என் மலர்
விருதுநகர்
- 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்த சிறுமி சம்பவத்தன்று தனியாக இருந்தார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஆசைபாண்டி(வயது68) என்பவர் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.
பின்னர் அந்த சிறுமிக்கு ஆசைபாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது பாட்டியிடம் அழுதுக் கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி இதுகுறித்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார்.
ோலீசார் விசாரணை நடத்தியதில் ஆசைபாண்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசைபாண்டியை கைது செய்தனர்.
- காரியாபட்டி அருகே கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி பொக்லைன் எந்திரத்துக்கு தீவைக்கப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலகல்லங்குளம் கிராமத்தில் பிரதீப் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் சக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தமுருகன்(40) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஆனந்தமுருகன் பணம் தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.
தொடர்ந்து 4 பேர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று கல்கு வாரிக்கு வந்த அவர்கள் ஆனந்த முருகனிடம் தகராறு செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய தோடு அங்கு நிறுத்தியிருந்த 2 பொக்லைன் எந்திரத்துக்கு தீவைத்தனர். மேலும் ரூ.22 ஆயிரம் பணத்தையும் அபகரித்து கொண்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் சமூகவிரோதிகள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இதனால் வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
தினமும் ரவுடிகளுக்கு கப்பம் கட்டும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நரிக்குடி அருகே அரசு பதிவேட்டில் உள்ளபடி கண்மாய் கலுங்கை அதிகாரிகள் சீரமைத்தனர்.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே மறையூர் கிழக்கு பகுதியில் உள்ள கண்மாயில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கலுங்கு பகுதி உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது.இந்த நிலையில் மறையூர் கலுங்கு பகுதியிலிருந்து கண்மாய் நீரை பகிர்ந்து கொள்வதில் மறையூர், சேதுராயனேந்தல் என இரு கிராமங்கள் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதான கூட்டங்கள் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் சேதுராயனேந்தல் கிராம மக்கள் கடந்த 2021-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் நிபுணர்கள் குழுவை அமைத்து கலுங்கு பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை பரிசீலனை செய்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறையூர் கலுங்கு பகுதியிலுள்ள உபரி நீர் செல்லும் பகுதி உயர்த்தி கட்டப்பட்டு இருப்பதாகவும், பொதுப்பணித்துறை பராமரித்து வரும் பழைய பதிவேடுகளில் உள்ளது போன்று சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன்படி காரியாபட்டி குண்டாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர்கள் அழகுசுந்தரம், சிவகணேஷ் ஆகியோர் அடங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் மறையூர் கலுங்கு பகுதியை பொதுப்பணித்துறை பதிவேடுகளில் உள்ளது போன்று சீரமைத்தனர். அப்போது திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
- பெண்கள் உள்பட 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொட ர்பாக இருதரப்பி னரிடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதால் கிராமத்தில் அமைதியின்மை நிலவுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன், தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். கோவில் அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு தரப்பினர் ஜெயராமனை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் இருதரப்பை சேர்ந்தவர்கள் அங்கு வந்த மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பாண்டி(வயது36), மருதன்(59), ஆதிலட்சுமி(54) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் எதிர் தரப்பை சேர்ந்த கதிரேசன், கருப்பசாமி, மனோஜ் உள்பட 14 பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் ராமலட்சுமி, முருகன், அபிஷேக், மருதன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதலால் ஆத்திப்பட்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் குடும்பத்திற்காக பழயை கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். அது குறித்து டீக்கடை ஒன்றில் நண்பரிடம் பேசி கொண்டி ருந்தார்.
அப்போது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற சீட்டிங்குமார் அங்கு வந்தார். சீனிவாசன் பேசி கொண்டிருப்பதை பார்த்து தலைமை செயலகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள காரை வாங்கி தர முடியும் என்றும், அதற்கு இனதால் ரூ. ரூ.6¾ லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
அதனை நம்பிய சீனிவாசன் உடனடியாக அவரது செல்போன் எண்ணிற்கு ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் வாகன பதிவுக்காக ரூ.25 ஆயிரத்து 750 தேவை என்று ரமேஷ்குமார் கூறி உள்ளார். உடனடியாக சீனிவாசன் பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு மேலும் ரூ.1 லட்சம் தேவை என்று கூறி ரமேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் காரை பார்க்க வேண்டும் என சீனிவாசன் கேட்டுள்ளார். அப்போது பதிவு எண் தெரியாத சில வாகனங்களின் படங்களை ரமேஷ்குமார் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கார் வாங்குவதை உறுதி செய்ய மேலும் ரூ.1 லட்சம் வேண்டும் என ரமேஷ்குமார் கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த சீனிவாசன் ரமேஷ்குமாரிடம் கார் வாங்குவதை உறுதி செய்ய ேவண்டும். இல்லையெனில் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திர இமடைந்த ரமேஷ்குமார் கோபமாக பேசியுள்ளார். மேலும் கான்பிரன்ஸ் அழைப்பில் வேறு ஒருவரை பேச செய்து சீனிவாசன் குறித்து ஐ.ஜி.யிடம் புகார் கொடு்க்க உள்ளதாக மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
- மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான தற்காப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தாளாளர் தி வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். ஊக்க பேச்சாளர் வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி யில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி காமினி, மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ஸ்ரீ, மாநில அளவிலான சுருள்வாள் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவன் கவிபாலராஜன் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
துணை நிர்வாக முதல்வர் பானுப்பிரியா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா நன்றி கூறினார்.
