என் மலர்
விருதுநகர்
திருச்சுழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மதுரைவீரன் (வயது56) என்பவர் மிட்டாய் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
ஏதும் அறியாத அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோ ரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரைவீரனை கைது செய்தனர்.
கணவர் இறந்த சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராணி (வயது 38). இவரது கணவர் ஜெயகணேஷ்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்தார். இதனால் கணவரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத செல்வராணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வராணி விரக்தியில் கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது சகோதரி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ளாத மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜபாளையத்தில் நீட் தேர்வில் வென்ற ஏழை மாணவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் உள்ள ரேணுகாதேவி தொடக்கப்பள்ளியில் படித்த மாணவர் சுந்தரேசுவரன்.
இவர் நீட் தேர்வில் 331 ரேங்க் பெற்று கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ இடம் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றார். இவர் தந்தை கூலி தொழிலாளியானதால் அவரால் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அளவிற்கு வசதி செய்து கொடுக்க இயலவில்லை. இதை அறிந்த பள்ளி நிர்வாகம் முன்னாள் தலைவர் சுப்புராம், தற்போதைய தலைவர் மனோகரன் ஆகியோர் பள்ளிக்கு மாணவனின் பெற்றோரை அழைத்தனர். அங்கு நடந்த பெற்றோர்&ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் பெற்றோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
பின்னர் மாணவர் சுந்தரேசுவரனுக்கு நிதி உதவியும் வழங்கினார். பள்ளி தாளாளர் ரவிக்குமார், முன்னாள் தாளாளர் பலராம், தலைமையாசிரியை பிரபா, ஊர் தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு சாதனை மாணவரை பாராட்டினர்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் “கிராமப்புற இந்தியாவின் இணையவழி கல்வியின் சவால்கள் மற்றும் தீர்வுகள்“ என்ற தலைப்பில் கருத்தரங்கு 2 நாட்கள் இணையவழியில் நடந்தது.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பு, பெங்களூரு தேசியதர மதிப்பீட்டு குழுவின் நிதி உதவியுடன் “கிராமப்புற இந்தியாவின் இணையவழி கல்வியின் சவால்கள் மற்றும் தீர்வுகள்“ என்ற தலைப்பில் கருத்தரங்கு 2 நாட்கள் இணையவழியில் நடந்தது.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி னார். துணை முதல்வர் பாலமுருகன், முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினர். 2 நாட்கள் கருத்தரங்கு 4 அமர்வுகளாக நடந்தது. முதல் நாள் அமர்வில் காந்தி கிராம கிராமிய பல் கலைக்கழகத்தின் வேதியி யல் துறை பேராசிரியர் சேதுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “கிராமப்புற இந்தியாவின் கல்வியில் கொரோனாவின் தாக்கம்“ என்ற தலைப்பில் பேசினார்.
2ம் அமர்வில் குஜராத் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல்துறை பேராசிரியர் ஜோதி பரீக் “நவீன கல்வி முறையின் நன்மை&தீமைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
3ம் அமர்வில் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஹரீஷ் “இணையவழி கல்வி முறையில் கிராமப்புற இந்தியா சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
4ம் அமர்வில் கேரள பல்கலைக்கழகத்தின் மேலாண்மையியல் துறைத்தலைவர் கே.எஸ். சந்திரசேகர் “கிராமப்புற இந்தியா&இணையவழி கல்வி முறையில் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த கருத்தரங்கு இணையவழி கல்வி முறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் கால மாற்றத்துக்கு ஏற்ப கல்வி முறையியலும் மாற்றம் ஏற்படும்.
எனவே இந்த வகை கல்வி முறைக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டது. மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி இணையவழி கல்வியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தபப்பட்டது.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பிரியா ஒருங் கிணைத்து நடத்தினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 85 பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 98 பேர் இணைய வழியில் பங்கேற்று பயன டைந்தனர்.
