என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
- இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளரையும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளரை நான் நேரில் சந்தித்து ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி குறைப்பது தொடர்பாக வலியுறுத்தினேன்.
அதற்கு அவர் இன்னும் சில தினங்களில் ராஜபா ளையம் நகராட்சியில் சொத்து வரி குறைக்க அரசாணை வெளியிடப்படும் என்றார். ஆகவே அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் முயற்சியால் வருகிற ஏப்ரல் ராஜபாளையம் ெரயில்வே மேம்பாலம் எவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளதோ, எவ்வாறு குடிநீர் கட்டணம் குறைக்கப்பட்டதோ, அதேபோல் இன்னும் சில தினங்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி குறைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டையில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது.
- வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது. ஏப்ரல் 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி மாத கடைசி வெள்ளியன்று நகரின் முக்கிய பகுதியில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளோட்ட நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்டி ராஜரத்தினம், உதவிச் செயலாளர் முத்துசாமி, சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், எஸ்.பி.கே. ஆண்கள் பள்ளி செயலாளர் மணி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் ரூ. 69 ஆயிரம் மதிப்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
- இளங்கலை வணிகவியல் துறை முன்னாள் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் சாட்சியாபுரம் எல்வின் நிலைய மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் கூறினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக 130 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் இளங்கலை வணிகவியல் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி கலையரங்கத்தில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. நடப்பாண்டு இளங்கலை வணிகவியல் துறை மற்றும் இளங்கலை வணிகவியல் துறை முன்னாள் மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் ரூ.69 ஆயிரத்து 500 மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள், அரிசி, கோதுமை, இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கினர்.
- விருதுநகர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மதுராபுரி என்ற கம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவரும், இவரது மனைவியும் நூற்பாலைகளில் வேலை செய்கின்றனர். சம்பவத்தன்று செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர் வேலு(வயது64). இவர் சம்பவத்தன்று அடகு நகைகளை மீட்க ரூ.70 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். ஆனால் அடுத்த மாதம் தான் நகையை மீட்க முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பணத்துடன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொழிலாளி-வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி(வயது50). பெயிண்டரான இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியடைந்த முனியாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சின்னராஜ்(வயது28). இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் சின்னராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஜே.சி.பி. வாகனம் எரிந்து சேதம்
- கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இவரது ஜே.சி.பி. வாகனத்தின் ஆப்பரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள மூக்கரநத்தம் பகுதியில் உள்ள செந்தட்டிக் காளை என்பவருக்கு சொந்தமான வயல் காட்டில் ஜே.சி.பி. உதவியுடன் முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு மேட்டில் சென்றபோது ஜே.சி.பி. வாகனம் பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக கருப்பசாமி சென்றார்.
அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் தீ பரவி ஜே.சி.பி. வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜே.சி.பி. வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஜே.சி.பி. வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
- இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள். இவரது மகன் செல்வகுமார்(வயது33). இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களை விடுமுறை நாட்களில் செல்வகுமார் பார்க்க செல்வதுண்டு. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு செல்வ குமார் மோட்டார் சைக்கி ளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மது குடித்திருந்த தாக தெரிகிறது. சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது செல்வகுமார் சாலை யோரத்தில் மோ ட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரது தந்தை நாராயண பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு மூலம் செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
- ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி விற்பனையை தொடங்கி வைத்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.
இதன் மூலம் வருகின்ற நிதி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு வத்திராயிருப்பு அலையன்ஸ் சங்கங்கள் சார்பில் 650 புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமை வகித்தார். அலையன்ஸ் சங்க மாவட்ட துணை ஆளுநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு வட்டார அலையன்ஸ் சங்கங்களின் சார்பில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் மாவட்ட நீதிபதி புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் சிறையில் வருகைப்பதிவு, உணவு மற்றும் விசாரணை சிறை கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த கிறிஸ்டோபர் தேவையானவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார். இந்த விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) செல்வன் ஜேசுராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் அன்னக்கொடி, ஜான்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நித்தியானந்தன், எழுத்தாளர் தமிழ்பித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்ன மருதுபாண்டியன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.
- பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது.
- தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெறும். குறிப்பாக விழா வையொட்டி நடைபெறும் பூக்குழி நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10- ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி இரவு பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன்படி 3-ம் நாள் விழாவில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலத்திலும், 6-ம் நாள் விழாவில் கிருஷ்ணர் அலங்காரத்திலும் பெரிய மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.
நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்கரத்தில் எழுந்தருளினார். பின்னர் பக்தி கோஷங்கள் முழங்க பெண்கள் உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
- விருதுநகர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நகராட்சி, வி.எம்.சி. காலனியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடத்தையும், புல்லலக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2.0 மூலம் ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் வகையில் ரூ.43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருள் மீட்டு வசதி கட்டிடத்தையும், விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் மின் மயானத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் மணி, உதவி பொறியாளர் பாலாஜி மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
- இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ராம்குமார் (வயது23). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் அருப்புக்கோ ட்டையில் உள்ள நெல்பேட்டையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தான் பணிபுரிந்த இடத்தில் ராம்குமார் குப்பைகளை அகற்ற பரண் மேல் ஏறியுள்ளார். அப்போது அங்குள்ள மின்வயரை தொட்டதில் ராம்குமார் மின்சாரம் தாக்கி மயங்கினார்.
குப்பைகளை அகற்ற மேலே ஏறியவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சென்று பார்த்த போது ராம்குமாரை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






