search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    17 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை:அ.தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
    X

    17 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை:அ.தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு

    • ராஜபாளையம் 4-வது வார்டில் 17 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை என தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டியுள்ளார்.
    • உங்கள் வார்டில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வையுங்கள் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பி.எஸ். குமாரசாமி ராஜா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்பனா, குழந்தைவேலு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, நகர்நல அலுவலர் சரோஜா உள்பட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    நகர் மன்ற தலைவரின் அலுவலக நேர்முக உதவியாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தளித்தார். 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின்போது, 35-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமிராஜா திருஉருவப் படத்தை சட்டமன்ற வளாகத்தில் திறக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறார். அதே கோரிக்கையை நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானமாக முன்மொழிகிறேன் என்றார். நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா அதனை வழிமொழிந்தார். அந்த தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    நகர்மன்ற உறுப்பினர் ஞானவேல் பேசும்போது, ராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாளசாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டபணிகள் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை. இது எனது வார்டில் மட்டுமல்ல, அனைத்து வார்டுகளிலும் இதே அவல நிலை தான் உள்ளது. அதனை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

    4-வது வார்டு அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி பேசும்போது, 17 ஆண்டுகளாக தனது வார்டு பகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார். அதற்கு தலைவர் சார்பில் பதில் அளித்த மூத்த உறுப்பினர் ஷியாம்ராஜா, கடந்த காலத்தில் ராஜபாளையம் நகர்மன்ற தலைவராக பொறுப்பு வகித்தது அ.தி.மு.க. கட்சிகாரர்தான். அப்போது பொறுமை காத்துவிட்டு இப்போது வருந்துவது நியாயமல்ல. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம் வரலாற்றிவேயே முதன் முறையாக தி.மு.க. நகர் மன்றத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 42 வார்டுகளுமே எங்கள் வார்டு மக்கள்தான் என்ற உன்னதமான அடிப்படையில் தான் வளர்ச்சி திட்ட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அவர்கள் காலத்தில் செய்யவில்லை, இவர்கள் காலத்தில் செய்யவில்லை என மற்றவர்கள் மீது பழிபோட்டு பேசி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் வார்டில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வையுங்கள் என்றார். 17-வது வார்டு பகுதியில் செய்து முடிக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை தலைவர் பட்டியலிட்டு காட்டியவுடன் உறுப்பினர் மீனாட்சி அமைதியாகி ஆகிவிட்டார்.

    நகராட்சி சுகா ரக்குழு தலைவராக தேர்ந்தெடு க்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராதாகிருஷ்ண ராஜாவுக்கு நகர்மன்றம் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் திருமலைக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×