search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahal opening"

    • ஓட்டுக்கு பணம் வாங்கினால் கோடீஸ்வரர்கள் மட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும்.
    • லலிதா மஹால் திறப்பு விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி நாரணாபுரத்தில் லலிதா திருமண மகால் திறப்பு விழா நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மனைவி கலந்து கொண்டு திருமண மகாலை திறந்து வைத்தனர். விழாவில் வைகோ பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளேன். பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு ஆபத்து வந்த போது அதனை தடுத்து நிறுத்தினேன். இன்றைய காலகட்டத்தில் அரசியல் கெட்டு விட்டது. ஒரு எம்.பி. தேர்தலுக்கு வேட்பாளர் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை செலவு செய்கிறார்கள்.

    அரசியலை பணம் தான் தீர்மானிக்கிறது என்ற நிலை வந்து விட்டது. பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் கோடீஸ்வரர்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும். அவர்களிடம் இருந்து மக்கள் சேவையை எதிர்ப்பார்க்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது கேரளாவில் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது என்னை தோற்கடிக்க பலர் தீவிரமாக இருந்தனர். அதைபற்றி கவலைப்பட வில்லை.

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அவரது முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது தாயார் உள்பட எங்கள் குடும்பத்தினர் மதுவை ஒழிக்க போராடினார்கள். நாட்டிற்காக எனது குடும்பம் பாடுபட்டிருக்கிறது. மதுரையில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் நீங்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கட்ராஜ், நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், திமுக, ம.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×