- வாகனம் மோதி வாலிபர்-தொழிலாளி பலியாகினர்.
- ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
திருச்சுழி அருகே உள்ள டி.கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது46), விறகு வெட்டும் தொழிலாளி. இவர் மகளை பார்ப்பதற்காக நரிக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மணிக்கட்டியேந்தல் பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஷேர்ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முத்துபாண்டி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஷேர்ஆட்டோ டிரைவர் பரமக்குடி பிடாரிசேரியை சேர்ந்த பெரிய சாமி (43) மீது வழக்குப்பதிவு செய்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள புளியம்பட்டி மகாராஜாபுரத்தை சேர்ந்த வர் கிருஷ்ண பிரசாத் (வயது34). மதுரை-தூத்துக்குடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொகண்டிருந்தார். கள்குறிச்சி பகுதியில் ஓட்டல் ஒன்றின் அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த டிப்பர் லாரி திடீரென திரும்பி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்து கிருஷ்ண பிரசாத் படுகாயம் அடைந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கிருஷ்ண பிரசாத்தின் சகோ தரர் பாபு கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கி ணறு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் இன மக்களின் கலவரத்தை தூண்டிவிட்டு இரண்டு இன மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கும் வகையிலும் சிறுபான்மை சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் இரக்கமின்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும்
மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்து ரைக்கு நடந்த சாதிவெறி தாக்குதல் இது போன்ற செயல்கள் இனிமேல் எங்கும் நடைபெற கூடாது என்று வலியுறுத்தி விடுத லைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் ஜே.கே.செல்வின் ஏசுதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல துணைச் செய லாளர் வல்லரசு முன்னிலை யில், மாநில துணைச் செயலாளர் நவமணி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செல்வகுமார், மகளிர் அணி மகளிர் அணி துணைச் செயலாளர் லூர் தம்மாள், நகரச் செயலா ளர் கள் தமிழரசி, செல்வ மீனா,
மாவட்ட அமைப்பா ளர்கள் அசோக்குமார், லில்லி ராஜன், தமிழ்ச்செல் வன், பைக் பாண்டி, சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் தேவா நகரத் துணைச் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி சாமுவேல், சாமுராய்அமீர், மணி, அகஸ்தியன், குட்டி வளவன், ஆகாஷ், வெளிச்சம், பாண்டி மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.
- காலி குடங்களுடன் பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் ஆலாத்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தாமரைக் குளம் கிராமத்தில் இருந்து பைப்லைன் மூலமாக ஆலாத்தூர் கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கல்வி மடை முதல் ஆலாத்தூர் வரையிலான சாலை விரி வாக்க பணியின் காரணமாக சாலையின் பக்கவாட்டில் உள்ள பைப்லைன் முழுவ தும் சேதமடைந்தது. இத னால் ஆலாத்தூர் கிரா மத்திற்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கடந்த ஒன்றரை வருடமாக குடிநீர் பிரச்சி னையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் ஆலாத்தூர் பொதுமக்கள் தனியார் வாகனங்களில் குடம் ஒன்றிற்கு ரூ.15 செலவழித்து நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 குடங்கள் வரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டது. 1½ வருடங்கள் கடந்தபின்பும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நட வடிக்கை எடுக்ககப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட ஆலாத்தூர் பொதுமக்கள் திடீரென காலி குடத்துடன் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த அதிகாரிகளி டம் குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
- அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் சந்திப்பு கலந்துரையாடினார்.
- அந்த திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வி ல் முன்னேற வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சியில் 34-வது சந்திப்பு நடந்தது. இதில் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடி னார்.
அப்போது மாணவ-மாணவிகளை லட்சியம், ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி குறித்து கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள் இலக்குகளை தேர்ந்தெடுப்ப தில் தெளிவாகவும், விழிப்பு ணர்வோடும் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்து படிப்பிற்கான இலக்குகளை தேர்ந்தெடுப் பதை விட, அடுத்த 30, 40 வருடங்கள் சமூகத்தில் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து இலக்குகளை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாண வர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறி யியல் கல்லூரி, விவசாய கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவி லியர் கல்லூரி உள்ளிட்ட அரசு கல்லூரியில் உயர் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு கள் உள்ளன.
12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்று நல்ல வாயப்பு களை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும் இந்தியாவில் தலைசிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவன சிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியு டனும், கடினமாக உழைத் தால் எளிதாக வெற்றி பெறலாம். மேலும் ஒவ்வொ ருவருக்கும் என்று தனித் திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வி ல் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
- ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராம்கோ குரூப் நூற்பாலைகளில் பணி புரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படு கிறது. அதன்படி இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1,885 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. ராம்கோ நூற்பாலை பிரிவின் தலைவர் மோகனரெங்கன், துணைத் தலைவர்-மனிதவளம் நாகராஜன், முதுநிலை பொது மேலாளர்- பணிகள் பாலாஜி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்கங்களின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் வருகிற 21-ந் தேதி முதல் நடக்கிறது.
- கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.
இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவு களை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தி யை பன்முகப் படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
விருதுநகர் மாவட்ட சிவகாசி கிளை அலுவல கத்தில் (முகவரி:-98/சி4 சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2-வது தளம், சிவகாசி 626 123, விருதுநகர் மாவட்டம்;) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா முகாம் வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 இலட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.NEEDS திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.






