என் மலர்
விருதுநகர்
- விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது.
- அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயதநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு மனு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் சாத்தூர் தாலுகாவில் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்திருந்த பெண்ணிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்போனில் பேசினார். அப்போது எந்த காரணத்திற்காக மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் அளித்தார். தொடர்ந்து உரிய தகுதிகள் இருந்தால் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்கும் என அமைச்சர் கூறினார்.
ஆய்வு முடிந்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமூகத்தில் அவர்கள் சுய மரியாதையோடு வாழவும் தலா ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேற்கண்ட 2 கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18 முதல் 20-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது. மேலும் அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர். இதனை தொடர்ந்து 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 மகளிர் உரிமை தொகை செலுத்தப்பட்டது.
கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதிகள் சரி பார்க்கப்படுகிறது. அரசாணையில் குறிப்பிட்டு உள்ளபடி தகுதிகள் பூர்த்தி செய்யபடாவிடில் நிராரிக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் நிலைமை குறித்து விண்ணப்பித்தவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. நிராரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான காலக்கெடு கடந்த 24-ந்தேதியோடு முடிவடைந்தது. நேற்று மாலையுடன் மேல்முறையீட்டு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 87 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதனை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து உரிய தகவல் தர அறிவுறுத்தப்பட்டது.
இதில் ஏற்கனவே பெற்ற 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 4 லட்சத்து 35 ஆயிரம் மனுக்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்படும்.
மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உரிய பரிசீலனை நடத்தி தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை வேகப்படுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அரசு மூலம் நமது முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார்.
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். தி.மு.க. ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.
- திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள சண்முகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன்.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திலகவதி தங்கேஸ்வரனை வற்புறுத்தினார்.
விரைவில் நம்முடைய திருமணம் நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தை கூறிய தங்கேஸ்வரன், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திலகவதியுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். தொடர்ந்து திருமணத்துக்கு காலம் தாழ்த்தியதால் ஏமாற்றம் அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியலுக்கு உட்படுத்தியது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதற்கிடையே திலகவதியை சந்தித்து சமரசம் பேசிய தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலையாகும் வகையில் கோர்ட்டில் தனக்கு சாதகமாக சாட்சி சொன்னால் நாம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். அதனை முழுமையாக நம்பிய திலகவதியும் நடந்துகொண்டார். அதன் மூலம் கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.
இதையடுத்து திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார். திருமணத்தின்போது திலகவதி 1 பவுன் நகை மட்டுமே அணிந்து வந்தார். இதனை ஏற்க மறுத்த தங்கேஸ்வரனின் பெற்றோர் எதுவும் இல்லாதவளை திருமணம் செய்து வந்ததாக மகனை திட்டியதோடு, மருமகளை சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அத்துடன், உன் பிறந்த வீட்டில் இருந்து 10 பவுன் நகை வாங்கி வந்தால் மட்டுமே என் மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கூறி திலகவதியை வீட்டை விட்டு துரத்தினர். வேறு வழியின்றி 10 பவுன் நகை வாங்கிவர அவரும் சம்மதித்தார். அப்போது தங்கேஸ்வரனிடம் சித்ரவதை குறித்து கூறி திலகவதி அழுது புலம்பினார்.
அதனை காதில் வாங்கிக் கொள்ளாத தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்கே உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார். மேலும், வேலை விஷயமாக கோவை செல்வதாக தெரிவித்து விட்டு புறப்பட்டார்.
ஒருசில நாட்களில் திலகவதியை செல்போனில் தொடர்பு கொண்ட தங்கேஸ்வரன், தான் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆண்டாள் கோவிலில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டியதாகவும், நீ உன் வீட்டிற்கு சென்றுவிடு என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 116-வது தேவர் ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு செல்லும் வாகனங்கள் கீழ்கண்டவாறு உள்ள அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சேத்தூர், முறம்பு, ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், அழகாபுரி, அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.
சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.
தோட்டிலோவன்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.
பந்தல்குடி, அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.
மல்லாங்கிணரில் இருந்து செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை (கல்குறிச்சி), கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்
நரிக்குடி, பார்த்திப்ப னூர், அபிராமம், பசும் பொன்ஆகிய வழித்தடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்
செங்கமல நாச்சியார்புரம் -கங்காகுளம், இரட்டை பாலம்-சிவகாசி பஸ் நிலையம், விளாம்பட்டி ஜங்சன்- எஸ்.எச்.என்.வி. பள்ளி, மீனாட்சிபுரம்- முஷ்டகுறிச்சி, மந்திரி ஓடை-முடுக்கன்குளம், காரியாபட்டி- புதுப்பட்டி, கல்குறிச்சி ஜங்சன்-கிருஷ்ணாபுரம், ராமலிங்கா மில்-குலசேகர நல்லூர், தமிழ்பாடி ஜங்சன்-ராமசா மிபட்டி, திருச்சுழி-மயிலி ஜங்சன், திருச்சுழி-பச்சேரி ஜங்சன், பூமாலைபட்டி ஜங்சன்-முத்துராமலிங்க புரம்புதூர், வீரசோழன் -மீனாகுளம், வீரசோழன்- கீழசெம்பூர் ஜங்சன், தேளி-தேளி (எல்லை), ரெட்டைகுளம்-ஆலாந்தூர், செங்குளம்-கருவக்குடி, கள்ளக்குறிச்சி-பூலாங்கால், ஒத்தக்கடை-எம்.ரெட்டியப்பட்டி, கட்டனூர்-பொட்டப் பச்சேரி, கட்டனூர்-கருவக் குடி ஜங்சன் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட வழி தடங்கள் ஆகும்.
