என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
    • வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், பெரிய பேராலி சாலையில் உள்ள குலோபல் பாலிபேக்ஸில் வாக்காளரது விபரங்களுடன் ஆதார் எண்ணைப் பெற்று இணைக்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிநடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை https://www.nvsp.in/என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

    மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்-6பி –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண் பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்ப–டமாட்டாது.

    ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6பி–ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.
    • ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழர்களின் வாழ்வு, விடுதலை, பண்பாடு போன்றவை இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வடக்கில் இருந்து எழுதப்பட்ட வரலாறு காரணம் ஆகும். இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள தியாகிகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இடம்பெற வில்லை. இவைகளை உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

    தமிழர்களின் தொன்மை, வாழ்வு, பண்பாடு, கலாசாரம் போன்றவைகளை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மத்தியில் ஆலோசனை கேட்கும் அளவிற்கு நம்மிடம் பண்பாடு உள்ளது. அனைவருக்கும் வழிகாட்டி தமிழகம் தான். நாட்டின் சரித்திரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

    நமது தியாகம், வரலாறு, பண்பாடு போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது.

    எந்த காலத்திலும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தி.மு.க. மற்றும் திராவிட கருத்துக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தால் வடக்கில் இருந்து யாரும் இங்கே கால் வைக்க முடியாது. இந்த உணர்வுடன் பழக வேண்டும். தமிழர்கள் வலிமையுடன் இருக்க நினைக்கும் ஆட்சி தி.மு.க.. இதற்கு நீங்கள் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சாத்தூர் ரகுநாதன், மணப்பாறை அப்துல் சமது, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் முன்னாள் எம்.பி. லிங்கம், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணமுருகன், ஞான்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • செல்வகுமாரும் சகுந்தலாவும் மாணவி குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மாணவியின் தாயார் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான செல்வகுமார் என்ற வாலிபர் மாணவி குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை வைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து மாணவியின் தாயார் செல்வகுமாரின் மனைவி சகுந்தலாவை சந்தித்து கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வகுமாரும் சகுந்தலாவும் மாணவி குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த மாணவியின் தாயார் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள உழுத்திமலையை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் கற்பகமும், சிவகங்கை மேலபசலையை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கற்பகம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.

    அங்கு மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த அவரது பெற்றோர் பாக்கியம்-காமாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர்.

    • கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (22). இவரது சகோதரி கவிதா (18). சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் கருப்பசாமி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் திருமணமான ராமபாண்டி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி சம்பத்தன்று தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபேராளியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பெத்தக்காள் (38). இவர் மனநிலை பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மகளுடன் சென்ற பெத்தக்காள் மட்டும் திடீரென மாயமானார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருேக உள்ள ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பாலமுருகன் (18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் ஐ.டிபி.டி.காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகள் ஆர்த்தி (20). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் மாயமானது தொடர்பாக திருமணமான தினேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைதானார்.
    • ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையம் அருகில் ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை கஞ்சா விற்றது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

    • சுயதொழில் பயிற்சி வகுப்பு நடந்தது.
    • திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ரோட்டரி கிளப் ஆப் மல்லி, அரைஸ் டிரஸ்ட் சார்பில் பெண்களுக் கான சுயதொழில் பயிற்சி வகுப்பு மல்லியில் நடந்தது. ரோட்டரி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். டிரஸ்ட் தலைவர்கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார்.

    ரோட்டரி உதவி ஆளுநர் முத்துராமலிங்ககுமார், முன்னாள் உதவி ஆளுநர் ராஜேஷ் கண்ணன், ரோட்டரி நிர்வாகி ஜெயராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர். ரோட்டரி செயலர் ஜாய்ஸ்மேரி நன்றி கூறினார்.

    • சிவகாசி தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி மாநகரத்துக்கான தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    1-வது பகுதி அவைத்தலைவராக நாகேந்திரன், செயலாளராக செல்வம், பொருளாளராக சீனிவாச பெருமாள், 2-வது பகுதி அவைத்தலைவராக ராஜய்யா, செயலாளராக கருணாநிதி பாண்டியன், பொருளாளராக அண்ணாதுரை தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.

    3-வது பகுதி அவைத்தலைவர் சிவனேசன், செயலாளர் மாரீஸ்வரன், பொருளாளர் சின்னத்துரை, 4-வது பகுதி அவைத்தலைவராக மாரியப்பன், செயலாளராக அப்துல் முத்தலீப், பொருளாளராக சிவராம்குமார், 5-வது பகுதி அவைத்தலைவராக செல்வராஜ், செயலாளராக காளீராஜன், பொருளாளராக கார்த்திஸ்வரன், 6-வது பகுதி அவைத்தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஞானசேகரன், பொரு ளாளராக விஜ யகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என்.புதூர் கிராமம், கீழராஜகுலராமன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இதன் அருகே மேல ராஜ குலராமன் பஞ்சாயத்தும் உள்ளது.

    40 ஆண்டுகளாக கீழராஜகுலராமன் கிராமத்திற்கு மேல ராஜ–குலராமன் பஞ்சாயத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் 60 குடும்பத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு 4 மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

    கடந்த 25 நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வழங்காததால் பொது மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை 8 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருவாய் துறையினர் எழுதி கொடுத்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • ரூ.5.45 கோடியில் சாலை பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தளவாய்புரம் முதல் இனாம்கோவில்பட்டி சாலையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுடன் சேர்த்து 4 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    இதில் பொறியாளர் முத்துமுனிகுமாரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 22-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வருகிற 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தொடர்புக்கு 04562-293613.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 18). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் கார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜ பாளையம் வந்த ஈஸ்வரன் திடீரென விஷம் குடித்து விட்டு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் சார்லஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து ஈஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஈஸ்வரனின் பெற்றோர் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரனின் தாய் தங்கம்மாள் புகார் ெசய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×