என் மலர்
விருதுநகர்
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் ஒன்றிய ம.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அந்த நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் தெரிவித்துவிட்டு பின்னர் துரை வைகோவை கட்சியில் சேர்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இந்த கட்சிக்கு 28 ஆண்டுகாலம் உழைத்த மாவட்ட செயலாளரை நீக்கியதை கண்டித்து பொதுக்குழு உறுப்பினரும், காரியாபட்டி ஒன்றிய பொறுப்பாளருமான கடமங்குளம் கலாமணி, மாவட்ட பிரதிநிதி தோப்பூர் தங்கம், ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிளைக்கழக செயலாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அது போல நரிக்குடி ஒன்றியத்தில் ஒன்றிய அவைத்தலைவர் உறங்காபுலி, பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகைச் சாமி மற்றும் ரெட்டைகுளம், ஆவரங்குளம் பிள்ளையார்குளம், பூம்பிடாகை, இருஞ்சிரை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகள் மாறன், ஆறுமுகம் உட்பட்ட நிர்வாகிகளும் ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆனி தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
- இதனை முன்னிட்டு தேர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு சுவாமி எழுந்தருள ஒரு தேரும், அம்பாள் எழுந்தருள பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேரும் உள்ளது.
ஆனி தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. சமூக சேவகரும், ராஜபாளையம் தர்மாபுரம்தெரு, மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவருமான ராமராஜ் தலைமையில் தூசி படிந்த நிலையில் இருந்த தேர்களை ஆகம விதிகளின்படி பஞ்சகாவியம் கலந்த தூய நண்ணீர் மற்றும் ஏர்கன் முலம் சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும் வார்னிஷ் அடித்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசி பழமை மாறாமல் அழகுபடுத்தும் பணியும் நடக்கிறது. தொடர்ந்து 27வருடங்களாக இந்த பணிகளை ராமராஜ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.
- இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி சமுத்திரஜோதியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிராக்டர் கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் ராஜ்கு மாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மாடசாமி கோவில் தெரு பகுதியில் அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜபாளையம் 4-வது வார்டில் 17 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை என தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டியுள்ளார்.
- உங்கள் வார்டில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வையுங்கள் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பி.எஸ். குமாரசாமி ராஜா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்பனா, குழந்தைவேலு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, நகர்நல அலுவலர் சரோஜா உள்பட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நகர் மன்ற தலைவரின் அலுவலக நேர்முக உதவியாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தளித்தார். 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின்போது, 35-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமிராஜா திருஉருவப் படத்தை சட்டமன்ற வளாகத்தில் திறக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறார். அதே கோரிக்கையை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானமாக முன்மொழிகிறேன் என்றார். நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா அதனை வழிமொழிந்தார். அந்த தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நகர்மன்ற உறுப்பினர் ஞானவேல் பேசும்போது, ராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டபணிகள் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை. இது எனது வார்டில் மட்டுமல்ல, அனைத்து வார்டுகளிலும் இதே அவல நிலை தான் உள்ளது. அதனை முறைப்படுத்த வேண்டும் என்றார்.
4-வது வார்டு அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி பேசும்போது, 17 ஆண்டுகளாக தனது வார்டு பகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார். அதற்கு தலைவர் சார்பில் பதில் அளித்த மூத்த உறுப்பினர் ஷியாம்ராஜா, கடந்த காலத்தில் ராஜபாளையம் நகர்மன்ற தலைவராக பொறுப்பு வகித்தது அ.தி.மு.க. கட்சிகாரர்தான். அப்போது பொறுமை காத்துவிட்டு இப்போது வருந்துவது நியாயமல்ல. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம் வரலாற்றிவேயே முதன் முறையாக தி.மு.க. நகர் மன்றத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 42 வார்டுகளுமே எங்கள் வார்டு மக்கள்தான் என்ற உன்னதமான அடிப்படையில் தான் வளர்ச்சி திட்ட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அவர்கள் காலத்தில் செய்யவில்லை, இவர்கள் காலத்தில் செய்யவில்லை என மற்றவர்கள் மீது பழிபோட்டு பேசி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் வார்டில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வையுங்கள் என்றார். 17-வது வார்டு பகுதியில் செய்து முடிக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை தலைவர் பட்டியலிட்டு காட்டியவுடன் உறுப்பினர் மீனாட்சி அமைதியாகி ஆகிவிட்டார்.
நகராட்சி சுகா ரக்குழு தலைவராக தேர்ந்தெடு க்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராதாகிருஷ்ண ராஜாவுக்கு நகர்மன்றம் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் திருமலைக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
- அண்ணாமலை சிவகாசி வந்து சென்ற பிறகு சி.பி.ஐ. நடவடிக்கை தொடர்கிறது.
- தமிழகத்திற்கும், தொழில் நகரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளை, மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
இந்தியாவில் முன்னேற விழையும் 112 மாவட்டங்களில், விருதுநகர் மாவட்டத்திற்கு எம்.எஸ்.எம்.இ. விருது கிடைத்துள்ளது.
இந்த மாவட்டம் சிறு தொழில்களை அதிகம் கொண்டது. விருது வழங்கும் அதே வேளையில் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை காக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசி வந்து சென்ற பிறகு சி.பி.ஐ. நடவடிக்கை தொடர்கிறது. இது பா.ஜ.க.வுக்கும், சி.பி.ஐ.க்கும் உள்ள தொடர்பையும், அண்ணாமலைக்கும், சி.பி.ஐ.க்கும் உள்ள தொடர்பையும் காட்டுகிறது.
