என் மலர்
நீங்கள் தேடியது "கிரானைட் வியாபாரி"
- கிரானைட் வியாபாரியிடம் ரூ. 3 லட்சம் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கிழவிக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துவாலி. இவர் அதே பகுதியில் கிரானைட் கற்களை வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இவர் தொழில் நிமித்தமாக ராஜபாளையத்துக்கு மோட்டார் சைக்கிள் வந்தார். பின்னர் அங்குள்ள அரசு வங்கிக்கு சென்ற முத்துவாலி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்தார்.
ஏற்கனவே தான் வைத்திருந்த 50 ஆயிரத்தை மும் அத்துடன் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை மோட்டர் சைக்கிளில் உள்ள தனது பெட்டியில் வைத்து பூட்டினார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு கடைக்கு முத்துவாலி சென்றார்.
இதை நோட்ட மிட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றான்.
சிறிது நேரத்தில் திரும்பிய முத்துவாலி பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை வரை தேடி வருகிறார்.






