என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளும் சான்றி தழ்களை வழங்கினார்.
கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்பட 5 ஊர்களில் நடத்தப்பட்டு இறுதியாக ராஜபாளை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் நினைவு சுழற் சின்னம் (செங்கோல்) வழங்கப்பட்டது. அதனை முதல்-அமைச்சரின் பார்வைக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இயற்கை வளங்களை பாதுகாத்து நமது பாரம்பரிய விலங்கான யானைகளை பாதுகாப்பது அனை வருடைய கடைமையாகும். ராஜபாளையம் தொகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறு வதற்கு வசதியாக ராஜபா ளையம் தொகுதிக்கு தனி யாக புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப் படும் பணிகள் மருத்துவ மனையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் துணைவியார் நிர்மலா ராஜபாளையம் தொகுதி வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு நல்லபல திட்டங்களை செயல் படுத்திக் கொண்டு வரு கிறார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலா, நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் அருகே கணவர், கர்ப்பிணி மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
- 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சிவகாமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா தேவி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை முனீஸ்வரன் வீட்டில் ஏற்றுக் கொண்ட னர். ஆனால் சுஷ்மிதா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரனின் உறவி னர்கள் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரனின் பெற்றோர் வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் சுஷ்மிதா தேவி கர்ப்ப மடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுஷ்மிதா தேவியின் பெற்றோர் சமாதானம் அடைந்து தலை தீபா வளிக்கு தம்பதிகளை முறைப்படி அழைத்துச் சென்றனர். சுஷ்மிதா தேவி கர்ப்பமாக இருப்பதால் ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். அவரைப் பார்க்க முனீஸ்வ ரன் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று முனீஸ்வரன் தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கல வடியான்-ராதா தம்பதி யின் மகன் மோகன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை கிண்டல் செய்து பேசியுள்ளார். இது குறித்து சுஷ்மிதா தேவியின் பெற்றோரிடம் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முனீஸ்வரன், சுஷ்மிதா தேவி மற்றும் அவரது பெற்றோர் மோகனின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளனர்.
அப்போது மோகனின் குடும்பத்தாரும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த உறவினர்களும் மோகனுக்கு ஆதரவாக அங்கு திரண்ட னர். இருதரப்புக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரனை மண்வெட்டி கம்பால் அவர்கள் தாக்கி னர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதை தடுப்பதற்காக குறுக்கே புகுந்த சுஷ்மிதா தேவியையும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மோகன், அவரது பெற்றோர், சக்தி வேல், வனிதா, வில்லரசி, கற்பகமணி, மாரியம்மாள், முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
- வயல்களில் மழைநீர் புகுந்து வெங்காயம்-மக்காசோள பயிர்கள் சேதமடைந்தது.
- எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பருமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் விவசாய பணிகளை மும்முரமாக மேற்கொண்டு தங்களது நிலங்களின் தன்மைக்கு ஏற்ப நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பல்வேறு வேளாண் பயிர்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தற்போது களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் விவசாய பணிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்தும், கூடுதல் வட்டிக்கு வெளியில் கடன் வாங்கியும் பல்வேறு சிரமத் திற்கு இடையே விவசாய பணி களை மேற் கொண்டு வரு கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் அப்பகுதியிலுள்ள பல்வேறு ஓடைகள் நிரம்பி அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறவர் பெருங்குடி, எம்.மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, சலுக்கார்பட்டி, கஞ்சம்பட்டி, சுத்தமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கம்பு போன்ற பல்வேறு பயிர்களின் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் மிகவும் சேதமடைந்தது. இதனால் கடன் வாங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில் இவ்வாறு அறுவடை நேரத்தில் மழை வெள்ளம் புகுந்து வெங்காயம் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமான தால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந் துள்ளனர்.
