என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையத்தில் தி.மு.க. ரைடர்ஸ் வாகன பேரணிக்கு எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.
ராஜபாளையம்
தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, கடந்த 15-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரைடர்ஸ் வாகன பேரணியை இளைஞரணி செலயாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 188 இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
ராஜபாளையம் தொகு திக்கு வந்தடைந்த வாகன பேரணிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்எம்.குமார் முன்னிலையில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சொக்க நாதன் புத்தூர் விலக்கில் பேர ணிக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ராஜபாளையம் வழியாக புதுப்பட்டி விலக்கு வரையில் சென்று இருசக்கர வாகனங்களை இயக்கி பேரணியை வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணி கண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டது.
- ஜனநாயக பிரதிநிதித்துவ கொள்கைகளுக்கு முரணானது என மக்களவை சபாநாயகருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விருதுநகரில் நடைபெற்ற நிதியமைச்சர் பங்கேற்க உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு பொது விழாவின் போது அதிகாரப்பூர்வ வழி காட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தொடர்பான தீவிரமான கவலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எழுதுகிறேன்.
விருதுநகரை பிரதிநிதித் துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேற்படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எனது பெயர் விடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு எம்.பி.க்களின் (தனுஷ்குமார், நவாஸ்கனி) பெயர்களும் அழைப்பிதழில் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்தது.
இப்படி மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் புறக்கணிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடை யேயான உத்தியோக பூர்வ பரிவர்த்தனைகள் குறித்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.
அரசாங்க அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அலுவலக குறிப்பாணையினை உங்களது கவனத்தை ஈர்க்கிறேன். அழைப்பிதழ் அட்டைகளில் எங்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது இந்த வழிகாட்டு தல்களுக்கு முரணானது.
இந்த விஷயத்தைச் சீர் செய்வதில் உங்கள் அவசரத் தலையீடு தேவை என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டுதல்களில்படி, அமைப்பாளர்கள் பரிந்து ரைக்கப்பட்ட நடைமுறை களை கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பி தழ்களை வழங்குவதையும் உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.இந்த விஷயத்தில் உங்கள் உடனடி கவனத்தை நான் பாராட்டுகிறேன். மற்றும் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதி நிதிகளின் கண்ணி யத்தை நிலை நிறுத்தவும், ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு மைப்பாட்டைப் பேணவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகி றேன். இந்த சிக்கலைத் தீர்ப்பதில் உங்கள் புரிதலுக்கும் விரைவான நடவ–டிக்க்கும் நன்றி.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளை மத்திய நிதி மந்தரி வழங்கினார்.
- பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக விருதுநகர் வந்த நிர்மலா சீதாராமனை கலெக்டர் ஜெயசீலன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 1,297 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் கடனு தவி வழங்கி பேசியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி உதவிக்காக காத்திருக்கும் கடைக்கோடி ஏழைக்கும் உதவி சென்ற டைய வேண்டும் என திட்ட மிட்டார். ஏழை, எளிய மக்கள் உதவி பெறுவது அவர் கள் உரிமை என்ற அடிப்ப டையில் உதவி கிடைப்பதன் மூலம் அவர்கள் சுய சார்பு பெறும் தன்மை ஏற்படும் என்பதே பிரதமரின் திட்டமாகும்.
அந்த வகையில் அவர் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறி வித்தார். கடந்த 2020-ம் ஆண்டு சாலையோர வியா பாரிகளுக்காக திட்டம் தொடங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படு கிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி முடித்தால் ரூ. 20 ஆயிரமும், அதன் பின்னர் ரூ.50, ஆயிரமும் வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் தவணையாக 7,772 சாலையோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது தவணையாக 1,642 பேருக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது தவணை யாக 246 பேரும் ரூ.50 ஆயிரமும் பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது.
தனிநபர் கடன் கொடுப்பதை அரசு தடுக்க முடியாது. அதற்காகத்தான் அரசே கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில். நிதித்துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி பேசினார். நிதித்துறை இணை செயலாளர் பர்ஷாந்த் குமார் கோயல் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீ வஸ்தவா வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து 10 மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுடன் மேடைக்கு அழைத்து சந்திரயான் விண்கல மாடலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தார்.
- கந்த சஷ்டி விழா நடந்தது.
- சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. தினமும் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்கார நிகழ்ச்சி நடை பெற்றது.
முன்னதாக வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு பாலபிஷேகம் முடிந்த பின், ஜெயந்திநாதர் அலங்காரத்தில் முத்தா லம்மன் திடலில் எழுந்த ருளிய அவரை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். அங்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூர பத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
- கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்,
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 40). இவர் ஆமத்தூரை அடுத்த வடமலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தனது வீட் டில் இருந்து இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று அதே போல் பள்ளிக்கு சென்ற அவர், மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார். முன்னதாக விருது நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் முடிவு செய்திருந்தார்.
இதற்காக அவர் வந்த போது, சிவகாசி சாலையில் குமாரலிங்காபுரம் பகுதியில் அவரை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக் கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி கள் 2 பேர் திடீரென்று ராஜலட் சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.
இருந்தபோதிலும் அவர்க ளிடம் கடுமையாக போரா டியும் பலனின்றி போனது. இதில் 5 பவுன் செயினில் ஒன்றரை பவுன் நகையுடன் அந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜலட்சுமி ஆமத் தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் அருள்பாலித்து வரும் பிரசி த்தி பெற்ற வாழை மர பால சுப்ரமணிய சுவாமி கோவி லில் கடந்த 13-ந்தேதி கந்த சஷ்டி விழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக் தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கோவி லில் சிறப்பு ஹோமம் நடை பெற்றது. நேற்று (சனிக் கிழமை) கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் கஜமுக சூரன், சிங்காசூரன், தாரகாசூரன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத் தில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.