மேலும் தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். நடை பயணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.
வாகனங்களில் வெளிபுறத்தில் நின்றோ, நடனமாடி கொண்டோ மற்றும் மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ செல்லக்கூடாது.
காவல்துறையினரின் முழுமையான தணிக்கைக்கு பின்பு வாகன அனுமதி சீட்டு பெற்று வாகனத்தில் முன்புறம் மற்றும் பின்புறம் ஒட்டி செல்ல வேண்டும். சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின் போதும், காவல்துறை யினரால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மது அருந்திவிட்டு வாக னங்களில் செல்லக்கூடாது. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி, மது பானங்கள், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கல், கத்தி, கம்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். வாகனங்களில் சென்று வரும் போது தேவையற்ற முறையில் பிற மதத்தினரையோ, சமுதாயத்தினரையோ புண்படுத்தும் வகையில் பேசுவதோ, கோஷங்கள் எழுப்புவதோ கூடாது.
வாகனங்களில் உள்ள மேற்கூரை அகற்றப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாகவோ, ஆபத்தை விளைவிக்கும் வகையில் முந்தி செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் சம்பந்தப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள பெரிய தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகை (வயது 37). சமீபத் தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மல்லிகை தொடர்ந்து வயிற்று வலி யால் அவதிப்பட்டு வந்தார்.
ஆசிட் குடித்தார்
இதனால் வாழ்வில் விரக் தியடைந்த அவர் வீட்டில் இருந்த திராவகத்தை (ஆசிட்) குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித் கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள்.
தற்கொலை
திருச்சுழி அருகே உள்ள புலியூரான் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிசித்திரை வேல் (46). இவர் தனது வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். நஷ்டம் காரணமாக கடையை மூடிய அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.
நரிக்குடி அருகேயுள்ள பனைக்குடியை சேர்ந்தவர் குமார் (43). வயிற்று வலி யால் அவதிப்பட்ட இவர் விருதுநகர் அரசு மருத்துவம னையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் தீராததால் மனவே தனை அடைந்த அவர் அதே கிராமத்தில் உள்ள கோழிக் கடை அருகே விஷம் குடித்து விட்டு மனைவிக்கு போன் செய்து தெரிவித்தார். உடனடியாக விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சண்முகய்யா (62). அதே பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சா லையில் வேலை பார்த்து வந்த அவர் ஓய்வுக்காக வெளியில் சென்றார். பின்னர் அங்கிருந்த மரத் தடியில் படுத்து உறங்கிய சண்முகய்யா சிறிது நேரத் தில் இறந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து, மகன் முத்துராம லிங்கம் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- பாராளுமன்ற ேதர்தலில் 40 ெதாகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சியில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பி் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். பஞ். தலைவர் விஜயலட்சுமி விவே கானந்தன் முன்னிலை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தின் ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத் தினார். ஜெயலலிதா ஆட்சி யில் தாலிக்கு தங்கம், இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப் டெப் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி னார்.
எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி காலத்தில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். நான் கேட்டு கொண்டதற்கிணங்க விருதுநகரில் மருத்துவ கல்லூரி ரூ.385 கோடி செலவில் அமைத்து தந்தார். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்தார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி கட்டணங்களை அரசே செலுத்தும் என அறிவித்தார். கொரோனா காலத்தில் அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு ரூ.2,500, 25 கிலோ ரேசன் அரிசி வழங்கினார். விருது நகர் மாவட்டத்தில் 25 மினி கிளினிக்குகள் அமைக்கப் பட்டது.
தி.மு.க. தேர்தல் நேரத் தின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம். அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். கல்விக் கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக் கப்பட்டது. தற் போது ஒரு கோடி பெண்க ளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வை ரத்து செய்ய வில்லை. கல்விக்கடன், நகைக்கடனையும் ரத்து செய்யவில்லை.
பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள் ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எடப் பாடி சுட்டி காட்டு நபரே பிரதமராக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயினார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா செய்திருந்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்.
- காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய் திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி துணை முதல்வரும், கணினி பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி கலந்து கொண்டு இந்தியாவில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் 2-ம் ஆண்டு மாணவர் ராம்குமார் வரவேற்றார்.
முடிவில் சிவசுப்பிர மணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.
