search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் டாக்டர்களுக்கு குறைந்தபட்ச பணி காலம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்
    X

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் டாக்டர்களுக்கு குறைந்தபட்ச பணி காலம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    Next Story
    ×