search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
    X

    சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

    • கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் கோவில் பவுர்ணமி, பிரதோஷ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச் சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு கட்டாறுகள் மற்றும் நீரோடைகளை கடந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 10 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

    இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கடந்த மாதம் அமாவாசை வழிபாட்டிற்கு கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழிபாடு செய்ய முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த கோவிலுக்கு மலையேறிச் செல்வதற்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    Next Story
    ×