மேலும் தற்போது 2023- 2024 க்கான நெல், சோளம், பருத்தி போன்ற பல்வேறு விளை பொருட்க ளுக்கு குறைந்த பட்ச பிரீமிய தொகையாக ரூ.120-ல் தொடங்கி அதிக பட்சமாக ரூ.500 வரை பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகிய விளை பொருட்களால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணத்தை இழப்பீடு தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அனைவரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 15 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
- இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
கடந்த 18-ந்தேதி மாணிக்கம்தாகூர் எம்.பி. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில் விருதுநகரில் கடந்த 19-–ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக் கான அழைப்பிதழில் மாவட்ட எம்.பி.க்கள் பெயர் இடம் பெறவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் நடை முறைக்குழு சார்பில் துணை செயலாளர் பாலகுரு அனுப்பியுள்ள கடி தத்தில், மத்திய நிதி அமைச்சகத்திற்கு இது குறித்து நிகழ்ச்சி நடத்திய வங்கி, 15 தினங்களுக்குள் விளக்கம் பெற்று அனுப்பு மாறும், இதுகுறித்த அறிக்கை நாடாளுமன்ற சபா நாயக ருக்கும் நிதி மந்திரிக்கும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதுகுறித்த தகவல் நாடா ளுமன்ற உறுப்பி னருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடவ டிக்கை எடுத்ததற்காக நாடாளுமன்ற சபாநாய கருக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் இது ஒரு சரியான பாடமாக அமையும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
- ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டப்பட்ட பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 116-வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ரூ.8.47 லட்சம் மதிப்பில் ராமசாமி புரம் ஊரணியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியி னையும், ரூ.6.09 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட் டார்.
பாலவநத்தம் கிரா மத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் பணியினையும், மலைப் பட்டி கிராமத்தில், 2020-23 பாரளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி யினையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.
- ராஜபாளையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- பணப்பிரச்சினையில் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை நட்டு விவசாயம் பார்த்து வரு கின்றனர்.
இந்த நிலையில் விவசாய பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் நடந்து செல் லும் பகுதியில் அடையா ளம் தெரியாத நிலையில் ஆண் உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.
பின்னர் உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்ட னர்.
மேலும் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒருவர் மட்டும் அமர்ந்து மது அருந்தி யது போன்றும், சில் லறை காசுகள் சிதறிக் கிடப்பதையும் பார்த்த போலீசார் மது அருந்திவிட்டு பிணமாக கிடந்த நபர் உட லில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசார ணையை தொடங்கினர்.
மேலும் அக்கம்பக்கத்தில் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா அல்லது குடும்ப பிரச்சினை காரண மாக வெளியேறினார்களா என்றும் விசாரணை நடத் தப்பட்டது. அதில் சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. காலனி சிரஞ்சீவி நகரில் வசித்து வரும் சரவணகுமார் (வயது 48) என்பவர் அதிக மன அழுத்தத்துடன் காலை வீட்டிலிருந்து வெளியேறி யது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்க ளுக்கு தகவல் தெரிவித்து அடையாளம் கூற அழைத்து வந்த நிலையில் இறந்தவர் குறித்த முழு விவரமும் தெரிய வந்தது. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் சரவணகுமார் என்றும், அவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், சீதாலட்சுமி எனும் கல்லூரியில் படிக்கும் மகளும், விஜய் என்ற மக னும் உள்ளது தெரிய வந் தது.சரவணகுமார் ராஜபா ளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மம்சாபு ரம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேற்பார்வையாள ராக பணியாற்றி வரவு, செலவு கணக்குகளை பார்த்து வந்துள்ளார். இதற் கிடையே கடந்த தீபாவளி தினத்தன்று பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக் குகளை சரிபார்க்கும் பொழுது கணக்கில் குளறு படி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை சரவணகுமார் பெட்ரோல் பங்கிற்கு கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் தீபாவளி முடிந்த நாளிலிருந்து பணிக்கு செல்லாமல் பெட் ரோல் பங்கிற்கு கட்ட வேண் டிய தொகையை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
வேலைக்கு செல்லாதது குறித்து குடும்ப உறுப்பினர் கள் கேள்வி எழுப்பிய போது ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும் என்பதை மட்டும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் உதவியு டன் ரூ.30 ஆயிரம் பணத்தை பெட்ரோல் பங்க் நிறுவ னத்திலும் கட்டியுள்ளார். மீதம் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை எப்படி தயார் செய்வது என நண்பர்களிடம் கூறி புலம்பி யுள்ளார்.
