என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூடப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்த கோரிக்கை
    X

    செயல்படாமல் மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம்.

    மூடப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்த கோரிக்கை

    • மூடப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்த பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பக்தர்களின் வாகனங்கள் நான்கு ரத வீதிகளிலும் நிறுத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு தென்திருப்பதி என்று போற்றப்படும் திரு–வண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், செண் பகத்தோப்பு காட்ட–ழகர் கோவில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள் ளிட்ட பல்வேறு ஆன்மிக ஸ்தலங்கள் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தினமும் ஆயிரக்க–ணக்கான சுற்றுலா பயணி–கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் நான்கு ரத வீதிகளிலும் நிறுத்தப்படுகிறது. இதற்கி–டையே கோவில் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தேரடி பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அருகாமையிலும், வடக்கு மாட வீதியில் உள்ள யானை மண்டபம் அருகிலும் சுகா–தார வளாகங்கள் செயல் பட்டு வந்தது. இந்த இரு சுகாதார வளாகங்களும் தற்போது பயன்பாட்டின்றி மூடப்பட் டுள்ளது. ஆடிப்பூர கொட் டகை அருகே தனியார் கல்வி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. நான்கு ரத வீதிகள் மற்றும் தேரடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால் வெளியூர்க–ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிகுந்த சிரமத் திற்கு ஆளாகு–கின்றனர். இதேபோல் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே 15-வது நிதிக்குழு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறக்கப்ப–டாமல் உள்ளது. அவசர அவசியம் கருதி உடனடியாக திறக்க வேண்டும். தற்போது குற்றால சீசன் தொடங்கி உள்ளதால் தினசரி ஆயிரக்க–ணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஸ்ரீவில் லிபுத்தூர் வழியாக செல் கின்றனர். இந்த வாரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லி–புத்தூர் ஆடிப்பூர திருவிழா–வும் தொடங்குகிறது.

    ஆடிப்பூர திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர் கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரு–வார்கள். இந்நிலையில் ஆடிப்பூர திருவிழா தொடங் கும் முன்பாக சுகாதார வளாகங் களை சீரமைக்க நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×