என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கிராம பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம பூசாரிகளின் ஒன்றிய அளவிலான பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம பூசாரிகள் பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் முத்து தலைமை தாங்கினார். பேரவை ஒன்றிய அமைப்பாளர் அரிமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைக்க வில்லை எனவும், நலவாரிய உதவிகள் கிடைக்க வில்லையெனவும் பூசாரிகள் முறையிட்டனர். மேலும் கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் நலவாரியம் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமெனவும், அரசு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிராமப்புற பூசாரிகளுக்கு கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  

    • புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேட்டமலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பெட்டிக் கடையில் புகையிலை பதுக்கி விற்றதாக கைது செய்யப் பட்டார். இதே போல் நல்லான் செட்டி பட்டியை சேர்ந்த ஜெய கிருஷ்ணன் புகையிலை விற்றதாக கைதானார். இவர்களிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விருதுநகர் அருகே மல்லாங்கிணறு வலுக்கலொட்டி பகுதியை சேர்ந்தவர் உமையொரு பாகம். இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பாக்கெட்டு களை விற்றதாக மல்லாங்கிணறு போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 3 ஆயிரம் மதிப் புள்ள புகையிலை பாக்கெட் டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

    இதேபோல் சேத்தூர் போலீசார் சம்பவத்தன்று ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் உள்ள தேவி பட்டினம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் புகையிலை பாக்கெட் டுகள் கடத்தியது தெரிய வந்தது. காரில் வந்த தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த கார்த்திக், ராஜபாளையம் முகவூரை சேர்ந்த ஜான்வின்சென்ட் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அருப்புக்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் தலைமை தாங்கி னார். மாவட்ட பார்வையாளர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார்.

    அருப்புக்கோட்டையில் உள்ள செவல் கண்மாய் துமைக்குளம் கண்மாய் பெரியகண்மாகளை சூழ்ந் துள்ள ஆகாயத்தாமரை களை அகற்ற வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட வேண்டும் இந்த தோண்டப்பட்ட குழி களால் பல இடங்களில் விபத்து நடக்கிறது.

    அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.

    சாலை, குடிநீர் வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் வஞ்சிக்கும் அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், நகர பொதுச்செயலாளர் பாண்டி ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட விளையாட்டு போட்டியில் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார்.

    Virudhunagar News Rhythm Special School students achievement

    ராஜபாைளயம்

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளியை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி கனிமொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் கவுரி முதலிடமும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான கிரிக்கெட் பந்து எரிதலில் சுஹேல் முதலிடமும், மற்றும் தடை தாண்டி ஓடுதல் பெண்கள் பிரிவில் அமலா முதலிடமும், ஆண்கள் பிரிவில் நந்தகுமார் முதலிடம் வெற்றி பெற்றனர். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவிதா மூன்றாம் இடமும், ஓடி நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில். தீபக் மூன்றாம் இடமும், தடைகளை தாண்டி ஓடுதல் ஆண்கள் பிரிவில் சிவகுருநாதன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டியில் வென்ற மாணவர்களை ரிதம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங்டிரஸ்டி கதிரேசன், செகரட்டரி,பால்ராஜ் மற்றும் டிரஸ்டிகள் கோடியப்பன், ,கவுதமன், இளங்குமரன் ஆகியோர் பாராட்டினார்கள். முதல்வர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்..முன்னதாக ஆசிரியை கிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்..

    • சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின.
    • தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் 1,070 பட்டாசு ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழி லாளர்களும், உப தொழில் கள் மூலம் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்ற னர்.

    ரூ.6 ஆயிரம் கோடி

    ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றா லும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக் கும் ஓய்வறியா மனிதர் களை கொண்ட ஊர் சிவ காசியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி விற் பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைபடுத்தியுள்ளது.

    கடைசி நேர பட்டாசு வெடி விபத்துகள், அதிகாரி களின் ஆய்வுகள் பட்டாசு விற்பனையை பாதித்த போதிலும் அதையும் தாண்டி பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாக விற்ப னையாளர்கள் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த 11-ந்தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைக ளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர்.