இந்தநிலையில் அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவி மலை பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
பணப்பிரச்சினையில் தற் கொலை செய்த கணவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.
- திருச்சுழி பஜாரில் 22 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில் திருச்சுழி பஜாரில் அதிகளவில் புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையிலான தனிப் படை போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.
அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குப்பையுடன் 2 பேர் சுற்றிக்கொண்டி ருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கிய போது தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீ சார் அவர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் திருச்சுழி முத்து ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (52), கேத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 கிலோ அளவுக்கு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வந்த போதிலும் அவற்றின் விற்பனை ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தனிப்படை போலீசார் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.
- வீட்டு வசதி வாரிய மனைநிலங்கள் விற்பனையில் புதிய நடைமுறையை கைவிட வேண்டும்.
- சாமானியர்கள், நடுத்தர வகுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனை நிலங்களை முதல் விற்பனையின்போது குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கமான நடைமுறை.
இந்த நடைமுறையின் போது சதவீத அடிப்படை யில் ஆதிதிராவிடர்களுக்கு 18, பழங்குடியினருக்கு 1, அரசு ஊழியர்களுக்கு 18, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8, ராணுவத்தினருக்கு 7, சலவையாளர்கள் மற்றும் மருத்துவ சமுதாயத்தினருக்கு 4, பத்திரிகையாளர்களுக்கு 3, மொழிப்போர் தியாகிகளுக்கு 1, வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு 38 என்ற அடிப்படையில் மனை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது வீட்டு வசதி வாரியம் இந்த நடை முறையை கைவிட்டு மனைநிலங்கள் முதல் விற்பனையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் மனை நிலங்களை விற்பனை செய்யும் நடை முறையால் ஒதுக்கீட்டு முறையில் தேர்வு செய்யப் படாமல் சாமானிய, நடுத்தர மக்களுக்கும் மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இதுவரை வீட்டுவசதி வாரிய மனை நிலங்களுக்கு சந்தை விலையை விட 20 சதவீதம் விலை குறை வாகவே நிர்ணயம் செய்து வந்தது. ஆனால் தற்போது சந்தை விலையை கணக்கிட்டு அதன் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு புதிய நடைமுறையான முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் விற்பனை செய்வதை கைவிட்டு பழைய ஒதுக்கீட்டு நடை முறையை பின்பற்றுவதோடு 2-வது விற்பனையில் வேண்டுமானால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
- விருதுநகர் அருகே பெண்ணை தாக்கிய கள்ளக்காதலன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இதுகுறித்து முதலமைச்சர் தனிபிரிவில் புகார் கொடுத்தார்.
விருதுநகர்
திருத்தங்கல் புதிய ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வருபவர் மாலா பிரியதர்ஷினி (வயது42). இவர் கணவரை பிரிந்தவர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவசந்திரன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.
அப்போது 16 பவுன் நகைகள், ரூ.4½ பணம் ஆகியவற்றை தொழில் தேவைக்காக மாலா பிரிய தர்ஷினியிடம் சிவகங்கர் வாங்கியுள்ளார். பல நாட்களாகியும் அதனை திருப்பித்தரவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் தட்டிக் கழித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த மாலா பிரியதர்ஷினி நகை, பணத்தை திருப்பித்தரும்படி சிவசங்கரிடம் வலியுறுத்தி யுள்ளார்.
இந்தநிலையில் சிவசங்கர் தனது உறவினர்கள் கார்த்தி, தேவி உள்பட 4 பேருடன் வந்து பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலா பிரியதர்ஷினி இது தொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே திருத்தங்கல் வீட்டிற்கு வந்து அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனக்கூறி
- சிவகாசி அருகே இளம்பெண் மாயமானார்.
