என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் மாவட்டத்தில் 26 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கலெக்டர் அதிரடி உத்தரவிட்டிருந்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர் களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதி யாக திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களி லுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்க ளையும் பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் வாய்ப்பை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடு வதாக பல்வேறு ஊராட்சி செயலர்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு துறையிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
அந்த மனுக்களை கலெக்டரின் பரிசீலனைக்கு ஊழல் தடுப்பு துறை அறிக்கை அனுப்பியது. அதனை பரிசீலித்த கலெக் டர் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சுழி ஒன்றியத்தில் பள்ளிமடம் ஊராட்சி செயலர் சிக்கந்தர் கனி, நல்லாங்குளம் ஊராட்சிக் கும், நல்லாங்குளம் ஊராட்சி செயலர் முருகன் பள்ளி மடம் ஊராட்சிக்கும், பணியிட மாற்றம் செய்யட்டு உள்ளனர்.
மேலும் நரிக்குடி ஒன்றி யத்திலுள்ள இருஞ்சிறை ஊராட்சி செயலர் தங்கப் பாண்டியன் வேளாநேரிக் கும், சுப்பையா இருஞ் சிறைக்கும், ராமகிருஷ்ணன் எழுவணிக்கும், ஆதிமூலம் வி.கரிசல்குளத்திற்கும், செல்வபிரபு பிள்ளையார் குளம் ஊராட்சிக்கும், சாரதி திம்மாபுரம் ஊராட்சிக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.
- பொதுமக்கள் நட்புறவை பேணும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
- இதில் காவலர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
பொதுமக்கள்-காவல்துறையினரிடையே நட்புறவை மேம்படுத்தவும், போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நகர் வட்ட ஆய்வாளர் சங்கர் கண்ணன் வத்தராப் வட்ட ஆய்வாளர் ஆறுமுகம், கிருஷ்ணன் கோவில் வட்ட ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இருந்து மதுரை ரோடு, சின்னக்கடை பஜார், பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக மங்காபுரம் விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு சென்றது. இதில் காவலர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
- நடுரோட்டையே பாராக மாற்றி 2 வாலிபர்கள் மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மது பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் சாலையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கிருந்து தள்ளாடியபடி சென்றனர்.
விருதுநகர்:
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து அன்றாடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நாள்தோறும் மதுகுடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல் வீதிக்குவீதி டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மதுபோதையில் வாழ்க்கையை தொலைத்து உடல் நலத்தையும் காக்க முடியாமல் பலர் ஆஸ்பத்திரிகளிலும், நலவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெறுவதை காணலாம். மது பழக்கத்தை கைவிட வேண்டும் என அறிவுறுத்தினாலும் 'குடி' மகன்கள் அதனை கண்டு கொள்வதில்லை.
இந்தநிலையில் நடுரோட்டையே பாராக மாற்றி 2 வாலிபர்கள் மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு 2 பேர் மது வாங்கினர். அவர்கள் பாரில் அமர்ந்து மது குடிக்காமல் திடீரென கடை எதிரே உள்ள சாலையில் நடுவே அமர்ந்து மது குடித்தனர். வாகன, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஊர் கதையை பேசி குடிமகன்கள் 2 பேர் மது குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை ஆச்சரியத்துடன் சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றனர். சிலர் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தும் மது பிரியர்கள் அதை கண்டு கொள்ளாமல் மது குடிப்பதில் ஆர்வமாக இருந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை. வாகன சோதனை, சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு வேகமாக வந்து கவனிக்கும் போலீசார் இதற்கு எந்தவித தீவிரமும் காட்டவில்லை. மது பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் சாலையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கிருந்து தள்ளாடியபடி சென்றனர்.
