இலவச கண் சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் சக்கராஜா கோட்டை முதனூர் தாயாதியார் சாவடியில் ஸ்ரீரெங்கபாளையம் சீட்டு அழகுராஜா நினைவாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சக்கராஜாகோட்டை சத்திரிய ராஜுக்கள் பொதுமகாசபை, விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுத்துச் சங்கம் நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. சக்கராஜாகோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட்டராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அறுவை சிகிச் சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் பொருத்துதல், உணவு, தங்கும் இடம், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இலவச பல் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com