தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி

விருதுநகரில் நடந்த விழாவில் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு நகராட்சி மைதானத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலா ளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 11.30 மணிக்கு கல்லூரி சாலையில் அமைக்கப் பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்க பாண்டியன், சீனிவாசன், முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் உதய நிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திரளான தொண்டர்கள் பொதுக் கூட்ட மேடை முன்பு குவிந்த னர். மதியம் விருதுநகரில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பூங்காவை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து மருத் துவ கல்லூரி கலைய ரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் ரூ.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com