இந்த சம்பவம் விருதுநகர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் மது குடித்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் சாலைகள் அனைத்தும் மது கூடங்களாக மாறிவிடும் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
- நரிக்குடியில் ஆசிரியை ரோட்டில் தவற விட்ட 2½ பவுன் நகையை மீட்டுக்கொடுத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கமுதி அருகேயுள்ள மறைக் குளம் கிராமத்தை சேர்ந்த வர். இந்த நிலையில் நேற்று காலை சசிகலா பள்ளிக்கு செல்வதற்காக நரிக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது தனது கைப்பையில் உள்ள அவரது நகைகளை சரிபார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உலக்குடி பேருந்து வரவே அவசர அவசரமாக சசிகலா பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டார். அங்கு சென்று தனது கைப்பயை பார்த்தபோது அதில் இருந்த 2½ பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக நரிக்குடி பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் தனது செயின் கிடைக்காததால் நகை காணாமல் போனது குறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில் நரிக்குடி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப் பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் நேற்று காலை பள்ளிக்கு செல்ல நரிக்குடி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கீழே கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை எடுத்து அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை யாசிரியர் சோணை முத்துவிடம் விவரத்தை கூறி நகைையை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அவர் நரிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ேபாலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியபோது ஆசிரியை சசிகலா பஸ் நிலையத்தில் தவற விட்ட 2½ பவுன் நகையை மாணவிகள் மீட்டு கொடுத்தது தெரியவந்தது.
நகை கிடைத்தது குறித்து ஆசிரியை சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் தகுந்த அடையாளங்களை கூறி நகையை பெற்றுக் கொண்டார்.
தொலைந்து போன தங்கசெயின் கிடைக்க காரணமாக இருந்த இளம்வயது மாணவிகளின் நேர்மையான செயலை கண்டு நரிக்குடி காவல் துறையினர் மற்றும் தமிழாசிரியை சசிகலா, தலைமையாசிரியர் சோனை முத்து ஆகியோர் பாராட்டி னர்.
- ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
- 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
விருதுநகர்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான தையல் தொழிலில் முன் அனுபவமும் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10 நபர்கள் கொண்ட குழுவாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தகுதியான குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:-
குறைந்தபட்சம் வயது 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்.
விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.
குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பி னைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
சிவகாசி
அ.தி.மு.க. வீர வரலாற் றின் பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற் பது குறித்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசியதா–வது:-
மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட் டிற்கு திருப்பு முனையாக அமையும். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
நம்முடைய இயக்கத்தினு–டைய வளர்ச்சியை பார்த்து இன்றைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். ராணுவ கட்டுப்பாடோடு இயங்கும் ஒரு இயக்கம். எடப்பாடியார் தலைமையிலே 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் இன் றைக்கு வளந்திருக்கிறது. டெல்லியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களே வியக்கின்ற அளவில் நம்முடைய இயக் கத்தை எடப்பாடியார் மூன்றாவது அத்தியாயத் திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.
வரும் காலம் நமது காலம் என்பதை நிரூபிக்கின்ற வகையில், இந்த மாநாடு சிறக்க இருக்கின்றது. நாம் அத்தனை பேரும் வந்திருக் கின்ற ஒன்றிய, நகர, செயலாளர்கள் கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் பகுதி செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் அழைத்துச் செல் கின்ற கழக நிர்வாகிகளை பொதுமக்களை அந்தந்த வண்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து பத்திரமாக பாதுகாப்பாக அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.
மாநாட்டிற்கு காலை யிலே 10 மணிக்கு கிளம்பிட வேண்டும். 10 மணிக்கு கிளம்பினால்தான் அங்கு சிரமமின்றி செல்லலாம். கட்சி பொறுப்பாளர்களை, கட்சித் தொண்டர்களை, கிராமத்து இளைஞர்களை, பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் உருவாகக்கூடாது என்பதை பற்றி தான் அடிக் கடி மாவட்டச் செயலாளர் கூட்டங்களிலே நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சொல்லி வருகிறார்.
அவருடைய அந்த வாக்கை வேத வாக்காக நினைத்து நாம் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விருது–நகர் மாவட்டத்தில் இருந்து பிரச்சினை இல்லாமல் வந்தார்கள், மாநாட்டில் கலந்து கொண்டார்கள், பொதுச்செயலாளர் எடப் பாடியார் பேச்சை கேட்டார்கள், ஊர்களுக்கு அமைதி–யாக திரும்பி சென்றார்கள் என்ற நிலைதான் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர் மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரம–ணியன், மாவட்ட எம்.ஜி.–ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலா–ளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை–ஞரணி செயலாளர் பிலிப் வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய ஆனந்த்,
மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலா ளர் கிருஷ்ண–மூர்த்தி, சரவ ணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கி யம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட மீணவ ரணி செயலாளர் ரெங்கபா ளையம் காசிராஜன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன்,
கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வ நத்தம் மணிகண்டன், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ள பட்டி ரமேஷ், வழக்கறிஞர் மாரீஸ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத் தம்பி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன்,
ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் காமாட்சி, திருத் தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், தொகுதி கணேசன், ஒன்றிய இளைஞரணி சங்கர், மாந கர இளைஞரணி கார்த்திக், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
- பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராம்கோ குழுமத்தின் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் ஏற்பாட்டில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவரின் அறிவுறுத்தலில் செயலர் நீதிபதி இருதய ராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பழங்குடியின சாதி சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006-ன் படி இண்டு நார் சேகரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.