சிவகாசி அருகே மாமியாரால் தீ வைக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி:
விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர், கார்த்தீசுவரி (வயது 20). இவருக்கும் சிவகாசி எஸ்.என்.புரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஜோதிமணி சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தாயார் சின்னத்தாய்.
ஜோதிமணி ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். இந்தநிலையில் கார்த்தீசுவரியை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.
கார்த்தீசுவரி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கடந்த 5-ந் தேதி, கார்த்தீசுவரி பலத்த தீக்காயத்துடன் சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையில் இருந்த போது, கார்த்தீசுவரி சிவகாசி மாஜிஸ்திரேட்டிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருத்தங்கல் போலீசார் கார்த்தீசுவரியின் மாமியார் சின்னத்தாயை கைது செய்தனர். கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகள் மீது அவர் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொடூர செயலை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கார்த்தீசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக நேற்று இறந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர், கார்த்தீசுவரி (வயது 20). இவருக்கும் சிவகாசி எஸ்.என்.புரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஜோதிமணி சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தாயார் சின்னத்தாய்.
ஜோதிமணி ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். இந்தநிலையில் கார்த்தீசுவரியை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.
கார்த்தீசுவரி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கடந்த 5-ந் தேதி, கார்த்தீசுவரி பலத்த தீக்காயத்துடன் சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையில் இருந்த போது, கார்த்தீசுவரி சிவகாசி மாஜிஸ்திரேட்டிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருத்தங்கல் போலீசார் கார்த்தீசுவரியின் மாமியார் சின்னத்தாயை கைது செய்தனர். கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகள் மீது அவர் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொடூர செயலை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கார்த்தீசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக நேற்று இறந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சுழி அருகே பாண்டியர் கால மடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற் றுத்துறை உதவி பேராசிரியர் தலைமையில் வரலாற் றுத்துறை மாணவர்கள் சரத்ராம், செல்வகணேஷ், ராஜபாண்டி ஆகியோர் சென்னிலைக்குடி கிராமத்தில் கள ஆய்வு செய்தபோது பாண்டியர் கால மடைக்கல் வெட்டை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குளம், கண்மாயில் சேகரமாகும் தண்ணீரை வீணாக்காமல் தடுத்து பாசன வசதிக்காக பயன்படுத்துவதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு மடை ஆகும். இது போன்ற அமைப்பு தற்போது திருச்சுழி அருகே சென்னிலைக்குடி கண்மாயில் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த மடையைச் சேர்ந்த நீர்மட்ட அளவு கல்லானது அந்த தூணின் மேல் 10 அடி உயரத்தில் அழகிய வடிவமைப்புடன் காணப்படுகிறது. அதில் கிடைமட்டமாக உள்ள குறுக்கு கல்லில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எழுத்தினை கொண்டு இக்கல்லானது 9&ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என கருதப்படுகிறது. இக்கல்வெட்டானது “ஸ்ரீ” என்ற மங்கல எழுத்துடன் தொடங்கி “மனமே துணை” என்ற வார்த்தையுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மடைக்கல்வெட்டில் மடை அமைத்தவரின் பெயர், அரசரின் பெயர், ஆட்சி ஆண்டு இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த கல்வெட்டில் எந்த குறிப்பும் இடம்பெறாமல் மனமே துணை என்ற வார்த்தை மட்டும் பொறிக் கப்பட்டுள்ளது. இது மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற வாக்கியத்தை உணர்த்துவதாக அமைகிறது.
