 2சிறிய கற்களை வைத்து மடித்துக் கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து வருகின்றேன் என்று தான் வந்த இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு மூதாட்டி வீட்டின் உள்ளே சென்று பேப்பரை பிரித்து பார்த்துள்ளார். அதில் நகைகளுக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து உடனடி யாக திருடன் திருடன் என கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்ட நல்லூர் வடக்கு தெரு சாமிதுரை மகன் சரத்குமார்( 27 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×