என் மலர்
விருதுநகர்
- பெண்கள் தொழில் பயற்சி பெற்றால் குடும்ப பொருளாதாரம் உயரும் என விருதுநகர் கலெக்டர் பேசினார்.
- வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 4.0 தர தொழிற்நுட்ப மையத்தின் மூலம் செயல்படும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய 3 அரசினர் தொழிற் பயிற்சி நிலை யங்களிலும் 2023-ம் ஆண்டிற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது.
இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை அதிக ரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலை யத்தில் நமது சகோதரிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது.
இந்நிகழ்ச்சியில் நவீன தொழில் பிரிவுகளில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் 4.0 தர தொழில்நுட்ப மையங்களில் ஆய்வகங்கள், பணி மனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவி கள், அவர்களின் பெற்றோர் கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
தரமான கல்வியின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொழிற் பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பிற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பு களை காட்டிலும், தொழிற் பயிற்சி மையங்கள் தொழில் பயின்றோர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.
பெண்கள் தொழிற் பயிற்சி பயில்வதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று, தங்களுடைய பொருளா தாரத்தை உயர்த்துவதன் மூலம், தங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலியும், செப்பு நாணயங்களும் கிடைத்தன.
- செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள், ஆபரணங்கள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நேற்று ஒரு அகழாய்வு குழியை தோண்டியபோது, பழங்காலத்தில் பயன்படுத்திய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கத்தாலி கிடைத்தது. காண்பதற்கு வித்தியாசமானதாகவும், அதே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இந்த தாலி உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்டைய காலத்திலேயே ஆபரணங்களை நேர்த்தியாக வடிவமைப்பதில் நம் முன்னோர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதற்கு இந்த தாலியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினர்.
மதுரை நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் முத்துவீரநாயக்கர் வெளியிட்ட நாணயம், செஞ்சி நாயக்கர் நாணயம் உள்பட 4 செப்பு நாணயங்களும் அகழாய்வு குழிகளில் இருந்து கிடைத்துள்ளன. இந்த செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.
இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் 12 குழிகள் 15 அடி ஆழம் வரை முழுமையாக தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,480 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
- ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஒரேநாளில் 35 ஆயிரம் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 18 சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளன.மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
வருடந்தோறும் சதுரகிரியில் ஆடி அமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் இன்று வரை 6 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
முதல் நாளான 12-ம் தேதியில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் தங்கி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேி வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.
நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் சுந்தர மகாலிங்கம், சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் 18 சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுந்தர மகாலிங்க சுவாமி,சந்தன மகாலிங்க சுவாமி,சுந்தரமூர்த்தி சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நேற்று அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதையிலும், மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோப்புகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மலைக் கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சதுரகிரி வழிபாடு முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறையால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
நக்சல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. முருகன் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட நக்சலைட் தடுப்பு சிறப்பு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகளை கோயில்பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். வனத்துறை மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இறுதி நாளான இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.
- ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1055 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
- உயர்கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்பு கள் வாய்ப்புகள் குறித்து, அறிந்து பயன்பெற வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 11 ஒன்றியங்களை சேர்ந்த 1055 அரசு பள்ளி மாணவர் களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் வகையிலும், உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அருகிலுள்ள கல்லூரி களுக்கு அழைத்துச் செல் லும் பயணத்தை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக "நான் முதல்வன்" திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டு மென்ற நோக்கில், வழி காட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் முன் னோடி திட்டம் மற்றும் தமிழக முதல் அமைச்சர் கனவு திட்டமான நான் முதல்வன் நிகழ்வை வெற்றி கரமாக கொண்டு செல்லும் பொருட்டு, மாவட்ட நிர் வாகம் சார்பில் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயிலும் 1500 மாணவ- மாணவிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயன்பெற்றனர்.
இந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயிலும், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விருதுநகர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள தலைசிறந்த பொறியி யல், கலை மற்றும் அறிவியல், விவசாயக் கல்லூரி, மருத்து வக் கல்லூரி ஆகிய கல்லூரி களுக்கு பார்வையிட இன்று முதல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் நேற்று முதல் 23-ந்தேதி வரை அழைத்து செல்லப்படு கின்றனர்.
இந்த மாணவர்கள் விருதுநகர் சேது பொறியியல் கல்லூரி, மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, காமராஜர் பல் கலைக் கழகம், அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.கே.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயக்கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளன.
அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை, காரியாபாட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், விருது நகர், சிவகாசி, வெம்பக் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய 11 ஒன்றியங்களை சேர்ந்த 1055 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பஸ்களில் உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர்.
இம்மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர் கல்வியில் உள்ள வாய்ப்பு கள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புக்கள், உயர் கல்வி யில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகை யிலும், உயர்கல்வி பயில் வதற்கு ஆர்வத்தை ஏற்படுத் தும் வகையிலும், அவர் களுக்கு சரியான வழி காட்டுதல் வழங்கும் வகை யிலும், கல்லூரி நிர்வாகத் தால் விரிவாக எடுத்துரைக் கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
எனவே மாணவர்கள் இந்த உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள உயர்கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்பு கள் வாய்ப்புகள் குறித்து, அறிந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
- லஞ்ச ஒழிப்புத்துறையில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டினார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளராக இருப்பவர் முத்துச்சாமி (வயது55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 21-2-2023-ல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் செல்போனில் தொடர்பு கொண்டு தான் அனுப்பும் நபரிடம் ரூ.10 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் கட்சிகளுக்கு பணம் தருவதில்லை என கூறி மறுத்துவிட்டேன். இந்தநிலையில் அவர் நேரில் வந்து என்னை சந்தித்தார். அப்போது நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டினார். இதுகுறித்து நான் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜிடம் கூறினேன். அதுகுறித்து விசாரிப்பதாக கூறிய அவர், அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டார். என்னை பற்றி இன்பத்தமிழன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்துள்ளதாகவும், அதனால் தற்போது ரூ.10 லட்சம் கேட்பதாகவும் கொடுக்காவிட்டால் லஞ்சஒழிப்புத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் இன்பத்தமிழன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பட்டாசு தொழில் பிரச்சினைக்கு பிரதமர் உடனடி தீர்வு காணவேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சிவகாசி
தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர் (டான்பாமா)சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் கணேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது-
விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரடியாக 3 லட்சம் தொழி லாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவினர் அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதல்படி தயாரிப்பாளர்கள் பசுமை பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்.
தீபாவளி உள்ளிட்ட வட மாநில பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டை உச்சநீதி மன்றம் விதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது தற்போது உலகம் முழுவதும் இந்துக்கள் பண்டியாக மட்டுமின்றி பல்வேறு மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை பட்டாசு வெடிப்பது இந்திய கலாச்சாரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை என பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் கூறியுள்ளது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் ஆர்டர்கள் கேட்டு உற்பத்தியாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கடிதங்கள் தொடர்ந்து வருகிறது.
மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிக்கப்படும் என தனிநபரால் கொடுக்கப்பட்ட வழக்கு 2015 முதல் உச்சநீதிமன்றத்தில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு பட்டாசு தொழிலுக்கு உள்ள பிரச்சினையை உடனடியாக தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதிக்கான வசதிகளையும் செய்து தர பிரதமர் முன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்தில் தாய், மகன், மகள் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சாத்தூர்:
நெல்லை மாவட்டம் திசையன்விளை மன்னார்புரத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் ராஜா (வயது 49). இவருக்கு மெர்லின் (44) என்ற மனைவியும், ரோஷினி (15) என்ற மகளும், ரோகித் (13) என்ற மகனும் இருந்தனர்.
ரிச்சர்ட் ராஜா கோயம்புத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறார். உறவினர்கள் இல்ல நிகழ்ச்சி உள்ளிட்டவைகளின் கலந்துகொள்வதற்காக அவ்வப்போது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட் ராஜா தனது குடும்பத்துடன் திசையன்விளைக்கு காரில் வந்தார். நேற்று இரவு அவர்கள் காரில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர். காரில் ரிச்சர்ட் ராஜா மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள், சகோதரர் ஜான்சன் (56) ஆகியோர் பயணம் செய்தனர்.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அவர்களது கார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. நல்லிசத்திரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கடைசியில் கார் தடுப்புச்சுவரில் மோதி அதே வேகத்தில் தலைக்குப் புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ரிச்சர்ட் ராஜாவின் மகன் ரோகித் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய மற்ற 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே மெர்லின், ரோஷினி ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர். ரிச்சர்ட் ராஜா, ஜான்சன் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன், மகள் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- கடனை திருப்பி கேட்ட கணவன்-மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
- எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார்.
விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரநல்லூரை சேர்ந்தவர் கவிதா(40). இவர் தர்மபுரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் தினகரன். திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டியை சேர்ந்தவர் பூர்ணசந்திரன். இவரது தொழில் தேவைக்காக கவிதா ரூ.97 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் பூர்ணசந்திரன் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் கவிதா கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கவிதாவும், கணவரும் பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூர்ணசந்திரன் மனைவி கீதா, தம்பி கோபால் மற்றும் சிலர் சேர்ந்து கவிதா, தினகரனை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார். மேலும் கணவன்-மனைவி சிலருடன் சேர்ந்து தன்னையும் குடும்பத்தாரையும் தாக்கியதாக கீதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.
- முடிவில் பட்டதாரி ஆசிரியர் நீராத்திலிங்கம் நன்றி கூறினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெகதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மங்களம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகளின் ஒயிலாட்டம், கோலாட்டம் மேளதாள நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பட்டதாரி ஆசிரியர் நீராத்திலிங்கம் நன்றி கூறினார்.
- ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றம் சார்பில் முடங்கியார் ரோட்டில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
- அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றம் சார்பில் முடங்கியார் ரோட்டில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார். பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் சுதந்திர தின நினைவு வளைவில் தேசியக்கொடியை தீயணைப்பு நிலைய அதிகாரி ஸ்ரீனிவாசன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் என்.சி.எம். ராதாகிருஷ்ணராஜா, கணேஷராஜா,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தேசிங்குராஜா ராஜூக்கள் கல்லூரி என்.சி.சி மாணவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
- தற்கொலைக்கு முயன்ற மனைவியை கிணற்றில் குதித்த ராணுவவீரர் காப்பாற்றினார்.
- சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சின்னத்தம்பியாபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 32). இவருக் கும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது.
சுந்தரமூர்த்தி இந்திய ராணுவத்தில் ஜம்பு பகுதி யில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு கண வன், மனைவி இருவரும் ஜம்முவில் குடியேறி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுந்தர மூர்த்தி தன்னுடைய மனை வியுடன் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு விடுமுறை யில் சொந்த ஊருக்கு வந்தி ருந்தார். இந்த நிலையில் ராணுவ வீரர் சுந்தரமூர்த் திக்கும் அவருடைய மனைவி பொன்னு மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுமணி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார்.
பின்னர் அவர் ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சுந்தரமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுந்தரமூர்த்தி மனைவியை காப்பாற்ற தானும் கிணற் றில் குதித்தார்.
தண்ணீரில் மூழ்கிய மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற் றிய பின்னரே, கிணற்றில் படிகள் இல்லாததை சுந்தர–மூர்த்தி அறிந்தார். பின்னர் தொடர்ந்து சப்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை உத–விக்கு அழைத்தார். அவர் கள் கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.
- காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் கருத்தரங்கு நடந்தது.
- ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் மொழித்திறன் மற்றும் ஆளுமைத்திறனை மேம்படுத்துதல் என்னும், தலைப்பில் 3 நாள் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி. வீ கம்யூனிகேட் நிறுவனத்தைச் சேர்ந்த மென்திறன் மற்றும் மொழிப் பயிற்சியாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர்க ளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.
ஆங்கிலத்துறையைச் சேர்ந்த பேராசிரியை நாகஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத் தலைவி பெமினா வாழ்த்துரை வழங்கினார். ஆளுமைத்திறன் மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவது பற்றி ராஜலட்சுமி மென்திறன் பயிற்சியாளர் செயல்முறை பயிற்சிகளுடன் விளக்கம் அளித்தார். 2-ம் நாள் நிகழ்ச்சியில் மென்திறன் பயிற்சியாளர், தீனதயாளன் தலைமைத்துவம் மற்றும் மொழித்திறன் அடிப்படையிலான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
பயிற்சியாளர்கள் கிட்டி நான்ஸி மற்றும் கல்பனா, ஆகியோரால் ''பேசும் மொழி வடிவம் மற்றும் உடல்மொழி'' குறித்தப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
3-ம் நாள் காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முன்னாள் மாணவர்கள் மற்றும் வீ.கம்யூனிகேட் நிர்வாகிகளான ஏ.ஆர்.மனோஜ் மற்றும் ஹரிஹரன் கார்ப்பரேட் உலகின் தேவைக்கேற்ப எப்படி திறமைகளை வளர்த்துக் கொள்வது என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர். கருத்தரங்க பயிற்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கி ணைப்பாளர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.






