search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mosquito infestation"

    • வாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பைகளால் கொசு தொல்லை அதிகமாகிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக செல்லவும் துப்புரவு பணிகளை செய்து பராமரிக்க வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் சுமார் 185 மீட்டர் தொலைவில் புதிய கழிவுநீர் வாறுகால் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஒருநாள் கூட வாறுகாலில் கழிவுநீர் செல்லாத நிலையில் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. ஒழுங்கற்ற முறையில் வாறுகால் அமைக்கப் பட்டுள்ளதால் கழிவுநீர் சீராக ஓடாமல் தேங்குகிறது. மேலும் குப்பைகளும் சேர்ந்து கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையும் அமைந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் கொசுக்கடியால் அவதிப் படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே நரிக்குடி வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கழிவுநீர் வாறுகால் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக செல்லவும் துப்புரவு பணிகளை செய்து பராமரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×