தமிழ்நாட்டில் கண்டறியப் பட்டுள்ள வட்டெ ழுத்து கல்வெட்டுக்களில் இது சற்று வித்தியாசமான கல்வெட் டாகும். கல்வெட்டுகளில் திருச்சுழி என்ற பகுதி யானது பருத்திக்குடி நாட்டு தேவதானம் என்று அழைக்கப்படுகிறது.இந்த கல்வெட்டும் திருச்சுழி சிவன் கோவிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டும் மற்றும் அருகே உள்ள பள்ளி மடத்தைச் சேர்ந்த சிவன் கோவிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த கல்வெட்டுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் முற்கால பாண்டியர் ஆட்சி சிறந்து விளங்கியதாக உணர்த்தும் வகையில் உள்ளது என்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த 2 பஸ்களும் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம் வளைவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் உசிலம்பட்டி நடுமுதலைக்குளத்தை சேர்ந்த முத்து, தென்காசி மாவட்டம், கட்டளை குடியிருப்பை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் மாரிமுத்து மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த அனுஷ்யா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்கராணி, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இசக்கியம்மாள், மதன்குமார் உள்பட 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது வருகையை யொட்டி விருதுநகர் நகரில் மேம்பாலம் முதல் மாரியம்மன் கோவில் வரை தேர்தல் விதிகளை மீறி கொடி கம்பம், பேனர்கள் கட்டியதாக தி.மு.க.வினர் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.
இதேபோல் விருதுநகர் முத்துராமன்பட்டியிலும் தேர்தல் விதிகளை மீறியதாக தி.மு.க. மீது பறக்கும் படை தாசில்தார் பொன் ராஜ் கொடுத்த புகாரின்பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருத்தங்கல்லில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் நடந்ததாக சிவகாசி பறக் கும்படை தாசில்தார் ஆனந்தராஜ் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்படி மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
அருப்புக்கோட்டை
தமிழகத்தில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அருப்புக் கோட்டை நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
பேண்டு வாத்தியங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு வெள்ளைக்கோட்டை, எம்.எஸ். கார்னர், பழையபஸ்நிலையம், மதுரைரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க.வின் சாதனைகள் கஜானாவை காலி செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்வது ஒன்றுதான். வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் மூன்றரை கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று தலைமறைவாக சென்றுவிட்டார். இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
மக்களுக்காக சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து மக்களோடு இருக்கும் கட்சி தான் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் கட்சி தி.மு.க. தான். அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான். எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி பெற தி.மு.க. வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.
தவறான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது. இப்பகுதியில் செயல்படுத்த வேண்டிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சியில் நல்லாட்சி மலர உதயசூரியன் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க.வின் சாதனைகள் கஜானாவை காலி செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்வது ஒன்றுதான். வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் மூன்றரை கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று தலைமறைவாக சென்றுவிட்டார். இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
மக்களுக்காக சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து மக்களோடு இருக்கும் கட்சி தான் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் கட்சி தி.மு.க. தான். அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான். எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி பெற தி.மு.க. வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.
தவறான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது. இப்பகுதியில் செயல்படுத்த வேண்டிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சியில் நல்லாட்சி மலர உதயசூரியன் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது அரிசி வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ராஜபாளையம் ரோடு மடவார்வளாகம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பறக்கும்படை அலுவலர் வானதி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துக்கோபால், தலைமை காவலர் சுதந்திரக்கனி, காவலர் வினோத்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா நகரை சேர்ந்த அரிசி வியாபாரியான விவேக்(வயது 39) என்பவர் ஓட்டி வந்த வாகனத்தில் அரிசி கடையில் விற்பனை செய்யப்பட்டதாக கூறி உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 200 எடுத்து செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த தொகையை பறக்கும் படையினர் கைப்பற்றி நகராட்சி தேர்தல் அலுவலர் மல்லிகாவிடம் ஒப் படைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
விருதுநகரில் தேர்தல் விதிகளை மீறியதாக பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தேர்தல் நடத்தை விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
விருதுநகரில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இதேபோல் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்திலும் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது-. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் நகராட்சி தேர்தல் பறக்கும்படை பொறுப்பு அதிகாரி ரமணன் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கஜேந்திரன், பொறுப்பாளர் பாண்டுரங்கன், மண்டப உரிமையாளர் மதியழகன், பொறுப்பாளர் இன்பராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






