மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ராம்குமார் (வயது23). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் அருப்புக்கோ ட்டையில் உள்ள நெல்பேட்டையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தான் பணிபுரிந்த இடத்தில் ராம்குமார் குப்பைகளை அகற்ற பரண் மேல் ஏறியுள்ளார். அப்போது அங்குள்ள மின்வயரை தொட்டதில் ராம்குமார் மின்சாரம் தாக்கி மயங்கினார்.

குப்பைகளை அகற்ற மேலே ஏறியவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சென்று பார்த்த போது ராம்குமாரை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com