search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical course"

    • கவர்னருக்கு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
    • மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையில் காலியாக உள்ள இடங்க ளிலும் விண்ணப்பித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு அகில இந் திய அளவில் நடைபெற உள்ள 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வுக்கு பி.ஜி. நீட் நுழைவுத்தேர்வு 2023-24 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தா லும் விண்ணப்பிக்கலாம் என ஆணையை பிறப்பித் துள்ளது.

    எனவே தற்போது புதுவை மாநில அரசால் சென்டாக் கமிட்டி மூலம் நடத்தப்பட்ட 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முடிவடையும் நிலையில், 3-ம் கட்ட மற்றும் மாப்-அப் கலந்தாய்விற்கு புதுவை மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டு, சென்டாக் மூலம் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    அதேபோல், எம்.சி.சி.யால் நடத்தப்படவுள்ள 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய் வில் அகில இந்திய ஒதுக் கீட்டில் இதுவரை நிரப்பப் படாமல் காலியாக உள்ள மாணவர்கள் விரும்பி பயிலும் இருதய நோய்சார்ந்த படிப்பு, குழந்தைநல மருத்துவம், எலும்பு சம்மந்தப்பட்ட மருத்துவ படிப்பு, தோல் சிகிச்சை, நுண் கதிரியியல், ரேடியாலஜி, மன நோய், நரம்பியல் போன்ற முக்கியமான பாடப்பிரிவு களுக்கு புதுவை மாநிலத் தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டிலும், பணம் படைத்த செல்வந்தர் மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையில் காலியாக உள்ள இடங்க ளிலும் விண்ணப்பித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

    எனவே, புதுவை அரசும், புதுவை சுகா தாரத்துறையும், திருத்தப் பட்ட புதிய மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வினை சென்டாக் மூலம் நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 28ந் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்., - நர்சிங் - டி.ஜி.என்.எம்., மற்றும் டி.எம்.எல்.டி., - டி.ஆர்.டி.டி., அனஸ்டியா, தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபெடிக் டெக்னீசியன் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் பெற்றோர், மாணவர் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 16-ந் தேதி காலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    மத்திய சுகாதார அமைச்சகம் எம்.பி.பி.எஸ். இன்டர்ன்ஷிப் கட் ஆப் தேதியை ஆகஸ்ட்டு 11-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இன்று 11-ந் தேதி முதல் 13-ந் தேதி மாலை 6 மணி வரை எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் மேஜைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் அருகிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் வழங்கும் விழா தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    சேத்தூரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், குடிநீர்த் தொட்டி மற்றும் மின் விளக்கு, மின் விசிறி வசதி மற்றும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் மின் விளக்கு , மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும் என்றும், கல்வி அலுவலரிடம் பேசி விரைவில் ஆண்டு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசிய எம்.எல்.ஏ., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியகளின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதன்விளைவாக மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி வளர்ச்சி பெற்று மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.

    அனைத்து துறையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான். அதற்கு முதல்வர் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பார் என்றார்.

    விழாவில் தலைமை ஆசிரியர்கள் சுந்தரராஜன், சிவகுமாரி, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் சிங்கப்புலிஅண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரிமாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். தமிழக கல்வித்திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார்படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். ‘நீட்’ தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவு.

    அது மட்டுமல்ல முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம் பெற முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. ‘நீட்’ தேர்வு முறையில் நடைபெற்ற குளறுபடிகளே இதற்கு காரணம்.

    தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரையுள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். மேலும் தமிழக கல்வித் திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார் படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×