என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்குப்பதிவு
தி.மு.க.-பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு
தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது வருகையை யொட்டி விருதுநகர் நகரில் மேம்பாலம் முதல் மாரியம்மன் கோவில் வரை தேர்தல் விதிகளை மீறி கொடி கம்பம், பேனர்கள் கட்டியதாக தி.மு.க.வினர் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.
இதேபோல் விருதுநகர் முத்துராமன்பட்டியிலும் தேர்தல் விதிகளை மீறியதாக தி.மு.க. மீது பறக்கும் படை தாசில்தார் பொன் ராஜ் கொடுத்த புகாரின்பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருத்தங்கல்லில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் நடந்ததாக சிவகாசி பறக் கும்படை தாசில்தார் ஆனந்தராஜ் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்படி மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story