- நரிக்குடி ஒன்றிய சாலைப்பணிகள் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
- விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் தேளி-மானாமதுரை எல்லை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலையானது மிகவும் சேத மடைந்து மோசமான நிலை யில் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் தேளி, தர்மம், கொட்டகாட்சியேந் தல், பூவாக்கன்னி, கனைய மறித்தான் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளி லிருந்து மானாமதுரை வரை சென்று பின்னர் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த சாலையைத்தான் பிரதான மாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பகுதிகளிலிருந்து கல்லூரி, பள்ளிக்கூடம், கட்டிட வேலைக்கு செல் வோர் என பல்வேறு தரப்பி னரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையானது நரிக்குடி யூனியன் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தேளி-மானாமதுரை எல்லை வரையிலான சாலை போடும் பணிக்காக ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டு ஆறு மாத காலமாகியும் சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத் திற்கு ஆளாகி வருகின்றனர்.
மோசமான இந்த சாலை யால் கார், இருசக்கர வாக னம் போன்ற வாகனங் கள் அடிக்கடி பழுதாகி நிற்ப தோடு பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொது மக்களும் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறித்த நேரத் திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.
விருதுநகர்-சிவகங்கை மாவட்ட எல்லைக்கு இருபுற மும் உள்ள சாலைப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட் டிற்கு வந்த நிலையில் ஒன்றிய நிதியிலிருந்து சாலைப்பணிக்காக தேவை யான நிதி ஒதுக்கப்பட்டும் நரிக்குடி யூனியன் கட்டுப் பாட்டிலுள்ள தேளி-மானா மதுரை எல்லை வரையி லான ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலைப்பணிகள் மட்டும் கிடப்பிலேயே போடப்பட் டுள்ளதால் கடல் தீவு போல காட்சியளிப்பதாகவும் அப் பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.
சமீப காலமாக நரிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து நரிக்குடி யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள் ளாதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக வும் பொதுமக்கள் தெரி வித்தனர்.
ஆகவே தேளி-மானா மதுரை எல்லையில் நரிக் குடி யூனியனிற்கு உட்பட்ட சாலைப்பணியை உடனடி யாக நிறைவேற்றி விரைவில் பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். ம முன்னாள் மாணவரும், பேராசிரியருமான கவிதா வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, முன்னாள் முதல்வர்கள் கண்மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், பேராசிரியருமான முத்துகுமார் அறிக்கை வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. முடிவில் குலோத்துங்கப் பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விருதுநகருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.
விருதுநகர்
தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (25-ந் தேதி) தேனி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு விருதுநகருக்கு வருகிறார். ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், மறுநாள் (26-ந்தேதி) ராமமூர்த்தி ரோட்டில் நடைபெறும் பிரமாண்ட இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அதனை தொடர்ந்து கல்லூரி சாலையில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க.வை சேர்ந்த 2 ஆயிரம் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மதியம் மருத்துவ கல்லூரி கலைஞரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
விருதுநகர் மாவட்டத் திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சீனிவாசன் எம்.எல்.ஏ., இளைஞரணி நிர்வாகிகள், கட்சியினர் செய்து வருகின்றனர்.
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய அரசு வக்கீல் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவசாமி ஆகியோர் பேசினர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நந்தகுமார், செல்லையாதேவர், சங்கர், சோமசுந்தரம், சற்குண பாண்டியன், கோபால், சிவகாசி ஷேக், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
- 2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
சிவகாசி:
சிவகாசியில் பா.ம.க. தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு ஆய்வு நடத்துவதில்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தின ஊதியம் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்.
பட்டாசு விபத்துகளை தடுக்க ஊழல் செய்யாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். முதல்-அமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என கூறுவது தவறான கருத்து. உச்ச நீதிமன்றம் 2012 சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுயாட்சி என கூறும் தி.மு.க. ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது. இனி சமூக நீதி பற்றி தி.மு.க. பேச கூடாது.
நீட் குறித்து ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் ரத்து செய்வோம் என கூறினார்கள். தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கையெழுத்து இயக்கம் தி.மு.க. நடத்துகிறது. நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை.
2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசை வேண்டுமென்றே எதிர்த்து செயல்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் மத்திய மாவட்டச் செயலாளர் டேனியல் உடன் இருந்தனர்.
- சிலர் பால் போன்று இருந்ததால் ஆர்வ மிகுதியால் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.
- இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரெயில் நிலையம் செல்லும் சாலையின் ஓரத்தில் நேற்று திடீரென்று ஊற்று ஏற்பட்டு அதில் தண்ணீர் வெள்ளை நிறமாக வந்தது.
நேற்று ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதி சாலை வெறிச்சோடி கிடந்தது. வாகனங்களில் சென்று வந்தோரை விட நடந்து சென்றவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். சாலையோரம் வெள்ளை நிறத்தில் பால் போன்று தண்ணீர் வெளியேறியதை அந்தப் பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
ஒரு சிலர் அருகில் சென்று ஆவிபறக்க வந்த தண்ணீரை கையில் அள்ளி பருகினர். அந்த தண்ணீரில் உப்புத்தன்மை இல்லாமலும், பால்போன்று வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும் கூறினர். அதில் சிலர் பால் போன்று இருந்ததால் ஆர்வ மிகுதியால் தண்ணீரை கையில் எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.
மேலும் இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






