என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sacrifices"

    • மீட்பு வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி வடக்கிப்பா ளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவரது சொந்த ஊர் மதுரை.

    எலக்ட்ரீசியான பணியாற்றிய அருண்குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் பொள்ளாச்சிக்கு வந்து குடியேறி விட்டார்.

    இவரது மனைவி கவிதா. இவர் அழகு கலை படித்துள்ளார். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு சென்று பெண்களுக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று அருண்குமாரும், அவரது மனைவி கவிதா வும் வெளியில் சென்று மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். கோவை ரோடு சேரன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மீட்பு வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அருண்குமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கவிதா படுகாயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார்.

    இந்த விபத்தில் மீட்பு வாகனத்தின் டிரைவரான ஆனைமலை தாத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் (45) காயம் அடைந்தார். அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலமுருகன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் சிக்கிய லாரி ஒன்றை ஆய்வுக்கு பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மீட்பு வாகனம் மூலம் பாலமுருகன் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது மீட்பு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடவே மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

    மீட்பு வாகனம் இழுத்துச் சென்ற லாரி, சாலையோரத்தில் நின்ற தடுப்புச்சுவர் மற்றும் அறிவிப்பு பலகையை உடைத்துக் கொண்டு தென்னந்தோப்புக்குள் பாய்ந்து நின்றது. 

    • டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.
    • இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி சமுத்திரஜோதியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிராக்டர் கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் ராஜ்கு மாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    மாடசாமி கோவில் தெரு பகுதியில் அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×