காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை

விருதுநகர் அருகே காதல் தோல்வியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்பெண் தரமறுத்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகர் ஏ.டி.புது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது சகோதரர் ஜான்பிரதீப் (வயது 20). பட்டப்படிப்பை பாதியி லேயே நிறுத்தி விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பெற்றோர் இல்லாததால் சகோதரர்கள் தாத்தா பராமரிப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் ஜான் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரை சந்தித்த ஜான்பிரதீப் திருமணத்துக்கு பெண் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பெண் தர மறுத்து விட்டனர்.

இதனால் ஜான்பிரதீப் கடும் மனஉளைச்சலில் இருந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜான்பிரதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சகோதரர் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com