காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை

காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24).

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அகாடமியில் சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்தார்.

அப்போது அவருடன் படித்த ஒரு பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்ததாக தெரிகிறது. படித்த பின்பும் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் பெண்ணின் வீட்டுக்கு சென்று காதல் விவ காரத்தை கூறி திரு மணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் பெண் வீட்டார் சில காரணங்களை கூறி திரும ணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் கடந்த சில வாரங்களாக விரக்தியுடன் காணப் பட்டார்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற கவலையோடு இருந்து சதீஷ்குமார் சம்பவத்தன்று வீட்டின் மாடி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com