பின்னர் நீதிபதி இருதய ராணி கூறியதாவது:-
'ஒவ்வொரு பழங்குடியின கிராமமாக சென்று அவர்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். விருது நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அழைத்து வருகிற 24-ந் தேதி கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோ சிக்கப்படும். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
விருதுநகர்
விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதா வது:-
விருதுநகர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திரளான பேர் இதில் கலந்து கொள்ள வேண்டும். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகி களும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ள ஏற்பாடு களையும் கேட்ட றிந்தார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுடன் மாணவ-மாணவிகள் செயல்பட வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
- குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது.
குடலில் இருக்கக்கூடிய புழுக்கள் நீங்கள் உண்ணக் கூடிய சத்தான உணவுகளை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்திக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருக்கக் கூடிய ஹீமோகுளோபின் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் விழிப்புணர்வு முக்கியம்.
குடற்புழு மாத்திரை உங்கள் நல வாழ்வுக்காக தரக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நீங்கள் அனைவரும் உடல் நலம் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், துணை சுகாதார இயக்குநர் யசோதா மணி, சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரன், வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.
- வணிக வரித்துறை பெண் அலுவலரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டிதேவி (வயது36). இவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி வணிக வரித்துறையில் பணியாற்றும் குருராஜ் என்பவரின் மனைவி சித்ராதேவி அறிமுக மானார். அப்போது எங்கள் அலுவலகத்தில் காலிபணியிடம் இருப்பதாகவும், அதில் சேர நேர்முக கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.
இதற்கு செலவாகும் என தெரிவித்ததால் நான் பல்வேறு தவணைகளில் சித்ராதேவியிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தேன். அதன்பின் அவர் அரசு வேலைக்கான ஆணையை கொடுத்தார். அதை சம்பந்தப்பட் அலுவலகத்தில் காண்பித்தபோது போலி யானது என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி புகார் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை பெண் அலுவலர் சித்ராதேவியை தேடி வருகின்றனர். அரசு அலுவலர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இளம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிகளில் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு, உயிரி தொழில்நுட்ப வியல், வேதியியல், சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறைகள் இணைந்து தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி 4 நாட்கள் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் முனைவர். குருசாமி வாழ்த்தி பேசி னார். 2-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார்.
முதல் நாளில் மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப் பட்டது. தாவரவியல் துறை பேராசிரியர் முருகன் அளித்தார்.
2-ம் நாளில் கிருமி நாசினி திரவம் மற்றும் சலவைக் கட்டி எண்ணெய் தயாரிப்பு பயிற்சி வழங்கப் பட்டது. வேதியியல் பேராசிரியர் நசீர் பயிற்சியை வழங்கினார்.
3-ம் மற்றும் 4-ம் நாட்களில் மாணவர்க ளுக்கு சீன மற்றும் பிரான்ஸ் நாட்டுக் கலாசார உணவு, சமையல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்தி ருந்தார்.
- ராஜபாளையத்தில் ஊரணி சுற்றுப்பாதை பணிகள் நகர்மன்ற தலைவி பார்வையிட்டார்.
- பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி 27-வது வார்டில் கருப்பஞானியார் கோவில் அருகே வடுக ஊரணி உள்ளது. இந்த ஊரணியை சுற்றி சுற்றுப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது நகராட்சி சார்பில் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்று வட்டார பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதில் தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி ராமமூர்த்தி, வீரலட்சுமி, ராமலட்சுமி, குருசாமி, மாரியப்பன், . நாகேஸ்வரன், கோவில் தர்மகர்த்தா டாக்டர் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






