என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

    இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்தார்.

    பின்னர் டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் கோவில் பவுர்ணமி, பிரதோஷ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச் சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு கட்டாறுகள் மற்றும் நீரோடைகளை கடந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 10 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

    இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கடந்த மாதம் அமாவாசை வழிபாட்டிற்கு கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழிபாடு செய்ய முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த கோவிலுக்கு மலையேறிச் செல்வதற்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    • சிவகாசி பகுதியில் உரிமமின்றி இயங்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்.
    • இந்த தகவலை ஊராட்சி ஒன்றிய தலைவி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி

    சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவி முத்துலட்சுமி கூறியதாவது:-

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

    எனவே, சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதி யில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா், ஆணையா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக்குழு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் இயங்கி வரும் தொழில் சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வழங்கும். அதன் பிறகு உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலநிலை பாதிப்புகள் அடுத்துவரும் சந்ததிகளுக்கு பிரச்சினையை உண்டாக்கும்.
    • விருதுநகர் சுற்றுச்சுழல் கருத்தரங்கில் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சுற்றுச் சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், காலநிலை மாற்றம் இயக்கம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கம் உதவி இயக்குநர் மணிஷ்மீனா, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி னார். கருத்தரங்கில் கலெக் டர் மற்றும் அதிகாரிகள் பேசினர்.

    அதில் இந்தியரின் சரா சரி ஆயுட்காலம் 73 ஆண்டு கள். இந்தியாவின் டெல்லி போன்ற நகரங்களில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்கா லம் காற்று மாசால் 6 ஆண்டு கள் குறைகிறது என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டில் 4-ல் 3 பங்கு மக்கள் நகரங்கள் மற்றும் நகரங்கள் ஒட்டி பகுதிகளில் தான் வசிப்பார் கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக் கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சி னைகள் அதிகமாகும். மேலும், வெப்பநிலை படிப் படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நகரமயவாவதில் முன்னி லையில் இருப்பது தமிழ்நாடு தான்.காலநிலை மாற்றத் தால் கடல் மட்டத்தில் இருந்து வெப்பம் அதிகமாக வருவதால் பலத்த காற்றுடன் வெப்ப சலனம் மழை அதிக மாக உள்ளது. சில இடங் களில் பருவமழை பொய்த்து தண்ணீருக்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை யும் உள்ளது.இந்த பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், நம் அடுத்த சந்ததிகளுக்கு இது மிகவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்க வழி வகுத்திடும்.

    இந்தியா போன்ற அதிக மான மக்கள் தொகை வாழக்கூடிய நாடுகளில் இது குறித்து அதிகமாக பேசு வதற்கும், சிந்திப்பதற்கும் மிக முக்கியமான தேவை இருக்கிறது. இதை அனை வருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற கருத்தரங் குகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்ராஜ், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் திருமேனி மகன் அசோக்குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரை வீரன். இவர்கள் இருவரும் திருச்சுழி-அருப்புக் கோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் வேகமாக கடக்க முயன்று உள்ளனர்.

    அப்போது ராமேசுவ ரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக்குமார், மதுரைவீரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் 70-க்கும் மேற்பட் டோர் திருச்சுழி-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மணி கண்டன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சுந்தர பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருச்சுழி- அருப்புக்கோட்டை சாலை தமிழ்ப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பாதாள சாக்கடை-கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டி மூடப்படாத குழிகளால் தொடரும் விபத்துகள் அதிகரித்துள்ளது.
    • சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறைந்து கொண்டே செல்கிறது. நக ரின் நுழைவு வாயிலான பஞ்சு மார்க்கெட் முதல் யூனியன் அலுவலகம் வரை மிக மோசமான நிலையில் உள்ள சாலையால் நாள் தோறும் நடக்கும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

    அதிலும் ஒரு மணி நேரம் மழை பெய்துவிட்டால் சாலை எது, சாக்கடை எது என்று தெரியாத அளவுக்கு மூழ்கிவிடுகிறது. பாதசாரி கள் முதல் வாகனங்களில் பயணம் செய்வோர் திக்கு தெரியாமல் தடுமாறும் நிலை இன்றளவும் தொடரத் தான் செய்கிறது.

    இதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தை வலியுறுத்தி ராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று (21-ந்தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு அனுமதி வழங்கப் படாத நிலையில் உண்ணா விரதம் இருக்க முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில அடைத்து வைத்தனர். கைதானவர்கள் அங்கும் தங்களது போராட் டத்தை தொடர்ந்தனர்.

    ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரப ரணி கூட்டு குடிநீர் திட்டப்ப ணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெற்ற தென்காசி சாலை கடந்த இரண்டு ஆண்டு காலமாக போக்கு வரத்துக்கு லாயக்கற்று மிக மோசமான நிலையில் உள் ளது. இச்சாலையில் பய ணித்த பலரும் விபத்துக்குள் ளாகி உள்ளனர். கடந்த ஆண்டு ஒரு மாணவன் உயி ரிழந்ததுடன், பலருக்கு கை, கால் முறிவு, முதுகுத் தண்டு வட பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.

    எனவே இந்த சாலையை சரிசெய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். அதன் அடிப்படையில் இச்சா லையை ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் இந்தச் சாலை போக்குவரத் துக்கு பயன்பாடு உள்ள வகையில் நன்றாக உள்ளது என சான்று அளித்தது கூட்டமைப்பு நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.

    இந்நிலையில் தான் 12 மணி நேரம் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதி அனுமதி கேட்ட நிலையில் நேற்று 20.11.23 இரவு 11 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இரண்டு வருட காலமாக மக்கள் துன்பத்திற்கு முடிவு கிடைக்காத நிலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டால் அதை தடுக்கக்கூடிய வகையில் காவல்துறைக்கு நிர்பந்தம் இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களுடைய உணர்வு களை வெளிப்படுத்தும் வித மாக தடையை மீறி ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் ஜவகர் மைதானத்தில் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட ஒருங்கிணைப் பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணி–கண்டன் தலைமையில் பங்கேற்றோர் கைதானார் கள்.

    இந்த போராட்டம் நடை பெற்ற ஒரு மணி நேரத்திற் குள் சாலைகளை (பேட்ச் ஒர்க்) சரி செய்யும் பணி களை தமிழக நெடுஞ்சா லைத்துறை துவக்கியுள்ளது. நிரந்தரமாக பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென் றால் பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை புதிதாக சாலை அமைக்கப்பட வேண்டும். எனவே அதற்கான முயற்சி களை தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணையம் செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை விரை வில் அறிவிப்போம் என சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்.

    நேற்று மதியம் டயருக்கு பஞ்சர் ஒட்டியது போல தென்காசி செல்லும் மெயின் ரோடான தேசிய நெ(கொடு)ஞ்சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்து முடிக் கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு மேல் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் ஒட்டுப்போட்ட சாலை பணி கள் ஒட்டுமொத்தமாக கரைந்து காணாமல் போனது. எனவே இனிமே லும் இதுபோன்ற மக்களை ஆறுதல் படுத்தும் பணிகளை கைவிட்டு சாலை சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு முதிர்வு தொகையை கலெக்டர் வழங்கினார்.
    • விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவார ணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி னார். சமூகநல அலுவ லகத்தின் கீழ் செயல்படும் முதலமைச்ச ரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த 45 பயனாளிகளுக்கு முதிர்வு தொகையாக ரூ.18 லட்சத்து 20 ஆயிரத்து 10-க்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பில் இலவச தையல் எந்திரங் களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
    • குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தனமாரியம்மன் கோவில் சேர்ந்தவர் முனீஸ்வரன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (வயது 36). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலி வேறு ஒரு வாலிபரிடம் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால் மீண்டும் கர்ப்பம் ஆனார்.

    பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசுடலிக்கு கடந்த 18.10.2023 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு தற்போது பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் நினைத்தார்.

    இதையடுத்து குழந்தையை கொல்லும் எண்ணத்தை கைவிட்டு, தனது கணவர் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தையை விற்றுவிட முத்துசுடலி முடிவு செய்தார். அதன்படி தனது விருப்பத்தை சேத்தூரை அடுத்த முகவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜேஸ்வரி (54) என்பவரிடம் கூறியுள்ளார்.

    அவர் மற்றும் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோர் மூலம் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு பிறந்த 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடந்த 25.10.2023 அன்று முத்துசுடலி விற்றுள்ளார்.

    இதற்கிடையே வீடு திரும்பிய முத்துசுடலிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாய்ப்பால் கொடுக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுத்த ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். முதலில் பல்வேறு மழுப்பலான பதில்களை கூறிய முத்துசுடலி, பின்னர் குழந்தையை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் முத்துசுடலியிடம் விசாரணை நடத்தியபோது பிறந்த 7 நாட்களில் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதுபற்றி திருப்பதி மற்றும் விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முத்துசுடலியிடம் அதிரடியாக விசாரணை நடத்தினார். இதில் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் ஈரோட்டை சேர்ந்தவருக்கு ரூ.3½ லட்சத்துக்கு விற்றதும் அம்பலம் ஆனது. அந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை குழந்தையின் தாய் முத்துசுடலிக்கும், மீதமுள்ள ரூ.1½ லட்சம் புரோக்கர் மற்றும் மற்ற பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதனை அடிப்படையாக கொண்டு குழந்தையை விற்ற முத்துசுடலி, முகவூர் ராஜேஸ்வரி, நாமக்கல் குமாரபாளையம் செல்வி, குழந்தையை வாங்கிய ஈரோடு அசினா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள புரோக்கர் ஜெயபாலை தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார் விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரித்து வருகிறார்கள்.

    ராஜபாளையத்தில் பிறந்த ஒரு வாரமேயான ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சமூக விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி. குழந்தை திருமணம் தொடர் பாக இவருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.அப்போது விருதுநகர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த சிறுமிக்கும், செங்கமலப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவ ருக்கும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உறவினர் முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதற்கு முனியசாமியின் பெற்றோர் கருப்பசாமி, செல்லத்தாய், உறவினர் மற்றொரு கருப்பசாமி ஆகி யோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி முனியசாமி உள்பட 4 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • விருதுநகர் அருகே காதல் தோல்வியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • பெண் தரமறுத்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் ஏ.டி.புது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது சகோதரர் ஜான்பிரதீப் (வயது 20). பட்டப்படிப்பை பாதியி லேயே நிறுத்தி விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பெற்றோர் இல்லாததால் சகோதரர்கள் தாத்தா பராமரிப்பில் இருந்தனர்.

    இந்த நிலையில் ஜான் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரை சந்தித்த ஜான்பிரதீப் திருமணத்துக்கு பெண் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பெண் தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஜான்பிரதீப் கடும் மனஉளைச்சலில் இருந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜான்பிரதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சகோதரர் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி கணேஷ் காலனியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கலைச்செல்வன் (22). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கலைச்செல்வன் சுடுகாட்டுக்கு சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்தனர். அதற்கு கலைச்செல்வன் சிறிது நேரத்தில் வருவதாக கூறி உள்ளார். குடும்பத்தினர் அங்கிருந்து சென்ற பின்னர் அருகில் உள்ள தோட்டத் துக்கு சென்ற கலைச் செல்வன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக் குளித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இளம்பெண்

    காரியாபட்டி அருகே உள்ள கழுவனச்சேரியை சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவரது மகள் முத்துஈஸ்வரி (வயது 17). இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.

    ஆனால் முத்துஈஸ்வரி அதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த முத்துஈஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×