என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
திருச்சுழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மதுரைவீரன் (வயது56) என்பவர் மிட்டாய் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
ஏதும் அறியாத அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோ ரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரைவீரனை கைது செய்தனர்.
Next Story