இதுபோன்ற நடவடிக்கை, தமிழகத்திற்கும், தொழில் நகரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி.கவுன்சில் ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சில் பா.ஜ.க.வின் துணை அமைப்பாக செயல்படுகிறது.
தேன், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை உயர்த்தி இருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை ரத்து செய்ய வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவிலை சுற்றி குவிந்து கிடக்கும் குப்பைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இந்த கோவிலானது குரு சாபம் நீக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் முறையாக குப்பைகளை அள்ளாமலும், சாக்கடைகளை தூர் வாராமலும் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் சொக்கலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது குரு சாபம் நீக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம் ஆகும். இன்னும் சில தினங்களில் அந்த கோவிலில் ஆனித்திருவிழா நடைபெற உள்ளது.
கோவிலைச் சுற்றி அந்தப்பகுதி மக்கள் கொட்டிய குப்பைகளை உடனடியாக அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், வீட்டிற்கு வீடு குப்பைகளை சரிவர வாங்க பணியாளர்கள் வருவதில்லை என்றும் அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து நகராட்சி ஆணையாளர், சேர்மன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கிரானைட் வியாபாரியிடம் ரூ. 3 லட்சம் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கிழவிக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துவாலி. இவர் அதே பகுதியில் கிரானைட் கற்களை வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இவர் தொழில் நிமித்தமாக ராஜபாளையத்துக்கு மோட்டார் சைக்கிள் வந்தார். பின்னர் அங்குள்ள அரசு வங்கிக்கு சென்ற முத்துவாலி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்தார்.
ஏற்கனவே தான் வைத்திருந்த 50 ஆயிரத்தை மும் அத்துடன் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை மோட்டர் சைக்கிளில் உள்ள தனது பெட்டியில் வைத்து பூட்டினார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு கடைக்கு முத்துவாலி சென்றார்.
இதை நோட்ட மிட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றான்.
சிறிது நேரத்தில் திரும்பிய முத்துவாலி பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை வரை தேடி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
- இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.
நேற்று 10 நிரந்தர உண்டியல், ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. அதில் ரூ. 55 லட்சத்து 5 ஆயிரத்து 70-ம், தங்கம் 231.650 கிராமும், வெள்ளி 1386.900 கிராமும் கிடைத்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டியை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை அய்யப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம்,மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
- ஆசிரியை உள்பட 4 பெண்கள் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் பானுமதி.இவரது மகள் வெண்ணிலா. இவர் சூலக்கரையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற வெண்ணிலா வீடு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலைைய சேர்ந்த 15 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று மாயமானார். அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருமலைபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள சத்திரம் புளியங்குளத்தை சேர்ந்தவர் திரிசங்கு. இவரது மகள் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் மாயமானார். காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வரு மாறு:- (அடைப்புக்குறியில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ள பகுதிகள்)
சுதாராணி (அல்லம் பட்டி), ராஜு (விருதுநகர்), உமா கணேசன் (கோட்டைப் பட்டி), சந்திரசேகரன் (ரோசல்பட்டி), கருப்பசாமி (கூரைக்குண்டு), ராஜலட்சுமி (முத்துராமன் பட்டி), செல்வி (சின்ன மூப்பன் பட்டி), லதா (நாட்டார்மங்கலம்), சர்மிளா (கோவில் வீரார் பட்டி), ராமு கார்த்திக் ராஜா (கடம்பன்குளம்), கார்த்தி கேயன் (சீனியாபுரம்), பார்த்த சாரதி (எல்லிங்க நாயக்கன் பட்டி), விஜயகுமார் (மெட்டுக்குண்டு), சுப்பு லட்சுமி (ஆமத்தூர்), லாவண்யா (வாய்பூட்டான் பட்டி), மதன்குமார் (பெரிய பேராளி), முத்துமணி (மருளூத்து), கார்த்திகேயன் (துலுக்கப்பட்டி), பெத்துராஜ் (வலையப்பட்டி), கற்பக செல்வி (எண்டப்புளி), கதிரேசன் (செங்கோட்டை), சமயன் (அப்பைய நாயக்கன் பட்டி), பழனி (சின்ன வாடி), மாரிமுத்து (ஒண்டிப்புலி நாயக்கனூர்) ஆகிய 24 கிராம நிர்வாக அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் உடனே தற்போதுள்ள பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட்டு நாளை (1-ந் தேதி) முதல் புதிய பகுதிகளில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.
- தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 5-ந் தேதி நடக்கிறது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
பேச்சுப் போட்டி பின்வரும் தலைப்புகளில் நடத்தப்படும்.
1. தமிழ்நாடு உரு வான வரலாறு, 2. மொழி வாரி மாகாணமும் தமிழ்நாட்டில்நடைபெற்ற போராட்டங்களும், 3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4. பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, 5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், 6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், 7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, 8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9. எல்லைப்போர்த் தியாகிகள், 10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு.
கட்டுரை ப்போட்டிக்கான தலைப்பு "சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்" மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேல் பகுதியில் இருந்து குதித்தபோது பாறையில் மோதியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பாறையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைனில் குடியிருப்பவர் கார்த்திகைமணி. இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் முருகப்பன்(19), நண்பர்களுடன் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள வழுக்குப் பாறையின் அருகே உள்ள தண்ணீர் கிடங்கில் குளிக்க சென்றார்.
மேல் பகுதியில் இருந்து குதித்தபோது பாறையில் மோதியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு பாறையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






