search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்-எம்.எல்.ஏ.
    X

    புத்தக திருவிழாவில் கலெக்டர் ஜெயசீலன், தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்-எம்.எல்.ஏ.

    • புத்தகம் வாசிப்பதால் மட்டுமே முழுமையான அறிவு பெருகும் என தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • காமராஜர் பிறந்த விருதுநகருக்கு பெருமை சேர்த்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 2ம் ஆண்டு புத்தக திருவிழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன் கலந்து கொண்டு புத் தக கண்காட்சியை பார்வை யிட்டார்.

    புத்தக விழாவில் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருவாய்த்துறை, நிதித்துறை அமைச்சர்களின் ஆலோசனை படி சிறப்பாக புத்தக திருவிழா நடை பெற்று வருவது கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருது நகருக்கு பெருமை சேர்த் துள்ளது.

    பேரறிஞர் அண்ணா கூற்றுப்படி ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச் சாலைகள் மூடப்படும் என்பதை உணர்ந்து முன்னாள் முதல்- அமைச் சர் கருணாநிதி மிகப்பெரிய ளவில் அண்ணா நூலகம் திறந்து வைத்தார்.

    அவர்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்தி புத்தகத்தின் முக்கியத்துத்தை இளை ஞர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். எத்தனை தொழில்நுட்பம் கணிணி செல்போனில் படித்தாலும் புத்தகத்தை படித்தல் மட்டுமே முழுமையான அறிவு பெருகும்.

    ராஜபாளையத்தில் பெண்களுக்கென தனியாக நூலக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தற்போது சட்ட மன்ற நிதியிலிருந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் தொகுதியில் வேறெங்கும் நூலக வசதி தேவைப்படுமேயானால் சட்ட மன்ற நிதியிலிருந்து செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் சேத்தூர் பேரூர் சேர்மன்கள் ஜெய முருகன், பாலசுப்பிர மணியன், சேத்தூர் செட்டி யார்பட்டி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×