என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் பறிமுதல்
    X
    பணம் பறிமுதல்

    அரிசி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது அரிசி வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ராஜபாளையம் ரோடு மடவார்வளாகம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பறக்கும்படை அலுவலர் வானதி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துக்கோபால், தலைமை காவலர் சுதந்திரக்கனி, காவலர் வினோத்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா நகரை சேர்ந்த அரிசி வியாபாரியான விவேக்(வயது 39)  என்பவர் ஓட்டி வந்த வாகனத்தில் அரிசி கடையில் விற்பனை செய்யப்பட்டதாக கூறி உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 200 எடுத்து செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. 

    இந்த தொகையை பறக்கும் படையினர் கைப்பற்றி நகராட்சி தேர்தல் அலுவலர் மல்லிகாவிடம் ஒப் படைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
    Next Story
    ×