காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை

காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது25). இவர் திருச்சு ழியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை அருண்ராஜ் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக அருண்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அருண்ராஜ் காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அருப்புக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது பாட்டி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com