என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசினர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலைய ரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் நவாஸ்கனி, தனுஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களை விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கு கின்றனர்.

    விருதுநகர் மாவட்டமும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    • வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகில் உள்ள மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 63). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதில் காயமடைந்த பெருமாள்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள் சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது.
    • சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஐ.என்.டி. யு.சி. நகரில் சிங்கத்து இருளப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி மாரியப்பன் பூஜை களை முடித்துவிட்டு இரவு கோவில் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் பூஜைக்காக கோவில் கதவை திறப்பதற்காக வந்தார்.

    அப்போது கோவில் கதவு உடைத்து அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தன்னார்வ பொறுப்பு தக்கார் ராஜா விற்கு, மாரியப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே பள்ளிகள், மருத்துவ மனை உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அங்குள்ள பொது இடங்களில் மது குடிப்பதும், சில நேரங்களில் போதையில் தகராறில் ஈடுபடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்தப்பகுதிக்கு பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி 31-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஜெயகவிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து கூறினார்.
    • விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுகந்தி 2023-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளதாவது:-

    மருத்துவசேவையில் முழு அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றியமைக்காக விருது பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். குறிப்பாக பழங்குடியின தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்க செய்து, இறப்பு இல்லாத நிலைக்கு சாதனை புரிந்து பெருமை சேர்த்து உள்ளீர்கள். தங்கள் சேவை இன்னும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர் மீது தாக்குதல் நடந்தது.
    • டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமாா(வயது33). இவரது மனைவி வைரமுத்து செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் சாப்பிட வந்திருந்தார். இதைப்பார்த்த வைரமுத்து செல்வி மற்றும் அவரது உறவினர்கள் ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த வைரமுத்துசெல்வி உள்பட 3 பேர் ஜெயக்குமாரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது32). கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கலைசங்கரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று மாரீஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கலைசங்கர் மனைவியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
    • குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிவகாசி-மடத்துப்பட்டி சாலையில், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சுமார் 1150 பண்டல்களில் பட்டாசுகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரிதரன் மற்றும் குடோன் பணியாளர் மண்குண்டான் பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது தந்தை கூலித் தொழிலாளி. தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி முடித்துவிட்டு மாலையில் சிவகாசியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மாணவி பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது தாயார் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் தவறாக நடக்க முயன்றதோடு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனாலும் தந்தையின் பிடியில் இருந்து மாணவி தப்பி வீட்டிற்கு வெளியே வந்தார். சிறிது நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம், தந்தை தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதை கண்ணீருடன் மாணவி தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கணவரை கண்டித்துள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கைது செய்தனர்.

    • பஸ் உரிமையாளரிடம் ரூ.5½லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது54). தனியார் பஸ் உரிமையாளர். இவரிடம் திருப்பதி என்பவர் காசாளராக 2 ஆண்டுகள் வேலை பார்த்தார்.

    அப்போது டோல்கேட் கட்டணம் பஸ் உரிமையாளர் சங்க கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக கொடுத்த ரூ.5½லட்சம் பணத்தை திருப்பதி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மகாலிங்கத்திற்கு தெரியவந்தது. அவர் திருப்பதியிடம் விசாரித்த போது அவர் கடந்த மார்ச் மாதத்தில் வேலையை விட்டு சென்றுவிட்டார்.

    மேலும் மோசடி செய்த பணம் குறித்து எதுவும் கூறாமல் இருந்தார். இதை தொடர்ந்து அருப்புக் கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள துரைச்சாமி புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது58). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் அருளப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகளிர் சுயஉதவிக்குழு செயல்பாட்டை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து இத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சந்தித்து கலந்துரை யாடினார். அதன்படி சாத்தூர் நகராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிற்றுண்டி, அமையவுள்ள இடத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் ஸ்வர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஸ்கர் யோஜனா மற்றும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தும் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று சேவு, முறுக்கு உள்ளிட்ட திண் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்ட வைகள் குறித்து கேட்டறிந்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானியம், பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    சாத்தூரில் உள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலை கடைகளிலும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    ×