என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் அருகே நின்றிருந்த பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் திருச்செந்தூர் செல்வதற்காக கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்றார். அந்த பேருந்து கல்குறிச்சி அருகே சென்றபோது பஸ்சின் முன் பக்க டயர் வெடித்தது.
இதனால் பஸ்சை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் பண்டாரம் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருப்புக்கோட்டை பணிமனைக்கு தகவல் கொடுக்க சென்றார். பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சாலையோரத்திலும், பஸ்சின் முன்னாலும் நின்றிருந்தனர். பஸ்சின் கண்டக்டர் ஏகாம்பரம் பழுதடைந்த டயரை கழட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நின்றிருந்த பஸ்சின் பின் பக்கத்தில் மோதியது. இதில் பஸ் முன் பக்கம் நகர்ந்து நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் முருகேசன், பரமத்திவேலூரை சேர்ந்த லோகநாதன், போத்தனூர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து முருகேசன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விளாத்திக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்கு அளவிடும் பணி நடந்து வருகிறது.
- புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிந்தது. 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அளவீடு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இங்கு ஒரு ஏக்கரில் தோண்டப்பட்ட 16 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சங்கு வளையல்கள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, மனித பொம்மை ஆகியவை கிடைத்தது.
மேலும் திமில் உடைய காளையின் சிற்பம், பெண் சிற்பம், குழந்தைகள் விளையாடும் பொம்மை, வணிக முத்திரை, செப்பு நாணயம், விலங்குகளின் எலும்புகள், கொம்பு, கோடாரி கருவிகள், தங்க அணிகலன் என 3 ஆயிரத்து 254 அரிய பொருட்கள் கிடைத்தன. இரண்டாம் கட்ட அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தேர்வு செய்யப்பட்ட 3 ஏக்கர் இடத்தை தொல்லியல் துறையினர், வருவாய் துறையினருடன் அளவீடு செய்தனர். புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சுத்தம் செய்து, அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. தொல்லியல் துறை அமைச்சர், ஆணையர் உத்தரவுக்கு பின் இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும் என்றார்.
- பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார்.
ராஜபாளையம்
ஜெ.சி.ஜ. ராஜபாளையம் கேசா டி மிர் மற்றும் புதுயுகத்தின் கேசா இளம்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகரில் நடத்தியது. கேசா இளம்படையின் துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எல்.ஜ.சி. காப்பீடு ஆலோசகர் திருமுருகன், திருவள்ளுவர் நகர மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ், 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் ராஜா, யூனியன் வைஸ் சேர்மன் துரைகற்பகராஜ் ஆகியோர் பேசினர்.
மாணவி சிவதர்ஷினி வரவேற்றார். பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற தலைப்பில் மாணவன் நரேஷ், பிளாஸ்டிக்கை குறைப்போம் என்ற தலைப்பில் சிவதர்ஷினியும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம் என்ற தலைப்பில், காவ்ய தர்ஷினியும் பேசினர். கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா வாழ்த்துரை வழங்கினார். மாணவி ஹாஜிரா பர்ஹின் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெ.சி.ஜ ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் பானுபிரியா, மாலா, அழகுராஜா, சத்யா ஆகியோர் பள்ளியின் தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணாதேவி வழிகாட்டுதலின் படி செய்திருந்தனர்.
- 57 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர்கள் வழங்கினர்.
- முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 59 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினர். பின்னர் அமைச்சர்கள் பேசிய தாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களது முன்னேற் றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி மாற்றுத்தி றனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை, ெரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- இதில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ராஷியாம். ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும். சொத்து வரி குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.
குடிநீர் இணைப்பு கட்டணம், கூடுதல் வரி அடுத்த ஆண்டில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
- 6 பேர் காயமடைந்தனர் மற்றும் 28 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பிசிண்டி கிராமத்தில் நேற்று குறிப்பிட்ட சமுதாயத்தின் ஊர் கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது.
