என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காரியாபட்டி, நரிக்குடியில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ராஜினாமா
  X

  காரியாபட்டி, நரிக்குடியில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ராஜினாமா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் ஒன்றிய ம.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

  காரியாபட்டி:

  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் ஒன்றிய ம.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அந்த நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் தெரிவித்துவிட்டு பின்னர் துரை வைகோவை கட்சியில் சேர்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இந்த கட்சிக்கு 28 ஆண்டுகாலம் உழைத்த மாவட்ட செயலாளரை நீக்கியதை கண்டித்து பொதுக்குழு உறுப்பினரும், காரியாபட்டி ஒன்றிய பொறுப்பாளருமான கடமங்குளம் கலாமணி, மாவட்ட பிரதிநிதி தோப்பூர் தங்கம், ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிளைக்கழக செயலாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

  அது போல நரிக்குடி ஒன்றியத்தில் ஒன்றிய அவைத்தலைவர் உறங்காபுலி, பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகைச் சாமி மற்றும் ரெட்டைகுளம், ஆவரங்குளம் பிள்ளையார்குளம், பூம்பிடாகை, இருஞ்சிரை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகள் மாறன், ஆறுமுகம் உட்பட்ட நிர்வாகிகளும் ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×