    ஆயத்த பணிகள்

    பட்டாசு அறைகளுக்கு வெள்ளை அடிப்பது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பட்டாசு ஆலைகளில் பூஜை கள் போட்டு உற்பத்தி பணி களை தொடங்கியது.

    இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற் பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந் தும் பெறப்பட்ட ஆர்டர் களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர். பட்டாசு ஆலைகள் மீ்ண்டும் திறக்கப் பட்டதால் பட்டாசு ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    • உடல் முழுவதும் தீப விளக்கேற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
    • முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையம் சார்பில் பள்ளி மாணவர்கள் பாத விருச்சிகாசனம், விளக்கா சனம் முறையில் யோகா சனம் செய்து உடல் முழுவ தும் விளக்குகளை ஏற்றி கார்த்திகை தீபத்திருநாளை நடத்தி சாதனை படைத்தனர்.

    எட்டாம் வகுப்பு மா ணவர் நரேஷ், ஆறாம் வகுப்பு மாணவர்கள் ரசூல் மற்றும் அன்பரசன் ஆகி யோர் உடல் முழுவதும் ஆச னம் செய்து விளக்கு களை ஏற்றி சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பயிற்சி ஆசிரியர் நீராத்தி லிங்கம் தலைமையில் முத்து வேல், வீர சோழ திருமாவ ளவன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் உட்பட முக் கிய பிரமுகர்கள் பங்கேற்று சாதனையை பாராட்டினர்.

    • புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • காமராஜர் பிறந்த விருதுநகருக்கு பெருமை சேர்த்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 2ம் ஆண்டு புத்தக திருவிழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன் கலந்து கொண்டு புத் தக கண்காட்சியை பார்வை யிட்டார்.

    புத்தக விழாவில் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை, நிதித்துறை அமைச்சர்களின் ஆலோசனை படி சிறப்பாக புத்தக திருவிழா நடை பெற்று வருவது கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருது நகருக்கு பெருமை சேர்த் துள்ளது.

    பேரறிஞர் அண்ணா கூற்றுப்படி ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச் சாலைகள் மூடப்படும் என்பதை உணர்ந்து முன்னாள் முதல்- அமைச் சர் கருணாநிதி மிகப்பெரிய ளவில் அண்ணா நூலகம் திறந்து வைத்தார்.

    அவர்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்தி புத்தகத்தின் முக்கியத்துத்தை இளை ஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். எத்தனை தொழில்நுட்பம் கணிணி செல்போனில் படித்தாலும் புத்தகத்தை படித்தல் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்.

    ராஜபாளையத்தில் பெண்களுக்கென தனியாக நூலக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தற்போது சட்ட மன்ற நிதியிலிருந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் தொகுதியில் வேறெங்கும் நூலக வசதி தேவைப்படுமேயானால் சட்ட மன்ற நிதியிலிருந்து செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் சேத்தூர் பேரூர் சேர்மன்கள் ஜெய முருகன், பாலசுப்பிர மணியன், சேத்தூர் செட்டி யார்பட்டி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • மயானத்திற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
    • விளைநிலங்கள் வழியாக இறுதி ஊர்வலம் நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மயான கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் பாதை வசதி ஏற்படுத்தப்பட வில்லை.

    இதனால் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயா னத்திற்கு தனியார் நிலங்கள் மற்றும் சிறு குறு, நீரோடை வழியாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களில் சோளம் பயிரிட்டப்பட்டு உள்ளது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது உள்ளதால் சிறு குறு ஓடை களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவால் உயிரி ழந்த நிலையில் அவரது உடலை விவசாய நிலங்க ளில் சாகுபடி செய்யப் பட்டுள்ள பயிர்களை கடந்தும் சிறு குறு நீரோடை களை கடந்தும் ஆபத்தான முறையில் மூதாட்டியின் உடலை கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயா னத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் இறந்த வர்களின் உடலை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது.

