என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திருச்சுழியில் தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
    • புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி வகுப்பறைகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி அசோகன், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி, மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    திருச்சுழி சட்டமன்ற தொகுதி மக்களின் 11 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி உள்ளது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். உயர்கல்வியில் இந்த பகுதி முன்னேறுவதற்கு இந்த கல்லூரி உறுதுணையாக இருக்கும்.

    தற்போது 230 இளங்கலை படிப்பிற்கு கிட்டத்தட்ட 1139 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதை வைத்தே இந்த பகுதியில் உயர்கல்விக்கு தேவை அதிகம் என்பதை உணர முடிகிறது. அடுத்தாண்டு இந்த பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் மணிமாறன், முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி யூனியன் தலைவர் சுப்பாராஜ்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சதுரகிரியில் ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 26-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சிறுபான்மையினர்-பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் கடன் வழங்க சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது.
    • மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வாழும் சிறு பான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்ற தொழிலை விரிவுபடுத்திடவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் 'டாம்கோ' மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் 'டாம் செட்கோ' குறைந்த வட்டியில் பல திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது.

    சிறு தொழில் வியாபாரம் செய்ய தனி நபர் கடன், மகருக்கான சிறு கடன் திட்டம், ஆண்களுக்கான சிறு டன் திட்டம், கறவை மாட்டுடன், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுய தாழில் தொடங்கிட கடன் ட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கிடவும் கடன் திட்டம் உள்ளது.

    சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிர்கள் கடன்திட்டம், கல்வி கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கடன்வழங்கும் முகாம் மாவட்டத்தில் தாலுகா அளவில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

    நாளை 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பட்டோர் பொருளாதார தாலுகா அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. நாளை விருதுநகர், 11- ந்தேதி காரியாபட்டி. 12-ந் தேதி அருப்புக்கோட்டை, 13-ந் தேதி திருச்சுழி, 14-ந் தேதி சிவகாசி, 15-ந் தேதி ராஜபாளையம், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், 19-ந் தேதி சாத்தூர். 20-ந்தேதி வெம்பக்கோட்டை, 21-ந் தேதி வத்திராயிருப்பு.

    கடன் தேவைப்படும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மக்கள் கடன் தொகை பெற கடன் விண்ணப்ப படிவம், மதத்திற்கான சான்று சாதி சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல், ஓட்டுனர் உரிமம் நகல் (வாகன கடன் பெறுவோர் மட்டும்), விலை பட்டியல் அசல், திட்ட தொழிலறிக்கை, உண்மை சான்றிதழ் அசல், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ், 2புகைப்படம் (கல்விக்கடன் கோருவோர் மட்டும்) கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டுக்கு உட்பட்ட அகமது நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் 8-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 42) என்பவர் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டுக்கு உட்பட்ட அகமது நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இதில் மண்எண்ணை செல்வம் என்பவரது கடையும் அடங்கும்.

    தங்களது கடையை அகற்றியதற்கு கவுன்சிலர் பால்பாண்டி தான் காரணம் என மண்எண்ணை செல்வ மும், அவரது மகன் சங்கரும் கருதினர்.இந்த நிலையில் நேற்று பால்பாண்டி அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர் கடையை அகற்றியது தொடர்பாக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப ட்டார்.

    அப்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த தாக சங்கர் மீது கவுன்சிலர் பால்பாண்டி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    • 3 இளம்பெண்கள்-தொழிலாளி மாயமானார்
    • இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜலட்சுமி விவாகரத்து தருமாறு கணவரை வலியுறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜலட்சுமி தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருச்சுழி போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மானகசேரியை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகள் மகாலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் அனுசுயா அதே பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று அனுசுயா பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல்லை சேர்ந்த வர் பால்சாமி (43), கட்டிட தொழிலாளி. இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் பால்சாமிக்கும் அவரது மனைவி அழகுலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பால்சாமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனத்தில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, வட்ட வழங்கல் அதிகாரி செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த விஜயனிடம் விசாரணை நடத்தினர். இதில் ரேசன் அரிசியை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ரேசன் அரிசி கடத்திய புகாரின் பேரில் விஜயனை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • விநாயகர்கோவில் கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்றனர்.
    • சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர்கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி விநாயகர் பூஜை, எந்திர ஸ்தாபனம், கலச ஸ்தாபனம் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன.

    அதன்பின்னர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யோகினியர் லலிதா மகிளா சமாஜம் சுவாமிகள் கணபதி ஹோமத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கல வாத்திய நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சுதர்சன பூஜை லட்சுமி ஹோமம், தீப வழிபாடு நடைபெற்றது.

