என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்கள் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர்.
பஸ்கள் மோதிய விபத்தில் 30 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த 2 பஸ்களும் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம் வளைவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் உசிலம்பட்டி நடுமுதலைக்குளத்தை சேர்ந்த முத்து, தென்காசி மாவட்டம், கட்டளை குடியிருப்பை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் மாரிமுத்து மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த அனுஷ்யா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்கராணி, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இசக்கியம்மாள், மதன்குமார் உள்பட 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story