மாலை 7 மணிக்கு சுவா மிக்கு பாலபிஷேகம் நடை பெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தெய் வானை சமேத சிவசுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல் யாணம் மற்றும் வாழைமர பாலசுப்பிரமணிக்கு புஷ் பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்ட னர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், வைப்பாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து வேண்டி யும், கடன் பிரச்சினை தீரவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- மாயமான பெண் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது.
- பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்கம்மாள் (வயது 80). நோய் பாதிப்பிற்கு ஆளான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் அவரைப்பற்றி எந்தவித தகவலும் இல்லை. இதற்கிடையே அங்குளள் பெரியகண்மாயில் கங்கம்மாள் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண், 10-ம் வகுப்பு மாணவர், செவிலியர் மாயமானர்கள்.
- மாரனேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகரத் அருகேயுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 29). இவரது மனைவி தெய்வலட்சுமி (25). சுப்பு ராஜ் தனியார் நிறுவனத் தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கி டையே தெய்வலட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
வாலிபருடன் காதல்
திருமணத்துக்கு முன்ன தாக தெய்வலட்சுமி அயன் ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரை காத லித்து வந்துள்ளார். அத னால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் மல்லாங்கிணறு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான தெய்வலட்சுமியை தேடி வருகிறார்கள்.
பள்ளி மாணவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவரது மகன் 16 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் பின்னர் மாயமானார். இதுபற்றி அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நர்சு மாயம்
சிவகாசி அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசின்னம்மா (வயது 40). இவரது 18 வயது மகள் 10-ம் வகுப்பு முடித்து விட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் வெளியில் சென்றார்.
அதன்பிறகு அவரை காண வில்லை. இதுகுறித்து தங்க சின்னம்மா கொடுத்த புகா ரின் பேரில் மாரனேரி போலீசார் விசாரித்து வருகி றார்கள்.
- தன்னார்வ தொண்டு மற்றும் சமூகசேவை குறித்து சான்றிதழ் படிப்பு பெற கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
- விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட அள வில் கிராம ஊராட்சிகளுக் கான மாவட்ட வளமையத் தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வ தொண்டு மற் றும் சமூகசேவை குறித்து மூன்று மாத சான்றிதழ் படிப்பு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வகுப்பு ஆறு நாட்கள் நேரடி வகுப்புகளாக (கள ஆய்வு உட்பட) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படும்.
மேலும் கிராம அளவில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், ஊராட்சிமன்ற அலுவ லகங்கள், வட்டாரவளர்ச்சி அலுவலகங்கள், அங்கன் வாடிகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பபள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை குறித்து கள ஆய்வு மேற் கொண்டு அறிக்கை சமர்ப் பிக்க வேண்டும். ஊராட்சி களுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட முன்மாதிரி ஊராட்சிகளுக்கு களப்பய ணம் அழைத்துச் செல்லப்ப டும்.சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங் கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியா ளர்கள், கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 12-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் சேர 18 வயதுமுதல் 45 வயதுவரை உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேரகட்டணமாக ரூபாய் 1000 செலுத்தப்பட வேண் டும். பயிற்சிக் கட்டணம் செலுத்துவது குறித்தும் இப் பயிற்சி தொடர்பான விப ரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட வளமைய அலுவல ரின் 73976 35445 தெலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
- கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
- மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் வெளியுட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட் டி ன்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர வங்கிகள், நகர கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஆ ள் சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து vnrtrb.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற டிச.1-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம், பல்கலை கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்க ளில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல்வழி பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு சான்று கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
முற்பட்ட வகுப்பினருக் கான வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு, பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கணக்கியல், கணினி அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். ஒட்டுமொத்த மதிப்பெண், இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.
- விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
- நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பனை யூர் பகுதியை சேர்ந்த வர் வெங்கலமுத்து (வயது 47). இவர் நரிக்குடி ரெயில் நிலையம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக் கும் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 16-ந்தேதி இரவு பணி முடிந்து சொந்த ஊரான பனையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாக னத்தில் நரிக்குடி-திருச்சுழி சாலையில் சென்று கொண் டிருந்தார். அப் போது விடத்தக்குளம் அடுத்துள்ள மேலேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் வெங்கலமுத்து விற்கு முன்பக்க தலையில் பலத்த அடி விழுந்த நிலை யில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத் தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வெங்கலமுத்துவை மீட்டு தனியார் வாகனம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விபத்து குறித்து அவரது மனைவியான கெங்கம்மாள் (44) கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர். இந்த நிலையில் தீவிர சிகிச்சையிலிருந்த வெங்கல முத்து சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
- மினி பஸ் மோதி சிறுவன் பலியானான்
- தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
அருப்புக்கோட்டை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் திவான். இவரது தாய் மீரான்பீவி (வயது 70), மனைவி, 3 வயது மகன் தானிஷ்அகமது ஆகியோர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இன்று காலை வந்தனர்.
அருப்புக்கோட்டை புது பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடிப்பதற்காக மதுரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது தவறான வழியில் வேகமாக வந்த மினி பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தானிஷ்அகமது சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தான். மீரான் பீவி, திவானின் மனைவி மற்றும் அங்கு நின்றிருந்த கருப்பசாமி, லட்சுமிபிரியா ஆகியோர் காயம் அடைந்த னர்.
தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.