    அதுவும் மழை காலங்க ளில் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மயானம் என்பதனால் மயான கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து உதிர்ந்து வருவதனால் கட்டிடத்தை சீரமைத்து, மயானத்திற்கு பாதுகாப்பான முறையில் சென்று வர சாலை வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் உரிய அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
    • மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. ராஜ பாளையம் அய்யனார் கோவில், தேவதானம் சாஸ்தா கோவில் மற்றும் செண்பகத் தோப்பு சாலை போன்ற பகுதிகளில் இந்த மலர்கள் வண்ணமயமாக பூத்துக் குலுங்குகின்றன.

    கார்த்திகைப் பூ எனவும், கண்வழிப்பூ எனவும் செங்காந்தள் மலர்களை அழைப்பதுண்டு. நெற்பயிர்களை தாக்க வரும் பூச்சி வண்டுகளை இந்த பூக்களை ஆங்காங்கே கட்டி எல்லையாக அமைத்தால் பூச்சி வண்டு போன்றவை தாக்காமல் இருக்கும்.

    மேலும் சித்த மருத்து வத்தில் செங்காந்தள் மலர்களின் வேர், பூ போன்ற பகுதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. புற்றுநோய், காச நோய் உள்பட பல்வேறு நோய்களை தீர்க்கவல்ல இந்த செங்காந்தள் மலரின் கிழங்குகள் பல்வேறு நபர்க ளால் செடியை வேருடன் பிடுங்கி கிழங்கை எடுத்து விட்டு செடிகளை ஆங்காங்கே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதன் காரணமாக செங்காந்தள் மலர்கள் பூத்த பத்து தினங்களுக்குள்ளேயே இவைகள் அழியத் தொடங்கி விடுகின்றன.

    கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் அந்த செடிகளை கண்டறிந்து கிழங்குகளை தோண்டி எடுத்து சித்த மருத்துவத்திற்கு பயன்படுவது வழக்கம். ஆனால் சிலர் கார்த்திகை மாதம் பிறந்த உடனே இப்பூக்களை கண்டு கிழங்கு களை தோண்டி எடுத்து சென்று விடுவதால் இந்த செங்காந்தள் மலர்கள் இனம் அழியும் அபாயத்தில் உள்ளது.

    தமிழக அரசு மற்றும் வேளாண் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி செங்காந்தள் மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டை வாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
    • (27-ந்தேதி) காலையில் வாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் உள்ள வாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி காலையில் விக்னேஸ்வரர் பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    மாலையில் பால விநாயகர், வாலசுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மறுநாள் (27-ந்தேதி) காலையில் வாலசுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மேலும் மகா தீபத்திருவிழாவையொட்டி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • சிவகாசி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மர அரவை மில்லில் வேலை பார்த்து வருகி றார்.

    இவரது மனைவி அச்சகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களது மகன் ஜெயராஜன் (வயது 19). விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தனது நண்பர்கள் மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் ஆகியோ ருடன் அழகாபுரியில் உள்ள ஒடையில் குளிக்க சென்றனர். பின்னர் மாலை யில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    மோட்டார் சைக்கிளை ஜெயராஜன் ஓட்டி வந்தார். அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    சுக்கிரவார்பட்டி பேப்பர் மில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

    மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் லேசான காயங்களுடன் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர் களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயராஜன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஜெய்சங்கர் திருத்தங்கல் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது இளைய மகன் பாலமுருகன் (வயது 22). ஐ.டி.ஐ. படித்து விட்டு சிவகாசியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சிவகாசி நாரணாபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    தாங்கள் காதலிப்பது குறித்து அவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இளம்பெண்ணின் தந்தை மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் சிவகாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அப்போது பெண்ணின் பெற்றோர் தங்களது மகளிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் பெண்ணிடம் தனியாக பேசினர். இதையடுத்து அந்த பெண் பாலமுருகனிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு மனைவியுடன் சென்ற பாலமுருகன் தனியாக கிராமத்திற்கு வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று இரவு அங்குள்ள கன்னி மாரியம்மன் கோவில் சாமி சிலைக்கு முன்பாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலமுருகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்து 12 நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×