search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அருப்புக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்
    X

    அருப்புக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்

    • ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
    • எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் தலைமை பதவியை பிடிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வம் கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஆதரவு அதிகரித்து இருந்ததால் அவரது கை ஓங்கியது.

    இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் ஒரு விதமான பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் இந்த மசோதாவை வரவேற்பதாக தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    அதில் "கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கழக துரோகி ஓபிஎஸ் சட்டமன்றத்தில் கழகத்தின் பெயரை பயன் படுத்தி குளிர்காய நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×