என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![பிரதோஷம், அமாவாசை சிறப்பு வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி பிரதோஷம், அமாவாசை சிறப்பு வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/11/1913424-sathuragiri-sundara-mahalingam-temple.webp)
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பிரதோஷம், அமாவாசை சிறப்பு வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி
By
மாலை மலர்11 July 2023 2:03 PM IST (Updated: 11 July 2023 2:30 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
Next Story
×
X