பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு முதிர்வு தொகை

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு முதிர்வு தொகையை கலெக்டர் வழங்கினார்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவார ணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி னார். சமூகநல அலுவ லகத்தின் கீழ் செயல்படும் முதலமைச்ச ரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த 45 பயனாளிகளுக்கு முதிர்வு தொகையாக ரூ.18 லட்சத்து 20 ஆயிரத்து 10-க்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பில் இலவச தையல் எந்திரங் களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com