என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
- வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்ைட அருகே உள்ள தேவடெக்ஸ் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது38). இவர் அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துப்பாண்டி(33). இவர் காந்தி நகரில் உள்ள அட்டை கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று காலை 2 பேர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த னர். பின்னர் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
மாலையில் வே லை முடிந்து வீடு திரும்பிய கணவன்-மனைவி கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அருப்புக் கோட்டை டவுன் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






