search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel thief"

    • விவசாயி முத்துகிருஷ்ணன் எழுந்து வந்தார்.
    • 20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே திருப்பச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 63). விவசாயி. இவர் அதே கிராமத்தில் உள்ள விளைநிலங்களை பராமறித்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் முத்துகிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் யாரோ நுழைவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து விவசாயி முத்துகிருஷ்ணன் எழுந்து வந்தார். அப்போது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி முத்துகிருஷ்ணன் கூச்சலிட்டார். நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள் விவசாயியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து, 20 பவுன் நகையை கொள்ளையடித்து விவசாயியை தாக்கிவிட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவகாசி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் ஜெம்நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் அண்ணாநகர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டார். 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட, மனைவியும் வீட்டை கூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மறுமணம் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடிக்கொண்டு தப்பினர்.

    வியாபாரம் முடித்து மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.
    • அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.


    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்த ராயதுரை (வயது 56). விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு தனுசு (29) என்ற மகளும் பாபு என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முத்துலட்சுமி எழுந்து வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர், வீட்டின் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த தனுசு கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் தங்க சங்கிலியை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி‌ கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

    இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரவி வெளியே புறப்பட்டு சென்றார். ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

    ருக்மணி 3 பேரையும் இதுவரை பார்த்ததில்லை. இருப்பினும் வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார்.

    உறவினர்கள் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் திடீரென்று ருக்மணியை கத்தியை காட்டி மிரட்டி அவரது வாயில் துணியை வைத்து அடைத்து கையை துண்டால் கட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.

    இதை சற்றும் எதிர்பாராத ருக்மணி செய்வதறியாது திகைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ருக்மணி கட்டிப்போட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    உறவினர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×