- கள்ளக்காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
பெரம்பூர் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது34). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி லட்சுமி (33) திருச்சி துறையூரைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முகேஷ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்து வருகிறார். லட்சுமி அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ராஜா என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது.
நாளடைவில் அவர்கள் அடிக்கடி மணி கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை முகேஷ் குமார் கண்டித்து வந்தார். ஆனால் மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிவகாசி விஸ்வநத்தம் பகுதிக்கு மனைவியை முகேஷ்குமார் அழைத்து வந்தார். அதன் பின்னர் இங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் முகேஷ்குமார் வெளியே சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும், பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவியை கண்டுபிடித்து தரும்படி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் முகேஷ்கு மார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே பழகிவந்த ராஜாவை தேடி லட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா? என விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் மானிய கடன்களை அமைச்சர் வழங்கினார்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர்.
விருதுநகர்
சென்னையில் வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு விருதுநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவி லான கள நிகழ்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
5 தொழில் முனை வோர்களுக்கு ரூ.6.81 கோடி திட்ட மதிப்பிலான கடனுத விகளையும், 34 தொழில் முனைவோர்களுக்கு ரூ.84.48 லட்சம் மதிப்பில் மானியத்திற்கான காசோ லைகளையும், 114 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1524.82 கோடி மதிப்பில் மாவட்ட த்தில் முதலீடு செய்து தொழில் புரிவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொரு ளாதாரம் கொண்ட மாநில மாக உயர்த்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் வருகின்ற ஜனவரி மாதம் 07 மற்றும் 08 தேதிகளில் "சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாடு 2024"-க்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தவும், வெளி நாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த பல்வேறு முதலீட்டா ளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்டமாக 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் ரூ.1500 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
- விசாரணை நடத்திய போலீசார் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கணேஷ் குமாரை கைது செய்தனர்.
- நிலத்திற்கு சொந்தக்காரர் வெளிமாநிலத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மோசடி நடந்துள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் தொழில் நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டம் திவாடி என்ற ஊரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 5.6.2022 அன்று ராஜபாளையத்தை அடுத்த கீழராஜகுலராமன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசியார்பட்டி கிராமத்தில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான 9.64 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். பின்னர் அந்த இடத்தை தான் மற்றும் தனது மனைவி பெயரில் பதிவு செய்து பத்திரமும் வாங்கினார்.
இதற்கிடையே அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரனின் நண்பரான முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10.1.2023 அன்று ஒரு வாட்ஸ்அப் தகவலை ராஜேந்திரனுக்கு அனுப்பினார். அதில் உங்களுக்கு சொந்தமான 9.64 சென்ட் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜபாளையம் வந்தார். பின்னர் அவர் தனது பெரியப்பா வீட்டில் வைத்து இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த மோசடி குறித்து மேலோட்டமாக விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதாவது, ராஜேந்திரனும், அவரது மனைவியும் இறந்து விட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து, அவர்களது வாரிசாக சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரை நியமித்து அவரது பெயருக்கு இந்த நிலத்தை மாற்றி பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பத்திர எழுத்தர் சுகுணா, கோவையை சேர்ந்த குமார், செட்டியார்பட்டியைச் சேர்ந்த நாராயணன் மகன் முத்துகிருஷ்ணன், இந்த பட்டாவை மாற்றி நில மோசடிக்கு சாட்சி கையெழுத்திட்ட கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த முருகன், முருகேசன் மற்றும் போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து நிலத்தை அபகரிக்க மகனாக நடித்த கணேஷ்குமார் ஆகிய 6 பேர் மீதும் நிலத்தை பறிகொடுத்த ராஜேந்திரன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கணேஷ் குமாரை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நிலத்திற்கு சொந்தக்காரர் வெளி மாநிலத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த மோசடி நடந்துள்ளது.
பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க உயிருடன் இருப்பவர்களை இறந்து விட்டதாக போலியான சான்றிதழ் தயாரித்து, அவர்களுக்கு வாரிசாக ஒருவரை நியமித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