    மாலை வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மகாபூர்ண ஹூதி வழிபாட்டுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மதுரை ஆதீனம் ஞா னசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆதி வழி விடு விநாயகர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் பட்டர், கார்த்திக் சாஸ்திரிகள் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் அழங்க ப்பட்டது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர்கோவில் நிர்வாகத்தினர், சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.
    • பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும்போது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த தனியார் உணவு நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன மேலாளர் பொன்மொழியன், நிறுவனத்தின் நோக்கம்- அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின் நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைஎழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்தார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் இதற்கான ஏற்பாடை செய்திருந்தார். மேலும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துைைழப்புடன் வளாகத் தேர்வு நடந்தது. மாரீஸ்வரன் நன்றி கூறினார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளின் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கணினி அறிவியல் துறையின் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான பிரியா தனது ஆய்வு கட்டுரையான "மல்டி கோரை பயன்படுத்தி திறமையான இணையான நீள்வட்ட வளைவு குறியாக்கவியல்" பற்றிய தகவல்களை கூறினார்.

    அவர், பல மைய அமைப்பு,நீள்வட்ட வளைவு குறியாக்கவியல், இணையான மற்றும் திறமையான அல்காரிதத்தை அபைன் பாயிண்ட் உருவாக்கத்திற்காக நீள்வட்ட வளைவு குறியாக்கவியல் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் பேசினார்.

    இதில் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறைகளைச் சேர்ந்த அனைத்து உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ரேவதீஸ்வரி வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சவும்யா நன்றி கூறினார்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் மேஜைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் அருகிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் வழங்கும் விழா தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    சேத்தூரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், குடிநீர்த் தொட்டி மற்றும் மின் விளக்கு, மின் விசிறி வசதி மற்றும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் மின் விளக்கு , மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும் என்றும், கல்வி அலுவலரிடம் பேசி விரைவில் ஆண்டு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசிய எம்.எல்.ஏ., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியகளின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதன்விளைவாக மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி வளர்ச்சி பெற்று மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.

    அனைத்து துறையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான். அதற்கு முதல்வர் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பார் என்றார்.

    விழாவில் தலைமை ஆசிரியர்கள் சுந்தரராஜன், சிவகுமாரி, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் சிங்கப்புலிஅண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரிமாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
    • திருச்சுழி விவசாயிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அருப்புக்கோட்டை

    உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்தினை அதிகரிக்க சுற்று வட்டார கிராமங்களான கட்டங்குடி, சின்ன கட்டங்குடி, குறிஞ்சங்குளம், புலியூரான், செம்பட்டி, ஆலடிபட்டி மற்றும் இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மாரீஸ்வரி, தோட்டக்கலை அலுவலர் கண்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அகல்யா, முத்து மங்காள், விமல் ராஜ், கலைவாணி, சிவபிரியா, வேளாண் விற்பனை மற்றும் வணிக வரி துறை அலுவலர்கள் ரியாஸ், கோகிலா கலந்து கொண்டனர்.

    • சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் 2021-22-ம் கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் கல்வி உதவித்தொகை விவரங்கள், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் குறித்த திட்டங்கள், சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், தமிழக அரசு சிறுபான்மையின சமூக மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பின்னர் பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கங்களின் பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்து பயனாளிகளிடம் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் சிறுபான்மையின நலத்திட்டங்களால் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்த விவரத்தை கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேல் உட்பட மாவட்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க கவுரவச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் உற்பத்தியில் நிலம், நீர் மற்றும் இடுபொருட்களே அடிப்படை காரணிகளாக உள்ளன. இவற்றுள் பயிர் சாகுபடிக்கு கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

    சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் 1200 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளை ஊக்குவித்திட துணைநிலை நீர் மேலாண்மை செயல்பா டுகள் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குறு வட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்க்கு ரூ.25,000/ எண் மானியத்தில் 475 எண்களும், டீசல் பம்பு செட்டு / மின்மோட்டார் அமைப்பதற்கு ரூ.15,000/ எண் மானியத்தில் 737 எண்களும், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய், அமைப்பதற்கு ரூ.10,000/எண் மானியத்தில் 499 எண்களும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்க்கு ரூ.40,000/எண் மானியத்தில் 211 எண்களும் வழங்கப்பட உள்ளது.

    மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களுக்கு முன்னூரிமை வழங்கப்பட்டு 80 சதவீத இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, கணிணி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×