இருதரப்பை சேர்ந்தவர்க ளும் ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் அந்த ஊரைச்சேர்ந்த காமராஜ் மனைவி ஜெயக்கொடி, அவரது மகன் சிவா மற்றும் ராஜா(வயது41), மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜ சுலோக்சனா உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ரகுபதி, ராஜ்குமார், செல்வராஜ், ராமச்சந்திரன், பாலமுருகன், எம்.ஜி.ஆர். என்ற சீனி வாசன் உள்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரு தரப்பினர் மோதலால் பிசிண்டி கிரா மத்தில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் அந்தப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட னர்.
- ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
- எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் தலைமை பதவியை பிடிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வம் கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஆதரவு அதிகரித்து இருந்ததால் அவரது கை ஓங்கியது.
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் ஒரு விதமான பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் இந்த மசோதாவை வரவேற்பதாக தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் "கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கழக துரோகி ஓபிஎஸ் சட்டமன்றத்தில் கழகத்தின் பெயரை பயன் படுத்தி குளிர்காய நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் இன்று காலை மாம்பழம் மற்றும் தேங்காய் விவசாயிகளின் நலன்கருதி சிட்கோ மூலம் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ராஜபாளையம்- தென்காசி ரோடு இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை முன்பிருந்து சின்மயா பள்ளி வழியாக 3 கி.மீட்டர் தொலைவில் வருவாய் கிராமம் அயன் கொல்லங்கொண்டான்-II -ல் 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.
இதில் 2 கி.மீ பாதையாகவும், 1 கி.மீ பட்டா நிலமாகவும் உள்ளது. இந்த பட்டா நில உரிமை யாளர்களிடம் எம்.எல்.ஏ. பேசி ராஜபாளையத்திற்கு பெயர்போன சப்பட்டை மாங்காய்க்கு தொழிற்பேட்டை அமைப்பதன் முக்கியத்து வத்தை கூறினார். இதையடுத்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்க நில உரிமையாளர் சம்மதம் தெரிவித்தனர்.பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை அமைக்க சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதன் விளைவாக இடம் கண்டறியும் பணி தொடங்கி தற்போது இடம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்துதல் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன்.
மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைந்தால் இந்த பகுதியை சுற்றியுள்ள பல்லாயிரக்கனக்கான மாம்பழச்சாகுபடி, தேங்காய் சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார்.
இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான நடமாடும் ரேசன்கடையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் நியாய விலை தொடங்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
மேலும் 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ12.40லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ3.625லட்சம் மதிப்பிலான பால் கறவை மாட்டு கடன் உதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ6.18 லட்சம் மதிப்பிலான பயிர் கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.22.205 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 691 முழு நேர நியாயவிலை கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 31 முழுநேர கடைகளும், 3 பகுதி நேர கடைகளும் மற்றும் மகளிர் நிறுவனங்கள் மூலம் 4 முழு நேர கடைகளும் என மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 446 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் 64 நடமாடும் நியாயவிலை கடைகளும் செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைத்து தரக்கோரியும் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறையின் மூலம் 65-வது நடமாடும் நியாய விலைக்கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.
- விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் சங்கங்கள் 2022-23 கல்வியாண்டில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வியிலும், கல்வி சார்ந்த பிற தகுதிகளையும் வளர்த்து கொண்டு சிறந்த விளங்க வேண்டும். போட்டிகளில் பரிசு பெறுவதைக் காட்டிலும் போட்டிகளில் கலந்து கொள்வதே சிறப்பானது. அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் தயங்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.
துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கணிதத்துறைத் தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார். விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
- ராஜபாளையம் பஸ் நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
- இதில் நகரசபை தலைவர் பங்கேற்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் டவுன் பஸ் நிலையமான பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்காக இடிக்கப்பட்டு மறு நிர்மாணம் செய்யப்படுகிறது. தற்பொழுது முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் பூமிபூஜையை நடத்தி வைத்தார்.
ஆணையாளர் பார்த்தசாரதி, துணைதலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர், இளநிலை பொறியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்று நகரசபை தலைவர் வலியுறுத்தினார்.
- 19,122 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
- மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2022-23 கொள்முதல் பருவத்தில், இதுவரை 19 ஆயிரத்து122 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான தொகை ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,537 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர், இலவச அலைபேசி எண். 1077 துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் விருதுநகர் தொலைபேசி எண். 04562-252607 ஆகிய எண்ணிற்கு புகார் செய்யலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.






