விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

விவசாயி முத்துகிருஷ்ணன் எழுந்து வந்தார்.20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் அருகே திருப்பச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 63). விவசாயி. இவர் அதே கிராமத்தில் உள்ள விளைநிலங்களை பராமறித்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் முத்துகிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் யாரோ நுழைவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து விவசாயி முத்துகிருஷ்ணன் எழுந்து வந்தார். அப்போது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி முத்துகிருஷ்ணன் கூச்சலிட்டார். நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள் விவசாயியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து, 20 பவுன் நகையை கொள்ளையடித்து விவசாயியை தாக்கிவிட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com