கிராம பூசாரிகள் பேரவை கூட்டம்

கிராம பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
கிராம பூசாரிகள் பேரவை கூட்டம்
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம பூசாரிகளின் ஒன்றிய அளவிலான பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம பூசாரிகள் பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் முத்து தலைமை தாங்கினார். பேரவை ஒன்றிய அமைப்பாளர் அரிமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைக்க வில்லை எனவும், நலவாரிய உதவிகள் கிடைக்க வில்லையெனவும் பூசாரிகள் முறையிட்டனர். மேலும் கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் நலவாரியம் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமெனவும், அரசு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிராமப்புற பூசாரிகளுக்கு கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com